வெள்ளி, டிசம்பர் 29, 2017

”தலாக்” – விவாகரத்துச் சட்டம் ஓர் விளக்கம்.தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – விவாகாரத்தைப் பயன்படுத்தியேயாக வேண்டும் என இஸ்லாம், முஸ்லிம்களை வற்புறுத்துவது போல் – எங்காவது நடக்கும் தலாக் நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, ”பெண்னின கொடுமை” என்று மொத்த பழியையும் இஸ்லாத்தை நோக்கி வீசப்படுகிறது.
”அல்லாஹ் அனுமதித்தவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்” (நபிமொழி) என்று வேண்டா வெறுப்பிலேயே ”தலாக்கை” இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. தலாக் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கு முன், திருமணப் பந்தம் பற்றி இஸ்லாம் கூறுவதை அறிந்த கொள்வோம்.
வாழ்க்கை ஒப்பந்தம்.
இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்கவே முடியாத பந்தமாகக் கருதவில்லை – வாழ்க்கை ஒப்பந்தமாகவேக் கருதுகிறது.
திருக்குர்ஆனில்..
وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا
. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21)
ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இணைந்து கொள்ள சம்மதித்து, உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்வதையே இஸ்லாம் திருமணம் என்கிறது – இஸ்லாமியத் திருமணத்தில் சடங்கு, சம்பிரதாயம் எதுவுமில்லை (அப்படியிருந்தால் அது முஸ்லிம்களாக சேர்த்துக் கொண்டது) மணமகன் – மணமகள் இவர்கள் தவிர இரு சாட்சிகள் தேவை. வாழ்க்கையில் இணைய சம்மதிக்கிறோம் என மணமக்கள் கையொப்பமிட்டு, இதற்கு சாட்சியாக இருவர் கையொப்பமிட்டால் திருமணம் முடிந்தது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு மணமகளின் மனப்பூர்வமான சம்மதம் மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. திருக்குர்ஆனில்..  
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّـهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. 4:19.
மணமகளின் சம்மதம் பெறாமல் நடந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.
மணமக்கள் இருவரும் விரும்பி -கணவன், மனைவியாக சேர்ந்து வாழ ஒப்புதலளித்து, ஒப்பந்தம் செய்து கொள்வதே இஸ்லாமியத் திருமணம். ஒப்பந்தம் செய்து கொள்ளும் எதுவும், ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களால் எந்த சமயத்திலும் அதிலிருந்து விலகிக் கொள்ளவும் உரிமையுண்டு – திருமணப்பந்தத்திலிருந்து விலகி – விவாகரத்துப் பெற்றுக் கொள்வதில் கணவன், மனைவி இருவருக்கும் சமவுரிமையுண்டு என்பதையும் விளங்கலாம்.
திருக்குர்ஆனில்..
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّـهُ عَزِيزٌ حَكِيم
”கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” 2:228
இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கப்பட்டது போன்று – பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இனி தலாக் பற்றிப் பார்ப்போம்.
ü  தலாக் ஓர் விளக்கம்.
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல்’ ‘கட்டவிழ்த்து விடுதல்’ என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன..
தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம் – தலாக் பற்றித் திருக்குர்ஆனில்..
وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّـهَ سَمِيعٌ عَلِيمٌ
அவர்கள் திருமணப் பிரிவினையை (விவாகரத்தின் மூலம்) உறுதிப் படுத்திக் கொண்டால் நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் நன்கறிபவன். 2:227
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّـهُ فِي أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا ۚ وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ
தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல்லிணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. 2:228
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّـهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّـهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّـهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّـهِ فَأُولَـٰئِكَ هُمُ الظَّالِمُونَ
 (இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம். 2:229
முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا

”கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும். 65:4 
முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1. கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை உறுதி செய்வது. இந்த நோக்கம் முதலிரண்டு தலாக்கிற்கு மட்டுமே பொருந்தும்.
மூன்றாவது முறையாகத் தலாக் சொன்னால் மனைவி (இத்தா) காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மூன்றாவது முறை தலாக் சொல்லிய கணவன் – முதலிரண்டு முறை தலாக் சொல்லி மீண்டும் சேர்ந்து வாழ்ந்தது போல் சேர விரும்பினாலும் இதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இவன் தலாக்கை – விவாகரத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டு மூன்று சந்தர்ப்பங்களையும் தன் வெறுப்பிற்காகப் பயன்படுத்தி – பாழாக்கி விட்டதால் மூன்றாவது முறை தலாக் சொன்னவுடன் விவாகரத்து உறுதியாகிவிடும். அதன் பிறகு உள்ள நிபந்தனையை திருக்குர்ஆன் விவரிக்கிறது.
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّـهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّـهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான். 2:230
மூன்றாவது முறையாக தலாக்கை பயன்படுத்தியவன் மீண்டும் தன் மனைவியோடு சேர்ந்து வாழ நினைத்தாலும் அது சாத்தியமில்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி, வெறொரு கணவனை அவள் திருமணம் செய்து அவனும் அவளை தலாக் சொல்லி பிரிந்த பிறகே முதல் கணவன் அவளை மீண்டும் மணந்து கொள்வது சாத்தியமாகும்.
முத்தலாக் 
இங்கே தலாக் பற்றி நிலவும் தவறானக் கருத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முத்தலாக் என்றோ, தலாக், தலாக், தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி விட்டான் – அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டாள் என்பது தவறானக் கருத்தாகும்.
மூன்று தடவை என்பதை – மூன்று வேளையாகவே அறிவாளி புரிந்து கொள்வான். சிறு உதாரணம்:- நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் மூன்று வேளை மருந்தை காலை, பகல், இரவு என்று மூன்று நேரங்களில் சாப்பிடும்படிக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மூன்று வேளை மருந்துகளையும் ஒரு நேரத்தில் சாப்பிட்டவன் மூவேளை மருந்தையும் ஒழுங்காகச் சாப்பிட்டான் என்பதாகாது.
கடுமையான வெறுப்புற்று நிதானம் தவறியே தலாக் கூறுகிறான். இனி மனைவியின் அவசியம் தேவையில்லை என்ற உச்சக்கட்ட கோபத்திற்கு தள்ளப்பட்டவன் வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்களே தலாக். வாழ்க்கையில் அவனுக்கு வழங்கப்பட்ட இம்மூன்று தலாக் வாய்ப்புகளில் முதல் தலாக்கிலேயே கடுங்கோபம் கொண்டு ஆயிரம் தலாக் என்று கூறினாலும் – இங்கு செயலால் அவன் பயன்படுத்தியிருப்பது ஒரு சந்தர்ப்பத்தைத் தான். என்பதை அறிவுடையோர் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் இது பற்றிய நபிமொழிகளையும் அறிந்து கொள்வோம்.
ü  நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர்(ரலி) அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)
ü  ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்)
ü  ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் கோபம் அடைந்து, நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள்.(நஸயீ)
ஒருவன் ஒரே நேரத்தில் முத்தலாக் என்றோ, அல்லது தலாக், தலாக், தலாக் என்றோ சொன்னாலும் அது ஒரு தலாக்காகவே கணக்கிடப்படும் என்று நபிவழி சான்றுகளிலிருந்து விளங்கலாம். ஒரு முஸ்லிம் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தினால் – அது பயன்படுத்தியவனின் அறிவின்மையைக் காட்டும். அதை இஸ்லாத்தை நோக்கி திருப்புவது அறிவுடைமையாகாது.

முஸ்லிம்களும் – முஸ்லிமல்லாதோருக்கும் இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தலாக் சட்டத்தை விமர்சிக்கும் எவரும் – தலாக் சட்டத்தை இயற்றிய திருமறைக் குர்ஆனிலிருந்தும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக விளங்கிய நபி (ஸல்) அவர்களின் (ஆதாரப்பூர்வமான) வழிமுறையிலிருந்தும் மேற்கோள் காட்டி விமர்சியுங்கள். அதுவே உண்மையானதாகவும் – நேர்மையானதாகவும் இருக்கும்.

சனி, டிசம்பர் 09, 2017

→HOW WELL YOU KNOW YOUR HOLY QUR'AN←1. How many verses are in Holy Qur’an?

A. 6235
B. 6666.✔
C. 6237
D. 6238

2. How many times is the word ‘Qur’an’ repeated in Holy Qur’an?

A. 67
B. 68
C. 69
D. 70✔

3. Which is the best drink mentioned in Holy Qur’an?

A. Honey
B. Milk✔
C. Water
D. Juice

4. The best eatable thing mentioned in Holy Quran is?

A. Honey✔
B. Milk
C. Water melon
D. Dabino

5. Which is the shortest Sura of Holy Qur’an?

A. Falaq
B. NASS
C. IKLASS
D. KAUSAR✔

6. The most disliked thing by Allah Ta’ala though Halal is?

A. Hajj
B. Divorce✔
C. Marriage
D. Murder

7. Which letter is used the most time in Holy Quran?

A. Wa
B. Ba'un
C. Alif✔
D. Qaf

8. Which letter is used the least in the Holy Qur’an?

A. Zaa✔
B. Maa
C. Taa
D. Laa

9. Which is the biggest animal mentioned in Holy Qur’an?
A. Fish
B. Whale
C. Elephant✔
D. Anaconda

10. Which is the smallest animal mentioned in Holy Qur’an?
A. Fly
B. Mosquito✔
C. Spider
D. Ant

Ans = Mosquito Q.2:26

11. How many words are in the smallest Sura (kausar) of Holy Qur’an?
A. 41
B. 42✔
C. 43
D. 44

12. Which Sura of Holy Quran is called the mother of Qur’an?
A. Baqara
B. Fatiha✔
C. Iklass
D. Yaseen

13. How many Sura start with Al-Hamdulillah?

A. Four
B. Five✔
C. 6ix
D. Se7en

Ans =B. Five; [ Fatihah, Anaam, Kahf, Saba & Fatir ]

14. How many Sura’s name is only one letter?
A. Two
B. Three✔
C. Four
D. Five

Ans = B. Three; [ Qaf, Sad & Noon ]

15. How many Sura start with word ‘Inna ‘?
A. Three
B. Four. ✔
C. Five
D. 6ix.

Ans =B. Four; [ Sura Fatha, Nuh,Qadr, Kausar ]

