செவ்வாய், ஜூன் 19, 2018

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்..?


மௌலவி M. பஷீர் ஃபிர்தௌஸி
இஸ்லாம் கல்விக்கும் ஞானத்திர்க்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம் கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தை பாதுகாக்கவும் அதனை பரப்புவதர்க்கும் தேர்ந்தெடுத்துள்ளான்.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன் 29:48,49)
இந்த வசனத்திர்க்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்:
குர்ஆன் என்பது ஏவல், விலக்கல்,செய்திகள் என்று சத்தியத்தை தெரிவிக்கக்கூடிய தெளிவான வசனங்களாகும் இதனை அறிஞர்கள் தங்களது உள்ளத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் இக்குர்ஆனை மனனம் செய்வதையும், ஓதுவதையும்,இன்னும் அதனை விளக்குவதையும் அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக்கியுள்ளான்.
பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்
அல்லாஹ்வின் மார்க்கத்தில் கற்றவருக்கு கல்லாதவர்களைவிட சிறப்புள்ளது
(நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
(அல்குர்ஆன் 39:9)
கல்வியாளர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குகிறான்
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.( அல்குர்ஆன் 3:18)
கல்வியாளர்களின் பண்பாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தைப்பற்றி கூறிக்காட்டுகிறான்
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம்.(அல்குர்ஆன் 35:28)
அறிஞர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறார்கள் என்பதனால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அறிவில்லாமல் பேசமாட்டார்கள் இன்னும் நேர்வழியில் உறுதியாக இருப்பார்கள் அதில் தடம்புரள மாட்டார்கள் அதே போன்று மனோஇச்சையின் அடிப்படையில் மார்க்க விஷயத்தில் எதையும் பேசமாட்டார்கள்.
இந்த வசனத்திர்க்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்:
அல்லாஹ்வை உன்மையாக அஞ்சுவோர்கள் அவனை அறிந்த உலமாக்கள் தான் ஏனெனில் மகத்துவமும் மேன்மையும் உடையவனும் யாவற்றையும் அறிந்தோனும் முழுமையான பண்புகளுக்குறியவனும் ஆகிய அல்லாஹ்வை முழுமையாக அறிவதன் மூலம் அவரிடம் அல்லாஹ்வைப்பற்றிய அச்சம் அதிகமாகவும் முழுமையானதாகவும் ஆகிறது.
பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸிர்
கல்வியை கல்வியாளர்களிடம் தான் கற்கக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அது பயனற்ற கல்வியாகவும் சில போது சோதனையாகவும் அமைந்து விடும் எனவே தான் நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் அறிவித்தார்.
நூல் ஸஹீஹுல் புஹாரி 100
உலமாக்களின் உயிரைக்கைப்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ் பூமியில் இருந்து கல்வியை பறிப்பான் கல்வியைப் பறிப்பது என்பது மறுமையின் அடையாளங்களில் ஒன்று எனவும் நபி அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் கல்வியாளர்கள் இல்லாத போது மக்கள் மடையர்களை தங்கள் தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள் என்றும் கூறினார்கள் அத்தகைய காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று நிகழ்கால நிகழ்வுகள் நம்மை சிந்திக்கவைக்கின்றன.முறையான கல்வி இல்லாதவர்கள், ஒழுக்கமும், இறையச்சமும் இல்லாதவர்கள் இன்றைக்கு மக்களுக்கு தலைவர்களாக மாறி மனம் போன போக்கில் மார்க்கத்தை வளைத்தொடித்து மார்க்கத் தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள் இதனால் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கக்கூடிய காட்ச்சியை காணமுடிகிறது
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ» ، قِيلَ: وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ»إبن ماجه 4036 مسند أحمد 7912
