இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர்ச்சை பற்றி இஸ்லாம்

நேர்ச்சையின் சட்டங்கள்! நேர்ச்சை செய்வது குறித்த சட்டங்கள் பற்றி சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது. . நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது ' இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால் , அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன் ;   நோன்புநோற்கிறேன் ;   ஏழைகளுக்குஉதவுகிறேன் '   என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர். இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது. ' இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன் '   என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது. ' உனக்காக நான் இதைச் செய்கிறேன் '   என்று இறைவனிடம் நாம் கூறும் போது   ' அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான் '   என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது. எனவே தான் நேர்ச்சை செய்வத