16. How many Sura are Makkahi (revealed in Mecca)?
A. 85
B. 86✔
C. 87
D. 88

17. and how suras many are Madni (revealed in Medina)?
A. 28✔
B. 27
C. 26
D. 25

18. Which Sura is from the name of tribe of Holy Prophet?
A. Lahab
B. Quraish✔
C. Hashim
D. Sab'i

19. Which Sura is called the heart of Holy Qur’an?
A. Iklas
B. Yaseen✔
C. Fatiha
D. Mulk

20. In which Sura is the name of Allah repeated only five times?
A. An'am
B. Hajj✔
C. Maryam
D. Mu'meen

21. Which Sura is the name of one Holy war?
A. Room
B. Ahzab✔
C. Fathi
D. Nasr

22. Which Sura is the name of one metal?
A. Ra'ad
B. Hadeed✔
C. Ahzab
D. HUD

23. Which Sura is called ‘Aroos-ul-Qur’an (the Bride of the Qur’an)?
A. Fatiha
B. Yaseen
C. Jinn
D. Rahman✔

24. Which Sura is considered as 1/3 of holy Qur’an?
A. Al-Ikhlas.✔
B. Falaq
C. Nass.
D. Fatiha

25. Which Sura was revealed twice?
A. Iklaas
B. Fatiha✔
C. Ayatul kursiyyu
D. Tauba

26. In which Sura is the backbiter condemned?
A. Munafiqun
B. Humaza✔
C. Nuhu
D. Zalzala

27. In which Sura is the name of Allah repeated in every verse?
A. Iklaas
B. Mujadala✔
C. Mumtahana
D. Fatiha

28. In which Sura does the letter ‘Fa’ did not appear?
A. Al-Imaran
B. Baqara.
C. fatiha✔
D. Nass

29. How many Suras starts with word ‘ Tabara Kallazi’
A. 4
B. 3
C. 2✔
D. 1

Ans= C. 2 [Mulk & Furqan]

30. Makkan Suras were revealed in how many years?
A. 13✔
B. 14
C. 15
D. 16

31. Medina Sura were revealed in how many years?
A. 8
B. 9
C. 10✔
D. 11

32. How many Suras start with word Qad?
A. 2✔
B. 3
C. 4
D. 5

 Ans= A. 2 [Mujadala & Momenoon]

33. Which Sura is related to Hazrat Ali?
A. Humaza
B. Tagabun
C. Adiyat✔
D. Balad

34. Which Sura has every verse ending with letter ‘Dal ‘?
A. Iqra'a
B. falaq
C. Balad
D. Iklas✔

35. Which Sura is revealed in respect of Ahle Bayt?
A. Luqman
B. Qamar
C. Layl
D. Insan✔

Ans = D. Sura Insan/Dahr

36. Which Sura every verse ends with letter ‘Ra'
A. Buruj
B. Dariq
C. Kausar✔
D. Shams

37. In which Sura is the creation of human beings mentioned?
A. Hajj
B. Hijr✔
C. Hadid
D. Humaza

Ans = B. Sura Hijr verse 26.

38. In which Sura are the regulations for prisoners of war mentioned?
A. Baqara
B. Al- Imran
C. Nisa✔
D. Insan

39. Which Sura deals with the laws of marriage?
A. Dalaq
B. Mujadala
C. Nisa✔
D. Mumtahana

40. In which Sura is the story of the worship of cow of Bani Israeel mentioned?
A. Baqara
B. Taha✔
C. Qasas
D. Kahfi

41. In which Sura is the law of inheritance mentioned?
A. Nisa.✔
B. Ma'ida
C. Noor
D. Anbiya

42. In which Sura is the Hijra of the Holy Prophet mentioned?
A. A'araf
B. HUD
C. Nuhu
D. Anfal✔

43. In which Sura are the 27 Attributes of Allah mentioned?
A. Hadeed✔
B. Rahman
C.Yunus
D. Yusuf

44. Which is the best night mentioned in Holy Qur’an?
A. Qamar
B. Qadar✔
C. Najm
D. Layl

45. Which is the best month mentioned in Holy Qur’an?
A. Rajab
B. Sha'abān
C. Ramadan✔
D. Hajj

46. How many words are in the longest Sura of Holy Qur’an?
A. 25500✔
B. 26600
C. 27700
D. 28800

47. How many times is Bismillahir Rahmaanir Raheem is repeated?
A. 116
B. 115
C. 114✔
D. 113

48. How many Sura start with Bismillahir Rahmaanir Raheem?
A. 116
B. 115
C. 114
D. 113✔

49. In what surah the first aya in the holy Qur'an revealed?
A. Fatiha
B. Muzammil
C. Mudassir
D. Iqra'a✔

50. What is the translation of 'Muzammil'?
A. The enshrouded One✔
B. The cloaked One
C. The feared One
D. The Runaway One

Whatever written of Truth and benefit is only due to Allah's Assistance and Guidance, and whatever of error is of me alone. Allah Alone Knows Best and He is the Only Source of Strength.

BarakAllāhu feekum

Wa Jazākumullāhu Khyran

May Almighty Allah accept our efforts and deeds in Ibadah and grant us all janatul firdaus

வியாழன், செப்டம்பர் 28, 2017

இஸ்லாமிய பார்வையில் வளர்ப்பு பிள்ளை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது.

எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் அதற்குத் தெளிவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தத்தெடுக்கப்படும் குழந்தைகள் அவர்களின் உண்மையான தந்தை பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதிமுறை என்று தெரியும். தந்தை யாரென்று அறியப்படாத ஒரு (திருமணமாகாத) பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, அப்பெண்ணின் எதிர்காலம் கருதி குழந்தை பிறந்த நிமிடம் முதல் அது வேண்டாம் என அப்பெண்ணால் கைவிடப்பட்ட நிலையில் இறைவனின் கருணையினால் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது.

பிறந்த நிமிடம் முதல் எங்களிடம் இக்குழந்தை இருக்கும் நிலையிலும், உண்மையான தந்தை யாரென்று அறியப்படாத நிலையிலும், பெற்ற தாய்க்கும் வேண்டாத நிலையில் நாங்கள் பால் கொடுத்து வளர்த்தினால் அதனை எங்கள் குழந்தையாக வளர்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா ?

