இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தண்ணீர்! தண்ணீர்!

  உலக வாழ்வாதாரத்திற்கான அடிப்படை அலகு தண்ணீர் . மக்கள் தொகை பெருக பெருக தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி கொண்டே இருக்கிறது . மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்கானது என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர் . 2050- ல் உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன . மஹாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . அங்கு உள்ள நீர் நிலைகளில் மக்கள் ஒன்று சேரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன . விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை . இதனைத் தடுக்க அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் . தண்ணீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . நீண்ட கால அடிப்படையிலான துரித நடவடிக