வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....


கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....
என்னுடைய மனவோட்டம் இதுதான்👇
ü  அவரின் குடும்பம்....
உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்...
.கலைஞரை  இத்தனை வயதுவரை வாழ வைத்தது.  அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்.....இவைகள் தான்.
அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம்.
ü  ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார்.
கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ....நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான்.
குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே...
பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ....எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை.....
கலைஞர் பாதுகாத்தார் ...பாதுகாத்து கொண்டார்....ஒட்டு மொத்த குடும்பத்தின்கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்....
நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்....அவர்களே நம்முடைய சொத்துகள்.
மரணம்இயற்கையானது..மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது.......ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்......
உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்....நாளை நம்க்கும் மரணம் வரும்....மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்... இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்......
சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ......மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்.....
#மரணத்தின்பாடம்காபிரான மனிதர்மரணமும்-நாம் கடைபிடிக்க வேண்டியமுறையும்....


முன்னால் முதலமைச்சர் கருணாநிதியின் மரணமும்-
முஸ்லிம்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய                       முறையும்!!!💦💦💦

சமூக வலைதளங்களில் மார்க்க அடிப்படைகளை தெரியாமல் அல்லது மறந்து வரம்புமீறுகிறது நம்மவர்கள் பதிவு சற்று நிதானமாக மார்க்க ஆதாரங்களை சிந்துத்துப் பாருங்கள் சகோதரர்களே நாம் செய்வது நன்மை தருமா அல்லது பாவமா என்று!!!🔥
முதலில் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படையை நினைவுபடுத்துகிறேன்
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌
ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:185)

اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் : 4:78)
இவ்வசனங்களின் படி மரணத்தை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை அதற்கான நேரம் வந்துவிட்டால் மரணம் நம்மை அதுவாகவே வந்தடையும் இதில் இந்த பதிவை எழுதும் நானோ வாசிக்கும் நீங்களோ யாருமே விதிவிலக்கில்லைநாம் அனைவருமே மரணத்தை எதிர் நோக்கித்தான் இருக்கிறோம் யார் முதலில்யார் பிறகு என்பதுதான் இங்கு வித்தியாசம் இந்த அடிப்படைய ஆழமாக மனதில் பதிந்துகொண்டு முஸ்லிமல்லாதவரின் மரணத்தில் ஒரு முஸ்லிம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்!!!🚩

ü  ஒரு காபிரான மனிதர் இறந்துவிட்டால் அவருக்காக துஆ செய்வதோ அவருக்காக ஜனாசா தொழுவதோ,பிராத்தனைகளில் ஈடுபடுவதோ மார்க்கத்தில் எந்த வகையிலும் கூடாது!!!

பின் வரும் வசனங்களை நன்கு மனதில் பதிய வையுங்கள் 💌

وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ
(இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர்! ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள்.(அல்குர்ஆன் : 9:84)
مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ
இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே!(அல்குர்ஆன் : 9:113)

ü  இவ்வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டான் முஸ்லிம் அல்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்காக நாம் பிராத்திக்கக்கூடாது,அவர்கள்அடக்கஸ்தலங்களை நெருங்காதீர்கள் என்று இப்போது நீங்களே முடிவெடுங்கள் நீங்கள் துஆ செய்ய சொல்வதும் பிராத்தனைகளில் ஈடுபடுவதும் வரம்புமீறி புகழ்வதும் யாரை என்று!!!🔨

📝இப்ராஹிம் நபி தன் காபிரான தந்தைக்காக துஆ செய்தது குறித்து அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:-
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார்.
(அல்குர்ஆன் : 9:114)

📝நூஹ் நபியுடைய மகன் விஷயத்தில் அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:-
وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ
நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்!”
(அல்குர்ஆன் : 11:45)
الْجٰهِلِيْنَمِنَ كُوْنَ اَنْ اَعِظُكَ ىْۤاِنِّعِلْمٌ بِهٖلَـكَ لَـيْسَ مَا سْـــٴَـــلْنِ ‌‌تَ ا فَلَصَالِحٍ غَيْرُ عَمَلٌ ‌اِنَّهٗ اَهْلِكَ مِنْ لَـيْسَ اِنَّهٗيٰـنُوْحُ قَالَ


அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணானசெயல்ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்! அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”
(அல்குர்ஆன் : 11:46)

ü  நபிஸல் அவர்களின் தாயார் குறித்து இஸ்லாம் கூறுவதை பாருங்கள்:-

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள். (முஸ்லிம் – 1777)

ü  நபிஸல் அவர்களின் தந்தையும் நரகவாதியே:-

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் ( இருக்கிறார்கள் )என்று கூறினார்கள். (முஸ்லிம் – 347)

ü  முஸ்லிம் அல்லாதவர்கள் செய்த நன்மைகள் இந்த உலகத்தோடு முடிந்துவிடும்:-
وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّمِنَ الْخٰسِرِيْنَ

(நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகிவிடுவீர்;
(அல்குர்ஆன் : 39:65)

ü  🛐இதில் சிலர் அறிவாளித்தனமாக சில வாதங்களை வைக்கலாம் அதாவது அவர் கடைசி நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றிருக்கலாமே காபிர் என்று எப்படி முடிவெடுத்தீர்கள் என்று!!!🛐

📤எனது பதில்:-
இதன் படி பார்த்தால் அபூஜஹ்ல் மாதிரியான இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கூட துஆ செய்யலாம் காரணம் அவர்கள் இறுதிநேரத்தில் எப்படி இருந்தார்கள் என்பது தெரியாதல்லவா?

🔐இஸ்லாம் ஆதாரமின்றி யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இஸ்லாம் தடுக்கிறது
يَفْعَلُوْنَ بِمَا عَلِيْمٌ اللّٰهَ اِنَّ شَيْــٴًــا‌الْحَـقِّ مِنَ يُغْنِىْ لَا الظَّنَّ اِنَّ ظَنًّا اِلَّا اَكْثَرُهُمْ يَتَّبِعُ وَمَا
உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 10:36)

ü  ஆகவே வெளிப்படையைத்தான் நாம் பார்க்க வேண்டும் வெளிப்படையில் காபிராக வாழ்ந்தால் நாம் அவர்களுக்காக துஆ செய்வது ஹராமாகும்!!!

ü  இதுபோக இறந்தவரை நினைத்து அழ, துக்கப்பட மார்க்கம் அனுமதிக்கறது மூன்று நாட்கள் வரை அதற்கு மேல் அதும் கூடாது.💦

ü  இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டினார்கள். நூல்: புகாரி 313, 5341, 5343

இவ்வசனங்களையெல்லாம் மீறி அல்லது புறக்கணித்து காபிர்களுக்காக துஆ செய்ய நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான எச்சரிக்கை இதோ:-
لَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌‌ فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ يَجْحَدُوْنَ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا       
அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும்ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”
(அல்குர்ஆன் : 7:51)

இந்த நேரத்தில் இது தேவைதானா என்று சிலர் கேட்கலாம் .?

யாருக்காகவும் எப்பவும் மார்க்கத்தை மறைக்கக் கூடாது நாம் சத்தியம் என்று அறிந்துவிட்டால்அதைமக்கள் மத்தியில் போட்டு உடைத்துவிட வேண்டும்.சத்தியம் என்று தெரிந்தும் மறைப்பவர்கள் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கையைப் பாருங்கள்:-
اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى
لْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُم اللّٰعِنُوْنَۙ‏
 ا

2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
ولَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ

2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

இவ்வாறாக இறைவனின் கடுமையான கட்டளைகள் இருக்க மாற்று மதத்தவர் என்ன நினைப்பார்கள் காவிகள் பிரச்சனை பண்ணுவார்கள் என்பதற்காகவெல்லாம் பயந்து இறைவசனம் மீறப்படுவதை+ வேடிக்கைப் பார்க்க முடியாது!!!