ஞாயிறு, ஜூலை 31, 2016

வெட்கம்சட்டையில் போடும்பட்டன் எண்ணிக்கை குறையும்போதுஆண்"பொறுக்கி" என்ற பெயரையும்,
பெண்"மாடர்ன் கேர்ள்" என்ற பெயரையும்பெறுகிறார்கள்.....
வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.
வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று 
வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப்படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் .அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக
 நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.
வெட்கப்படும் போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம் சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.
வெட்கப்படுவது பல காரணங்களால் ஏற்படலாம்.
காதல் சூழ்நிலைகளில் தொடர்புடையதாக இருக்கலாம் .வெட்கப்படும் போதுதான் பெண்களின் தோற்றம் காட்சிக்கு அழகாக இருக்கின்றது . வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த பாதுகாப்பு.வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும்.
துணிவு இல்லாத போதும் வெட்கம் வர கால் நடுங்க உடலில் ஒரு மாற்றம் வரும்.பல பெண்கள் நிறைந்த கூட்டதில் தனியே ஒரு ஆண் நடந்து செல்லும் போது பெண்கள் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற நினைப்புடம் கூச்சம் வந்து வெட்கம் வரலாம். இதே நிலை பல ஆண்கள் நிறைந்த கூட்டதில் தனியே ஒரு பெண் கடந்து செல்லும்போதும் ஏற்படும்.
மேடையில் பேசி பழக்கம் இல்லாதவருக்கும் இந்நிலை ஏற்படும். இந்த வெட்க நிலை இயல்பானது அதில் தவறுமில்லை. ஆனால் தவறான காரியங்களில் ஈடுபடுவோர் அந்த கீழ்மையான செயலுக்கு வெட்கப் படாமல் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபடுவதுதான் வேதனையானது. முதல் முறை அந்த செயல் செய்ய வெட்கப்பட்டோர் பின்பு அடுத்த முறை செய்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். இவர்களை மக்கள் வெட்கம் கெட்டோர் என்று சொல்வதனை நாம் அறிவோம்.
'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி) மதினாவாசியான ஒரு நபித்தோழர், தன் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவதைக் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், அவரைக் கண்டிக்காதீர்கள் நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானின் (நம்பிக்கையில்) ஒரு பகுதி என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
பெண்களை கண்டால் பார்வையைத் தாழ்த்து ஆனால் வெட்கம் வேண்டாம்.
பெண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்பைப் போடுகிறது.
1. பிற ஆடவரைக் கண்டால், பார்வையைத் தாழ்த்த வேண்டும்
2. ஆடைகளில் ஒழுங்கைப் பேண வேண்டும்
3. அந்நிய ஆண்களிடம் பேச்சில் நளினம் காட்டக் கூடாது
4. அந்நிய ஆணுடன் தனிமையில் இருக்கக் கூடாது
வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு உட்பட்ட செயல். தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம் உன்னிடம் எதோ குறை உள்ளதாக என்று எண்ணி உன்னையே நீ தாழ்த்திகொள்ளாதே! உன்னிடம் குறை உள்ளதாக இத்தனை நாள் நீ எண்ணி இருந்தால் அதற்காக வெட்கப்படு. உன்னை காட்டிலும் கீழ் உள்ளவரை நினைத்துப் பார் . உடல் மாற்றம் ஏற்படுவது இயற்கை. தலை முடியில் நரை விழுந்துவிட்டதே! கட்டையான உயரத்தில் அதிலும் குறிப்பாக கருப்பாக உள்ளோமே என்பது உன்னை தாழ்வாக மதிப்பதால் வரும் வினைதான். சுவையும், ரசிக்கும் தன்மையும் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது . வேண்டாம் இந்த மனக் கோளாறு . நம்மிடம் எல்லாம் உள்ளது இதனைக் கொண்டு எதனையும் செய்ய இயலும் என்ற உயர்ந்த நோக்கினை உன்னிடம் பொருந்திக்கொள் .வாழ்வது ஒரு முறை . வாழ்ந்து காட்டு. நல்லதை நாடு. வாழு. வாழ வழி விடு . இது போராடும் உலகம் . போராடும் பொழுது உனது உள் மனதில் உன் வெற்றிதான் உனக்கு முக்கியம். போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்களுக்கே வெற்றி . முதல் வெற்றி அடுத்த வெற்றிக்கு ஊன்று கோல். பொருந்திகொள்ளும் வாழ்வே வாழ்வின் வெற்றியின் திறவுகோல் . ஒதுங்காதே ஒன்றிவிடு . நாம் நினைப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை வை . உன்னைக் காட்டிலும் தாழ்ந்தவரை எண்ணி அமைதி அடை. உன்னை விட உயர்ந்தவரைக் கண்டு நம்மாலும் அவ்வாறு வர முடியும் என்ற எண்ணத்தில் வேகமாக விவேகமாக, காலம் தாழ்த்தாமல் செயல்படு .
புகழ் வந்த பெரியவரைக் கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது உனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும் அவருக்கு கிடைத்த புகழுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும் . நீ ஒதுங்காதே.
இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் ஏன் வெட்கப்படவண்டும் !
முயற்சி திருவினையாக்கும்.கடமையினை செய், மற்றதனை இறைவனிடம் விட்டு விடு. சுலபமாக வந்தது சுலபமாக போய்விடும் .கடின உழைப்பினால் வந்தது தங்கும்,உழைப்பின்அருமையினை,பலத்தினைஅறிந்ததால் அதனை இழக்க விட மாட்டாய் . வாழ்வே நம்பிக்கையின் அடிப்படை.
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
வெட்கம்
– கவிஞர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்.