அல்லாஹ் உங்களின் செயல்களுக்கு தக்க கூலிகளை வழங்கிடுவானாக. நம் அனைவரையும் நேர் வழியில் இறுதிவரை உறுதியுடன் இருக்கச் செய்வானாக. ஆமீன்.

தெளிவு:

அன்புச் சகோதரருக்கு, வ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சத்தியமார்க்கம்.காம் இணையத் தளத்திற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளில் இன்னாருக்கு இன்னார் வாரிசு என இறைவன் படைத்திருக்க, உண்மையான தந்தை, மகன், மகள் உறவை மாற்றுவது இறைவனின் அதிகாரத்தில் கைவைப்பதாகும். இறைவனுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தில் மனிதன் தலையிட்டு இங்குப் படைப்பின் வம்சா வழியைப் பொய்ப்பிக்கிறான் என்று இச்செயலுக்குப் பொருள் ஆகும். காட்டாக, ஹஸன் என்பவருக்குப் பிறந்த உஸ்மான் என்ற குழந்தையை அப்துல் காதர் என்பவர் தத்தெடுக்கிறார் எனக் கொள்வோம். ஹஸனின் மகன் உஸ்மான் என்று இறைவன் படைத்திருக்க, அப்துல் காதரின் மகன் உஸ்மான் என்று மனிதர்கள் மாற்றுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

"யார் தம் தந்தை அல்லாத ஒருவரை - அவர் தம் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6766, முஸ்லிம் 115)

மேற்காணும் நபிமொழி, மரியாதையின் நிமித்தம் பெரியோர்களை அப்பா என்று வெறும் வார்த்தையாக அழைப்பதைத் தடுக்கவில்லை. மாறாக, இரத்த சம்பந்தமான உறவு ஏற்பட்டு விட்டது போல் தந்தை அல்லாத ஒருவரை, அவர் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே தந்தை என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தடை செய்கிறது.

இந்நபிமொழியின் அடைப்படையில் தனக்குப் பிறக்காத மகனை, அவர் தன் மகன் இல்லை என்று தெரிந்து கொண்டே மகன் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது.

இனி திருமறை வசனத்தைப் பார்ப்போம்.

"எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்." (அல்குர்ஆன் 033:004)

இந்த இறைவசனம், "எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை" எனத் துவங்கி, "உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை." எனத் தொடர்கிறது.

இன்னும்,

"உங்களில் மனைவியரைத் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றெடுத்தவர்களைத் தவிர மற்றவர் அவர்களின் தாயாக ஆக முடியாது" (அல்குர்ஆன் 058:002)

தாய் என்றால், பிள்ளையைச் சுமந்து பெற்றெடுத்திருக்க வேண்டும் அவர் தான் தாய் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். வெறும் வார்த்தையால் மனைவியைத் தாய் என்று சொல்லி விட்டதால் அவர் தாயாகி விடமாட்டார் .

இவ்வாறு கூறுவது,

"வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர்'' (அல்குர்ஆன் 058:002) என்ற இறைக் கூற்றை மெய்ப்பிக்கிறது.

இங்குக் குறிப்பிடப்பட்ட இறைவசனங்களிலிருந்து பெறும் படிப்பினையாவது:

தாய், தகப்பன் என்றால் அவர்கள் நம்மைப் பெற்றெடுத்திருக்க வேண்டும். மகன், மகள் என்றால் அவர்கள் நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக இருக்க வேண்டும். சகோதரன், சகோதரி என்றால் அவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சித்தப்பா, மாமி என்றால் தந்தையுடன் பிறந்திருக்க வேண்டும். சித்தி, தாய் மாமன் என்றால் தாயுடன் பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளே இறைவனின் படைப்பில் உண்மையான உறவுகள்.

இரத்த சம்பந்தப்பட்ட உறவில், உடன் பிறந்த சகோதரி திருமணம் செய்து கொள்ள விலக்கப்பட்டவராவார். இதே தகுதியில் உடன் பிறவாத, ஒரே தாயிடம் பால் குடித்திருக்காத, வேறொரு பெண்ணைச் சகோதரி என்று சொல்லுவதால் அந்தப் பெண் மணமுடிக்க விலக்கப்பட்டவராக ஆகி விடுவதில்லை. சகோதரி என்று குறிப்பிட்டதால் மணமுடிக்க ஆகாதவர் என்று எண்ணுவது இறைவன் அனுமதித்ததை மறுப்பதாகும் என்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கை பெற வேண்டும்.

இப்போது 033:004வது வசனம் தொடர்ச்சியாக, ''உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் (சொந்தப்) பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை'' என்றும் கூறுகிறது.

பெற்றெடுத்தவளைத் தவிர மற்ற எவரும் தாயாக ஆக முடியாது என்பது போல் தத்தெடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் சொந்தப் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை என இறைவன் கூறுகிறான். அதாவது, வளர்ப்புப் பிள்ளைகள் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக ஆக முடியாது என்பது இங்கு ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயம். இஸ்லாம் அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதை ஆதரிக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் இந்த வசனத்தைத் தவறாக விளங்கியே விமர்சிக்கிறார்கள்.

ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர்க்கு அவர்கள் பெற்றெடுத்த ஒரு பெண் குழந்தை இருக்குமெனில் இந்த இருவரிடையே அண்ணன் தங்கை என இரத்த சம்பந்தப்பட்ட உறவு இல்லை. இவர்கள் பருவமடையும்போது இருவரும் மணம் புரிந்து கொள்ள நாடினால், இஸ்லாமிய அடிப்படையில் அது ஆகுமானதாகும் என்பதை மறுக்கக்கூடாது, இருவரும் ஒரே தாயிடம் பால் குடித்திருந்தாலே தவிர. அவ்வாறு மறுப்பவர்கள் இறைவன் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியரின் குடும்பத்தாரோடு வளர்ப்புப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் இரத்த உறவு இல்லை. அதனால் சித்தி, தாய்மாமன், மாமி, சித்தப்பா போன்ற மேலே குறிப்பிட்டுள்ள இரத்த உறவுகள் ஏற்படா. அதாவது இங்கு மஹரம் ஒரு போதும் ஏற்படாது. குழந்தை பிறந்த குடும்பத்தில் தான் இரத்த உறவுகளும், மஹரமும் ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களையும் உள்ளடக்கியே, "உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை" என்ற வசனம் அமைந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து,

"இது உங்கள் வாய்களால் கூறும் (வெறும்) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்" என தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் என்று சொல்வது (வெறும்) வார்த்தைதானே தவிர நீங்கள் அவ்வாறு சொல்வதில் எந்த உண்மையும் இல்லையென இவ்வசனம் நிறைவடைகிறது.

அடுத்த வசனம்:

"அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்" (அல்குர்ஆன் 033:005)

மேலதிக விரிவுரை தேவையில்லை எனும் அளவுக்கு இந்த வசனம் தெளிவாக அமைந்திருக்கிறது. கேள்வி கேட்ட சகோதரர், "தந்தை யாரென அறியப்படாத நிலையில் எங்கள் குழந்தையாக நாங்கள் கொள்ளலாமா? என்ற ஐயத்திற்கு நேரடி விளக்கமாக ''அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரராவர்'' என்று இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

இந்த இறைவசனத்தின் பின்னணியைச் சற்று நோக்குவோம்:

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை விடுதலை செய்து, பின்னர் அவரை வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். "எனக்கு ஸைது வாரிசாவார், ஸைதுக்கு நான் வாரிசாவேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்தார்கள். நபித்துவ வாழ்விற்கு முன்பு நடந்தது இச்சம்பவம். நபித்துவம் பெற்று மதீனா வந்த இரண்டாம் ஆண்டில் மேற்கண்ட வசனங்கள் அருளப்படும் வரை, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாகக் கருதி, வளர்ப்புத் தந்தையின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வருவதும் நடைமுறையில் இருந்தது. 033:005வது வசனம் அருளப்பட்ட பின்னர் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது.

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (033:005) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மது (முஹம்மதின் மகன் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்" (புகாரி, 4782)

வளர்ப்புப் பிள்ளை வாரிசாக்கப்பட்டும், வளர்ப்புத் தந்தையின் பெயரைச் சேர்த்தே வளர்ப்பு மகன் அழைக்கப்பட்டும் வந்த அறியாமைக் கால வழக்கத்தைத் தடை செய்து, தத்தெடுக்கும் சுவீகாரப் புத்திரர்களை வளர்ப்புப் பிள்ளை என்ற எண்ணத்தில் மகன் என அழைத்துக் கொள்ள இறைவன் அனுமதிக்கிறான். இதற்கு மாறாக, வளர்ப்புப் பிள்ளையை சொந்த மகனாகவோ, மகளாகவோ உள்ளத்தால் தீர்மானிப்பதைக் குற்றமென இறைவசனம் கூறுவதால் அதிலிருந்து விலகி விடுவதே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும்.

சுவீகாரப் பிள்ளைகள்:

எடுத்து வளர்க்கும் சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய வளர்ப்பு பிள்ளையாக மட்டுமே வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அக்குழந்தை உங்களிடம் பால் குடிக்கும் பருவத்தில் பால் குடித்திருந்தால் அவர் உங்கள் பால்குடிப் பிள்ளையாகவும், உங்களின் சொந்தப் பிள்ளைகளுக்குப் பால்குடி சகோதரராகவும் ஆவார். ''உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும்,'' (004:023) என பால்குடி உறவுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
மாறாக, எடுத்து வளர்க்கும் குழந்தைக்கு வளர்ப்புத் தந்தை ஒருக்காலும் சொந்தத் தந்தை ஆக முடியாது. வளர்க்கும் பிள்ளையின் தந்தையின் பெயர் தெரியா விட்டாலும் சுவீகாரப் பிள்ளைக்கு வளர்ப்பவர் தந்தை ஆக முடியாது என இறைவசனங்கள் வலியுறுக்கிறது. இதை நன்கு நினைவில் கொள்வது அவசியம்.
உள்ளங்கள் சரி காண்பதைத் தவிர்ப்போம், இறைவழி நடப்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

குறிப்பு:

அரசுப் பதிவுகளிலும், பள்ளிச் சான்றிதழ்களிலும் குழந்தையின் தந்தை  பெயரை அறிந்திருந்தால் அதைக் குறிப்பிடலாம். தந்தையின் பெயர் அறியாத நிலையில் எடுத்து வளர்ப்பவர், காப்பாளர் - கார்டியன் எனத் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்..

புதன், ஆகஸ்ட் 30, 2017

அரபா நோன்பு பற்றிய கேள்விகள்

கேள்வி 01.
அரபா நோன்பு வெள்ளிக்கிழமையில் நோற்கலாமா?
➖➖➖➖➖
பதில்:வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதாக இருந்தால் முந்திய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் சேர்த்து நோன்பு பிடிக்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது.
அந்த ஹதீஸில் *"லா தஹுஸ்ஸூ யவ்மல் ஜும்அதி பிஸியாமின்"* என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அதாவது, வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி *(விசேஷமாகக் கருதி)* நோன்பு நோற்க வேண்டாம் என்றுள்ளது.
அப்படி நோற்பதாக இருந்தால் மாத்திரமே மேல் கூறிய சட்டம்.
வெள்ளிக்கிழமை என்பதை கருத்திற் கொள்ளாமல் வேறு சுன்னத்தான நோன்புகளை கருத்திற் கொண்டு அந்நாளில் நோற்பது மேல் கூறிய சட்டத்திற்குள் இடம் பெற மாட்டாது.
எனவே, வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு வந்தால் முந்திய நாள் அல்லது பிந்தைய நாள் நோன்பு நோற்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இது மிகவும் தெளிவான ஒரு விஷயம்.
யாராவது ஒருவர் பேணுதல் கருதி வெள்ளிக்கிழமை அரபா நோன்பு நோற்று அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்பாராக இருந்தால் அது குற்றமில்லை.
பிந்தைய நாள் துல் ஹஜ் 10 இல் நோன்பு நோற்பது கூடாது. அது பெருநாள் தினமாகும்.
....................................
கேள்வி 02
அரபா நோன்பு ஒரு நோன்பா? அல்லது இரண்டு நோன்புகளா?
➖➖➖➖➖➖
பதில்: சிலர் அரபா நோன்பை பிழையாக விளங்கி இரண்டு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
"யவ்மு அரபா" என்றால் "அரபா தினம்" என்று அர்த்தம்.
அரபா தினம் என்றால் *ஒரு நாளைத்* தான் குறிக்கும்.
இரண்டு நாட்களை குறிப்பதாக இருந்தால் ஹதீஸில் *"அரபா தினங்கள்"* அதாவது *"அய்யாமு அரபா அல்லது யவ்மா அரபா"* என்று இடம் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, துல் ஹஜ் 9 ஆம் நாள் நோற்கும் நோன்பு தான் அரபா நோன்பு. அது ஒரு நாள் நோன்பு தான் என்பது மிகத் தெளிவு.
-----------------
கேள்வி 03.
ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் நாளில் தான் அரபா நோன்பா?
➖➖➖➖➖➖➖
பதில்:
ஹதீஸில் *"ஸியாமு யவ்மி அரபா"* என்று இடம் பெற்றுள்ளது.
அதாவது, *"அரபா நாள் நோன்பு"* என்பதாகும்.
நாட்களை தீர்மானிப்பதுஎன்பது (இடங்களின் ஒன்று கூடல்களை வைத்து அல்ல. )பிறையை வைத்துத் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 *அரபா தின நோன்பும் இடத்தை அடிப்படையாக வைத்து உருவான நோன்பு கிடையாது.*
இடத்தை அடிப்படையாக வைத்து நோன்பு உருவாகியிருந்தால் *"ஸியாமு அரபா"* அதாவது *"அரபா நோன்பு"* என்று இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் ஹதீஸ்களில் "ஸியாமு அரபா" என்று இல்லாமல் "ஸியாமு *யவ்மி* அரபா" என்று தான் இடம் பெற்றுள்ளது.
அதாவது "அரபா நோன்பு" என்றில்லாமல் "அரபா *தின* நோன்பு" என்று தான் வந்துள்ளது.
எனவே, அரபா தினம் (நாள்) என்பது பிறை 8 இலோ பிறை 10 இலோ இல்லை. அரபா தினம் என்பது பிறை 9 ஆகும்.
அரபா தின நோன்பு நோற்பவர்கள் தமது பிறைக் கணக்கின் படி பிறை 9 இல் தான் நோன்பு நோற்க வேண்டும். அது அரபா என்ற இடத்தில் ஹாஜிகள் ஒன்று கூடும் அதே நாளாகவும் அமையலாம். அல்லது அது அல்லாத நாளாகவும் அமையலாம். அது பிரச்சனையே இல்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
30/08/2017

ஞாயிறு, ஜூலை 23, 2017

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை

பள்ளிவாசல் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வழியுமில்லை

சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை.

பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் முக்கியப்பணி.

இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை.

ஒரு மஹல்லாவில் பல்வேறு சிந்தனைகள்கொண்ட மக்கள், பலதரப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதென்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு நிமிடமும் ஒருவித அச்சத்தோடும் பதற்றத்தோடுமே ஆலிம்கள் பணியாற்றுகிறார்கள்.

சின்ன சின்ன விசயங்களுக்காக ஆலிம்களை அவமானப்படுத்தும் நிலை மகா கேவலமானது. பள்ளிவாசலில் விளக்கு எரியவில்லையென்றாலும் கொசு கடித்தாலும் அதற்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

வீட்டில் மனைவியை மக்களைச் சமாளிக்கவே நாம் திணறுகிறோம். ஆனால் ஆலிம்கள் ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். அனைவரையும் சமாளிக்க வேண்டும். இதில் வீடுகளில் செல்லாக் காசுகளாக இருப்பவர்களின் தொல்லையைத் தாங்கமுடிவதில்லை. பள்ளிவாசலில் பிரச்சினைகளை உருவாக்கி இமாம்களைக் குறைசொல்வதும் அவமானப்படுத்துவதும் ஃபேசனாகிவிட்டது. பள்ளிவாசலுக்குச் சென்று கத்தினால் அவன் பெரியமனுஷன் என்ற நிலை உருவாகிவிட்டது.