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு மோசடியான ஒரு காலம் வர உள்ளது அதில் பொய்யனை உண்மைப்படுத்துவார்கள் உண்மையாளனை பொய்யனாக்குவார்கள் மோசடியாளனை நம்புவார்கள் நம்பிக்கையாளனை மோசடியாளன் என்று கருதுவார்கள் தகுதி இல்லாதவர்கள் பேசுவார்கள் என்று கூறினார்கள் அப்போது தகுதி இல்லாதவர்கள் யார் என்று கேட்க்கப்பட்டது அதற்கு அறிவில்லாத மனிதன் பொதுவான விஷயத்தில் கருத்துசொல்வதாகும் என்று கூறினார்கள் .
அறிவிப்பாளர் அபூஹுரைரா
நூல் சுனன் இப்னி மாஜா 4036,முஸ்னத் அஹ்மத் 7912
பேச்சாற்றலும் நாவண்மையும் மட்டுமே உள்ள அனைவரும் கல்வியாளர்கள் அல்ல அவர்களிடமிருந்தெல்லாம் கல்வியை எடுத்துக் கொள்ளக்கூடாது
இமாம் முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக இந்த கல்வியென்பது தீன் ஆகும் எனவே, உங்களுடைய மார்க்க ஞானத்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள்.
பார்க்க ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை
கல்வியை உறுதியான கொள்கைப்பிடிப்பும், இறையச்சமும்,சரியாண அகீதாவும்,தெளிவான( மன்ஹஜு)வழிமுறையும் உள்ளவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ளவேண்டும் (ஃபாஸிக்) தீயவன்,பித்அத்வாதி வழிகேட்டின் பால் அழைக்கக் கூடியவனிடமிருந்து கல்வியை கற்கக்கூடாது .
அல்லாஹ் கூறுகிறான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلْفٍ عُدُولُهُ , يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ , وَانْتِحَالَ الْمُبْطِلِينَ , وَتَأْوِيلَ الْجَاهِلِينَ»الطبراني599 السنن الكبرى للبيهقى 20911
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த கல்வியை நீதமானவர்கள் சுமந்துகொள்வார்கள் அவர்கள் வரம்பு மீறுவோர்களின் கைய்யாடல்களையும் பொய்யர்களின் புறட்டு வாதங்களையும் மடையர்களின் தவறான விளக்கங்களையும் நீக்குவார்கள் .
அறிவிப்பாளர் அபூஹுரைரா
நூல் தப்ரானி 599 அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 20911
இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள்
அறியாமையை பகிரங்கப்படுத்தும் மடையன்
மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்
மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன் இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே
நல்லவர்,வணக்கசாலி,சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள் நூல் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162
நாம் நமது உயிரை விட அதிகமாக நேசிக்கும் இந்த மார்க்கத்தை சரியான முறையில் கற்கவேண்டும் நேர்மையானவர்களிடமிருந்து கற்கவேண்டும் வழிகேடர்களிடமிருந்தோ,ஒழுக்கமும், நேர்மையும் இல்லாதவர்களிடமிருந்தோ கற்கக்கூடாது மறுமை வெற்றியைக்குறிக்கோளாகக்கொண்டு தான் நாம் இந்த மார்க்கத்தை பின் பற்றுகிறோம் நிச்சயமாக மறுமை வெற்றியென்பது இந்த மார்க்கத்தைக்கொண்டு தான் என்பதை நினைவில் கொள்வோம் நமது இரத்தமும் சதையைவிட அதிகமாக அல்லாஹ்வின் மார்க்கத்தை நேசிப்போம்
يَا مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!
நேர்வழியை விட்டு தடம்புரளாமல் இருப்பதர்க்கு துவா கேட்க்குமாறு நபி ﷺ அவர்கள் நமக்கு வழிகாட்டினார்கள்
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»سنن أبي داود5486 سنن الترمذي 3427 سنن إبن ماجه 3884
முஃமின்களின் தாய் அன்னை உம்மு ஸலமா அவர்கள்
நபி ﷺ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது வானத்தை நோக்கி பார்வையை உயர்த்தி
اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ
பிரார்த்திப்பார்கள் என்று கூறினார்கள் நூல்: சுனன் அபீதாவூத் 5094,சுனனுத திர்மிதி3427 சுனன் இப்னி மாஜா 3884
இதன் பொருள்: அல்லாஹுவே நான் வழிகெடுவதைவிட்டும் வழிகெடுக்கப்படுவதைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் இன்னும் சறுகுவதை விட்டும் சறுக்கப்படுவதை விட்டும்,அந்நியாயம் செய்வதை விட்டும் செய்யப்படுவதை விட்டும் அறியாதவனாக ஆகுவதை விட்டும் அறிவீலியாக ஆக்கப்படுவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்பதாகும்..
குறிப்பு :இந்த கட்டுரை 01/06/2018 அல் ஜன்னத் மாத இதழில் வெளியானது

