இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய பார்வையில்வர்தா புயல்...

16.12.2016   மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராக வேண்டும். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என அல்லாஹ். எச்சரித்துள்ளான்.அவற்றை உணர்ந்துக் கொண்டே மனிதன் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான். சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் மனிதஇனம் கலங்கிப்போயிருப்பதை காண்கின்றோம். மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் என்னமுடியாது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னையும், தன் ஆற்றலையும், தன் சிந்தனையையும் மனிதனுக்கு உணர்த்திட பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான் . ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெ