இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபா நோன்பு பற்றிய கேள்விகள்

கேள்வி 01. அரபா நோன்பு வெள்ளிக்கிழமையில் நோற்கலாமா? ➖➖➖➖➖ பதில்:வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதாக இருந்தால் முந்திய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் சேர்த்து நோன்பு பிடிக்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸில் *"லா தஹுஸ்ஸூ யவ்மல் ஜும்அதி பிஸியாமின்"* என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது, வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி *(விசேஷமாகக் கருதி)* நோன்பு நோற்க வேண்டாம் என்றுள்ளது. அப்படி நோற்பதாக இருந்தால் மாத்திரமே மேல் கூறிய சட்டம். வெள்ளிக்கிழமை என்பதை கருத்திற் கொள்ளாமல் வேறு சுன்னத்தான நோன்புகளை கருத்திற் கொண்டு அந்நாளில் நோற்பது மேல் கூறிய சட்டத்திற்குள் இடம் பெற மாட்டாது. எனவே, வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு வந்தால் முந்திய நாள் அல்லது பிந்தைய நாள் நோன்பு நோற்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இது மிகவும் தெளிவான ஒரு விஷயம். யாராவது ஒருவர் பேணுதல் கருதி வெள்ளிக்கிழமை அரபா நோன்பு நோற்று அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்பாராக இருந்தால் அது குற்றமில்லை. பிந்தைய நாள் துல் ஹஜ் 10 இல் நோன்பு நோற்பது கூடாது. அது பெருநாள் தினமாகும். .................