எல்லோரிடமும் குறைகள் இருக்கின்றன. ஆலிம்களிடமும் தவறுகள் உள்ளன. அவற்றை முறையாகச் சொல்கிறபோது அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு, எல்லோருக்கும் முன்னால் சப்தமிடுவதும், எந்த அறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்வதும் நியாயமற்றது. பிறரை அவமானப்படுத்துவது மிகப்பெரும் குற்றம்.

இன்றைக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்கள் தங்கள் உரைகளில் மார்க்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்ல முடிவதில்லை. எல்லா துறைகளுக்கும் மார்க்கம் வழிகாட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் சுதந்திரமாகப் பேச நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மீறி பேசினால் அடுத்த வினாடி அவரது வேலை காலி.

ஆலிம்கள் மற்றும் இமாம்களின் பலவீனங்கள்

- ஆலிம்களிடம் ஒற்றுமையின்மை.

- ஜமாஅத்துல் உலமா அமைப்பு வலுவானதாக இல்லை.
ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகளும் மூத்த ஆலிம்களும் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் இமாம்களாக, அரபு மத்ரஸா ஆசிரியர்களாக இருக்கிறார்கள். பணி தொடர்பான அச்சம் அவர்களுக்கும் உண்டு.

- ஆலிம்களைக் கட்டுப்படுத்துகிற நிலையில் ஜமாஅத்துல் உலமா இல்லை.

- எல்லா ஆலிம்களும் ஜமாஅத்துல் உலமாவில் உறுப்பினர்களாக இல்லை.

- வேலையில்லாப் பிரச்சினை

- ஒரு பள்ளிவாசலில் ஒரு இமாம் இருக்கும்போதே இன்னொரு ஆலிம் அதே பள்ளிவாசலில் வேலைக்கு முயற்சிப்பது.

- பணிநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளின்போது ஆலிம்களுக்கு உதவ எந்த அமைப்பும் இல்லை.

- பெரும்பாலானவர்களிடம் காலத்திற்கேற்ற அறிவுத்தேடல் குறைவு.

- அரபு மத்ரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேயிருக்கிறது.

- சில ஆலிம்கள் செல்வந்தர்களையும் அரசியல் தலைவர்களையும் சார்ந்திருப்பது.

- பொருளாதாரத்திற்கு இமாமத் பணியை மட்டுமே சார்ந்திருப்பது.

- பயின்ற மத்ரஸாக்களை அடிப்படையாகக்கொண்டு வெளிப்படும் வேறுபாடுகள்

இன்னும் சில…

பள்ளிவாசல் நிர்வாக அமைப்பு:

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் இமாமத் பணியைக் கைப்பற்றுவதில் ஆலிம்களுக்கிடையே போட்டியும் ஒருவித வெறுப்பு அரசியலும் நிலவுகிறது.

பட்டம் பெற்ற மத்ரஸாவை அடிப்படையாகக்கொண்டு இந்தப் போட்டி தீவிரமடைகிறது. பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவதில் அநாகரீகமான போக்கும் நிலவுகிறது.

நிர்வாகத்தைப் பொறுத்தவரை சுன்னத் ஜமாஅத், தீவிர சுன்னத் ஜமாஅத், தப்லீக், தவ்ஹீத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலஃபி என பல்வேறு சிந்தனைக்கொண்டவர்கள் நிர்வாகத்தில், ஜமாஅத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைக்கேற்ப இமாம்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் அரசியல் பின்புலம் உள்ள நிர்வாகிகள் அவர்களுடைய கட்சிக்கு ஆதரவானவர்களாக இமாம்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள்.
மீறினால் உடனே, பணிநீக்கம்.

உலகில் எந்தவொரு அமைப்பிலும் இத்தகைய கேடுகெட்ட நிலை இல்லை. நிர்வாகிகள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் தங்களுக்குக் கிடைக்கும் ஏதேனும் ஒரு சலுகையில் காலதாமதமோ அல்லது சிக்கலோ ஏற்பட்டால் சும்மா இருப்பார்களா?

இமாம்களின்ச ம்பளத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம் ?????

சுருக்கமாக சொல்வதானால், பள்ளிவாசல் நிர்வாகமும் இமாம்களின் அன்றாட வாழ்வும் மிகப்பெரும் பின்னடைவையும் வலிகளையும் தாங்கியதாகவே காணப்படுகிறது.

இது குறித்து உலமா பெருமக்களும், நிர்வாகிகளும், சமுதாய ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து சில பொது வரைமுறைகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பதிவுசெய்து சட்டமாக்க வேண்டும்.

இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகம்...

விருப்பு வெறுப்பின்றி மார்க்கத்தை உரக்க சொல்கின்ற ஆலிம்கள்...

எவரையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு பணியாற்றுகின்ற இமாம்கள்…..

என்ன செய்யலாம்?

எப்படி செய்யலாம்?

யார் செய்யலாம்?                                              
Dr jahir Hussain Baqavi
University of Madras

வெள்ளி, ஜூலை 21, 2017

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்


மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக இன்று பார்க்க இருக்கிறோம்!
ü  தகுதி
சொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு தகுதிகளை அது குறிப்பிடுகிறது. முதலாவதாக இணை வைப்பு இல்லாத, நல்லறங்களுடன் கூடிய இறைநம்பிக்கை கொண்டவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர் என்பதைப் பல வசனங்களில் இறைவன் அழுத்தமாகக் கூறியுள்ளான்.
ü  இணைவைப்பு இல்லா இறைநம்பிக்கை
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத ஏகத்துவவாதிகள் மட்டுமே சொர்க்கம் செல்லத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டாரோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நம்ப மறுத்து விட்டாரோ அவர் சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறார்.
குர்ஆன் சொர்க்கவாசிகளைப் பற்றி பேசும் அநேக இடங்களில் நல்லறங்களைப் புரியும் முஃமின்களே சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இணை கற்பிக்காதவரே குர்ஆன் கூறும் முஃமின்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளனஎன்று நற்செய்தி கூறுவீராக!அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டதுஎனக் கூறுவார்கள்.ஹஇதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 2 25
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம்.ஹஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
அல்குர்ஆன் 4:57
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள்.அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.அல்குர்ஆன் 7:42
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது.இதுவே மகத்தான வெற்றி.அல்குர்ஆன் 9 72
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக இன்பம்ஹநிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களின் இறைவன் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
அல்குர்ஆன் 10:9
நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி. அல்குர்ஆன் 20:75,76
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக்நாட்களில் அனுப்பி, “இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்; “மினாவின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் கஅப் பின் மாலிக் (ரலி),முஸ்லிம் 2100
ü  உறுதியான நம்பிக்கை
நம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.
எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.அல்குர்ஆன் 46:13,14
ü  இறைவனிடம் இறைஞ்சுதல்
சில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.ஹ
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார். அல்குர்ஆன் 32 16, 17
ü  பொறுமை
சொர்க்கம் செல்ல பொறுமை எனும் தகுதியும் மிக அவசியம். இதையும் சொர்க்கவாசிகளின் பண்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.ஹ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஉழைத்தோரின் கூலி அழகானது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்.தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் 29:58, 59


பின்வரும் செய்தியிலிருந்தும் பொறுமை சொர்க்கவாசிகளுக்குரிய தகுதி என்பதை அறியலாம்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், “உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்கள்.ஹ
அப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?” என்று கேட்டார். இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.ஹ
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி),முஸ்லிம் 5129
ü  அல்லாஹ்விடமே திரும்புதல்
எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் இறைவனிடமே திரும்பும் குணம் சொர்க்கவாசிகளின் குணம் என அல்லாஹ் கூறுகிறான்.பிறகு எப்படி அதைக் குறிப்பிடாமல் இருக்க இயலும்?
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 11 23
ü  இறைபயம்
மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற இறை பயம் சொர்க்கம் செல்வோரின் முக்கியத் தகுதியாக அங்கம் வகிக்கின்றது.
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அல்குர்ஆன் 55:46
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.அல்குர்ஆன் 3 133
(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அல்குர்ஆன் 15:45
ü  அல்லாஹ், ரசூலுக்கே முதலிடம்
அல்லாஹ் ரசூலுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள், அவர்கள் பெற்றோராக இருப்பினும் அல்லாஹ் ரசூலுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் என்று அல்லாஹ் சொர்க்கவாசிகளை பற்றி தெரிவிக்கிறான்.ஹ
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர்.அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான்.ஹதனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். அல்குர்ஆன் 58:22
ü  இனிய பண்புகள்
திருக்குர்ஆனின் மேலும் சில இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக விரிவாகவே விளக்குகிறான்.பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்.உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள்.ஹஅவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).அல்குர்ஆன் 13 20,21,22,23,24
அல்முஃமினூன் எனும் 23வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள் யாவை என்பதை அல்லாஹ் பட்டியலிட்டு கூறுகிறான். இவைகள் தான் முஃமின்களை வெற்றி பெறச் செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது என்று பின்வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.
ü  நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.
(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள்.அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 23:1 11
ü  சொர்க்கவாசிகள் மூவர்
ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம் காண்கிறோம். நபிகள்ஹநாயகம் ஸல் அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் பண்புகள் யாவை என்பதை விலாவரியாக விளக்கிக் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்தியில் சொர்க்கம் செல்லும் மூன்று நபர்களை பற்றி விளக்கி இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி என்பதை வலியுறுத்துகிறார்கள்.ஹ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர்.ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர்.இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.அறிவிப்பவர் இயாள் பின் ஹிமார் (ரலி), முஸ்லிம் 5498(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
ü  அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படுதல்
அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான். சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
இதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.அல்குர்ஆன் 48:17
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.அல்குர்ஆன் 4:13
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிரஎன்று கூறினார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் தூதரே!ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி), புகாரி 7280
ü  இறையில்லம் அமைத்தல்
அல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும், துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட பொருளாதார உதவியை செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை பரிசாக அளிப்பதிலிருந்து சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை புரியலாம்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின் காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்டபோது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்), புகாரி 450
ü  பள்ளியுடன் தொடர்பு
சொரக்கம் செல்லும் தகுதி பெற்றவர் பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில் இருப்பார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), புகாரி 662
ü  நோயாளியை நலம் விசாரித்தல்
நோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), முஸ்லிம் 5017
ü  நல்லறங்களின் சங்கமிப்பு
ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அபூபக்கர் ரலி அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்.
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லைஎன்றார்கள்.அபூஹூரைரா (ரலி), முஸ்லிம் 1865
ü  உபரி தொழுகைகள்
கடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் (ரலி) அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)என்று கூறினார்கள்.அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி), முஸ்லிம் 4854
சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!