திங்கள், ஜூன் 18, 2018

ரமழானுக்குப்பின்

# # 
##################
ரமழான்  மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்:

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.

உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (41:30).

இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள் அல்லாஹ்விற்க்கு கட்டுபடுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள். எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.

உபரியான நோன்புகளின் சிறப்பும் அதன் நன்மைகளும்

‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்

இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

1. பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2. ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள் இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலெமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்:அஹ்மத், முஸ்லிம்

என் நண்பர் முஹம்மது(ஸல்)அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்
1. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரழி), நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி

அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.

முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு. அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்:முஸ்லிம்.

நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), நூல்:திர்மிதீ

ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றறுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்

ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),நூல்: புகாரி,முஸ்லிம்

ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.

‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு,சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),நூல்:முஸ்லிம்
(ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2, மஃரிபிற்கு பின் 2, இஷா விற்கு பின் 2)

குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.

சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(16:97)

”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”(2:127)

யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும்,அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! ஈமான் நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!

தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி

#ரமழானுக்குப் #பின்


ரமழான்  மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்:

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.

உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (41:30).

இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள் அல்லாஹ்விற்க்கு கட்டுபடுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள். எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.

உபரியான நோன்புகளின் சிறப்பும் அதன் நன்மைகளும்

‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்

இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

1. பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2. ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள் இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலெமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்:அஹ்மத், முஸ்லிம்

என் நண்பர் முஹம்மது(ஸல்)அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்
1. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரழி), நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி

அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.

முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு. அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்:முஸ்லிம்.

நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), நூல்:திர்மிதீ

ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றறுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்

ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),நூல்: புகாரி,முஸ்லிம்

ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.

‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு,சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),நூல்:முஸ்லிம்
(ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2, மஃரிபிற்கு பின் 2, இஷா விற்கு பின் 2)

குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.

சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(16:97)

”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”(2:127)

யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும்,அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! ஈமான் நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!

தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி

வெள்ளி, ஜூன் 08, 2018

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

(ஆசிரியர்: உண்மை உதயம்)
உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன.
எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித இனத்திற்குப் பேரழிவாக மாறி வருகின்றது.
முன்பு வாழை இலையில் சோறு போட்டு சாப்பிடுவர். அது சோற்றுக்கும் நல்ல மணத்தைத் தரும். உண்டு முடிந்த பின்னர் அந்தக் கழிவு மண்ணுக்கு வளமாகவே மாறிவிடும். ஆனால், இன்று அந்தளவுக்கு வாழை இலைகளைப் பெற முடியாதுள்ளது. பரவாயில்லை போயிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாமல் வாழை இலையை பொலித்தீனில் செய்து அதில் நமது மக்கள் சாப்பிட்டுவிட்டு வாழை இலையில் சாப்பிட்ட பெருமிதத்தையும் பேரானந்தத்தையும் அடைகின்றனர்.
ஆனால், அந்தப் பொலித்தீனின் பாதிப்பைத்தான் நாம் வாழும் பூமி சுமக்க நேரிடுகின்றது. இது கொடுமைதானே?
நாம் வாழும் மண், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் என்பவற்றையும் எமது ஜீவாதாரமாக இருக்கும் விவசாயத்தையும் சேர்த்து இந்தக் கழிவுகள் அழித்து வருகின்றன.
வளர்ந்த நாடுகள் இந்தக் கழிவுகளை நல்ல முறையில் கையாண்டு அதன் மூலம் பயனடையக் கற்றுக் கொண்டுள்ளன. மரக்கறி இலை-குலைக் கழிவுகளை அகற்ற கால்நடைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் இயற்கைப் பசளை உற்பத்தியைச் செய்கின்றன.
பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை மீள் பாவனைக்காக மீள் உற்பத்தி செய்கின்றன. பின்தங்கிய நாடுகள்தான் தொடர்ந்து தமது நாட்டைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன. நாடும் மக்களும் ஒன்றிணையாமல் குப்பைப் பிரச்சினைகளுக்கு ‘குட் பை’ சொல்ல முடியாது.
குப்பைகளையும் கழிவுகளையும் நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பில்லாத முறையில் கையாள்வதற்குக் கற்றுக் கொள்வது அவசியமாகின்றது என்பதை சமீபத்திய வெல்லம்பிடிய மீத்தொட்டுமுள்ள நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.
ஒவ்வொரு நாளும் கழிவுகளால் பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வரும் உலகை ஒரு போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்வதற்கான வசதியைக் காண்பதை விட அழிவதற்கான வழிகளைத்தான் மனிதன் தினம் தினம் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் என்ற போர்வையில் தேடிக் கொண்டிருக்கின்றான்.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நீண்ட நெடிய நாட்களாக சொல்போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது இரு நாடுகளும் யுத்த மேகத்தை அண்மித்துவிட்டன. இரண்டுமே அணுவாயுத வல்லமை கொண்ட நாடுகள். போர் மூண்டால் அது உலகுக்கே பெரிய இழப்பை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி அமெரிக்காவின் நேச நாடுகள் ஒரு அணியாகவும் எதிரிகளான வடகொரியா, சீனா, ரஷ்யா மறு அணியாகவும் மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகைத் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் நிகழ்ந்துள்ளது.
மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகில் மிகப்பெரும் அழிவுகள் நிகழும். எல்லா நாடுகளும் அடுத்த நாடுகளை அச்சுறுத்துவதற்காக தாராளமாகவே ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளன.
எதிரியை முந்திவிட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு நாடு மற்றைய நாட்டை அழிக்கத் துடிக்கலாம். இதனால் பாரிய அழிவுகள் நிகழலாம். உலகை மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளி அழித்துவிடுவதற்காக இலுமுனாட்டிகள் திட்டமிட்டு இயங்கிவருகின்றனர். மூன்றாம் உலகப் போர் மூலம் உலக சனத்தொகையை பெருமளவில் குறைத்து உலகை ஒட்டுமொத்தமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவர்களது திட்டம்தான். ஆனால், எது எப்படி நடக்கும் என்ன விளைவு ஏற்படும் என்பதை நன்கறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனேயாவான்!
எம்மை நோக்கி புனித ரமழான் வந்து கொண்டிருக்கின்றது. எமது மறுமையை வளப்படுத்தும் மாதமாக இம்மாதம் திகழ்கின்றது. எமது கழிவுகளாகிய பாவங்களை அழித்தொழித்து நன்மைகளை உற்பத்தி செய்யும் ஓர் தலைசிறந்த மாதமாக இம்மாதம் உள்ளது. அப்படிப்பட்ட பல சிறப்புக்களைக் கொண்ட இந்த ரமழான் மாதத்தை உரிய முறையில் நன்கு திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வது எமது கட்டாயக் கடமையாகும்.
மாறும் உலக அரசியல் முஸ்லிம் உலகுக்கு நலனாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ரமழானை சர்ச்சைக்குரிய மாதமாக ஆக்காமல் அமல்களுக்குரிய மாதமாக ஆக்கி நபிவழியில் எமது அமல்களைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
எமது பாவக் கழிவுகளை தவ்பா எனும் இயந்திரத்தினுள் போடுவதன் மூலம் அவற்றை முற்றாக ஒழித்து நல்லமல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளில் அமைத்து பாவங்களையே நன்மைகளாக மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி ஈமானிய உரத்தையும் வரத்தையும் பெற முயற்சிக்க வேண்டும். இதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ரமளான் ஓய்வு மாதமா?


அசத்தியத்தைத் தூக்கிப் பிடிப்பவன் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் அணியணியாய் அதை ஊரெல்லாம் பரப்பித் திரிகிறான்.
.
அந்த அசத்தியத்தை அடிக்கடி பார்த்துப் பார்த்தே பழகிப் போகும் பொதுசனமும் நாளடைவில் அதையே “சத்தியமாக இருக்குமோ” என்றும் நம்ப ஆரம்பித்தும் விடுகிறது.
.
அசத்தியத்தை உலகில் வாழ வைத்துக் கொண்டிருப்பதே அதன் பிரச்சார வேகம் தான்.
.
அசத்தியத்தின் வேகத்தையும் மிஞ்சும் வேகத்தில் சொல்லப்பட வேண்டிய சத்தியமோ பாவம் இன்று ஒரு மூலையில் சுருண்டு போய் உறங்குகிறது.
.
“புனித மாதத்தில் ஷைத்தான்களோடெல்லாம் சச்சரவு எதற்கு? அமல் செய்வதற்குத் தான் ரமழான்” என்று பரவலான பிரச்சாரத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
.
ஷைத்தானோடு களமிறங்கிப் போராடுவதே ஒரு மாபெரும் அமல் என்பதை நம்மில் அனேகர் இன்று மறந்து போனது ஏனோ?
.
ரமளான் மாதம் என்பது, ஏதோ கொஞ்சம் தொழுது விட்டுத் தேவாங்கு மாதிரி சுருண்டு படுக்கும் மாதம் அல்ல.
.
இஸ்லாத்தின் முதல் யுத்தமே ரமளான் மாதத்தில் தான் தொடுக்கப் பட்டது. “புனித மாதத்தில் இந்த சச்சரவெல்லாம் தேவையா?” என்று நபியவர்கள் அன்று நினைக்கவில்லை.
.
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த அனேக யுத்தங்கள் ரமழான் மாதங்களிலேயே அதிகம் சூடு பிடித்தன. “புனித மாதத்தில் இந்த சச்சரவெல்லாம் எதற்கு?” என்று ஸஹாபாக்களும் பள்ளியே கதியென்று சுருண்டு படுக்கவில்லை.
.
அசத்தியவாதியே இன்று தன் அசத்தியத்தைப் பச்சையாக சத்தியம் என்று வீரியத்தோடு பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான். சத்தியத்தைச் சுமந்த கற்றறிந்த மக்களில் பலருக்கு அதை எதிர்த்து ஒரு குரல் கொடுக்கக் கூடவா இன்று தெம்பில்லை?
.
“ஷைத்தானின் பிரச்சாரம் சூடுபிடித்தால் நமக்கென்ன? நேரத்துக்கு ஸஹர் செய்து, நேரத்துக்கு நோன்பு துறந்து, இடையில் கொஞ்சம் தொழுது விட்டு, நேரம் கிடைத்தால் அப்படியே ஒரு பயான் முடிச்சிட்டு நம்ம வேலைய நாம பார்ப்போம்” என்பது தான் நம்மில் அனேகர் எண்ணம் போல் தெரிகிறது.
.

இஸ்லாத்தின் பார்வையில் விளையாட்டுக்கள்


பாடசாலை விடுமுறை வந்து விட்டால் எமது சிறார்கள் அவர்களின் விடுமுறை முடியும் வரை பொழுதுபோக்குக்காக சில விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது வழக்கம். அவர்களுக்கான அந்த வாய்ப்பை பெற்றோர்களே ஏற்படுத்தி கொடுப்பார்கள்! இந்த விளையாட்டுக்களில் இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுகள் எவை? இஸ்லாம் தடை செய்துள்ள விளையாட்டுகள் எவை ? என்பதை இந்த ஆக்கத்தில் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
1) சூதாட்டம் தடை
அல்லாஹ் திருமறையில்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ

91. மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
2) நோன்பாளிகளே…! இது உங்கள் கவனத்துக்கு

عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
” مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ ” . أخرجهُ مسلمٌ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நர்தஷீர் (காய்விளையாட்டுகள்) விளையாடுகின்றாறோ அவர் தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4549 அத்தியாயம் : 41. கவிதை)
🎲நர்தஷீர்:
என்ற சொல் நாம் விளையாடும் தாயக்கட்டை ,செஸ் , கரம் போன்ற காய் விளையாட்டுகளை குறிக்கும். இதை விளையாடுவது பன்றி இறைச்சியிலும் அதன் இரத்திலும் எங்கள் கையை நாம் தேய்த்து கொள்வதற்கு சமம் என நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளதால் இந்த விளையாட்டுகளை விட்டு நாம் ஒதுங்கி எம் பிள்ளைகளையும் இந்த பாவத்திலிருந்து காப்போமாக.. அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து நாம் நோக்கும் நோன்பு வீண் போய்விடக் கூடாது நோன்பு காலங்களில் இவ்விளையாட்டில் ஈடுபடுகின்றவர்கள் எம் சமூகத்தில் பலர் அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக..!
3) உடலுக்கு பாதிப்பை உண்டு பண்ணும் இம்மையிலும் மறுமையிலும் எந்த பிரயோசனத்தையும் தராத விளையாட்டுகளை விளையாடுவதும் தடை செய்யப்பட்ட காரியம் என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்
அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சிறிய கற்களைச் சுண்டி (விளையாடி)க்கொண்டிருந்த என் தோழர் ஒருவரைக் கண்டேன். அவரிடம், “கற்களைச் சுண்டி விளையாடாதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறிய கற்களைச் சுண்டியெறிவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “சிறிய கற்களைச் சுண்டியெறிய வேண்டாமெனத் தடுத்து வந்தார்கள்”. அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படுவதோ எதிரிகள் வீழ்த்தப் படுவதோ கிடையாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)” என்று சொன்னேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே தோழர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து “விளையாடுவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “அதைத் தடை செய்துவந்தார்கள்” என்று நான் உன்னிடம் சொல்கிறேன். பிறகு (மறுபடியும்) நீ சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடுவதைக் காண்கிறேனே! நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று கூறினேன்.
– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 34. வேட்டைப் பிராணிகளும்,அறுக்கப்படும் பிராணிகளும், உண்ணத்தக்க பிராணிகளும்)
நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) நூல் : புகாரி 6220
4) உடலுக்கு பிரயோசனம் தரும் சோம்பேறித்தனம் அற்ற விளையாட்டுகளை விளையாட அனுமதி
1621. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறைவாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எறியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்கள் அணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)
நூல் : புகாரி 2899
5)”ஓட்டப்போட்டி வைக்க அனுமதி
நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் 25075
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி 6501
6) பொம்மை விளையாட்டுக்கு அனுமதி
4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் (“பனாத்”)வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்
7) நோன்பு பிடிக்கும் பிள்ளைகளுக்கு விளையாட விளையாட்டு பொருட்களை செய்துகொடுக்க அனுமதி
2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி “(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
8) மார்க்கத்துக்கு முரணற்ற அர்த்தமுள்ள பாடல்களை பாடி மகிழ , விளையாட அனுமதி
4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,
“அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”
எனும் பாடல்தான்.
(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 41. கவிதை
நபி (ஸல்) அவர்கள் ருபையிஃ பின்த் முஅவ்வித்(றழி) அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள், அப்போது சில சிறுமிகள் ரபான் தட்டியவர்களாக பத்ரில் மரணித்த தம் தந்தைமார்களை புகழ்ந்து கவிதை பாடினர், அப்போது ஒரு சிறுமி ‘எங்களில் ஒரு நபியிருக்கின்றார், அவர் நாளை என்ன நடக்கும் என்பதனை அறிவார்.’ என்று கூற, நபியவர்கள் “இப்படி நீர் கூறாதீர், நீர் (ஏற்கனவே) கூறியதைக் கூறும்.” என்று கூறினார்கள். (புஹாரி)
1619. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் நடந்த) “புஆஸ்” எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
-(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “இரு சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் “உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 41. கவிதை
9) உயிருள்ள வற்றை இலக்காகவைத்து அவற்றுக்கு நோவினை கொடுக்கும் விதத்தில் விலையாடத் தடை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 3617

வெள்ளி, ஜூன் 01, 2018

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது.
பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய அணியை எதிர்கொள்ள, ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக இருந்தனர்.
முஸ்லிம்களை விட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் அனைத்தையும் மிகைத்து, வெற்றிவாகை சூடினர்.
உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத்தொடர்பினூடாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ர் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.
உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.
ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள் காரண காரியவாத தொடர்பில் மட்டுமல்லாது, இறை நாட்டத்தினூடாகவும் நிகழ்வுகளை நோக்கும் போது, வெற்றிக்கனிகள் கண்ணில்பட்டு மின்னுகின்றன.
அத்தகைய மன உணர்வோடு பத்ர் யுத்தம் தொடர்பான சுருக்கமான வரலாற்றைப் பின்னணியுடன், அதன் மூலம் நாம் எத்தகைய படிப்பினை பெறவேண்டும் என்பதையும் நோக்குவோம்.

பத்ரு போர்: சில காட்சிகள்
இறைத்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகளும் அதன் பிறகு மதினாவில் 10 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள். மதீனாவில் ஒரு ஆட்சியை அமைத்து இறை சட்டங்களை நிலை நாட்டி வாழ துவங்கிய போது கூட எதிரிகளின் தொல்லை கொடுக்கும் மனப்பான்மையிலிருந்து இறைத்தூதரும் அவர்களின் சக தோழர்களும் தப்பவில்லை. இதன் காரணமாக எதிரிகளோடு பல தற்காப்பு போர்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. இதில் முதலாவதாக நடைப்பெற்ற போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக பிரசித்திப்பெற்ற 'பத்ரு போர்' ஆகும்
1, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். அதில் முதலாவது போர் பத்ருதான் (ஜைத் பின் அர்கம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3949).
2, பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.
3, குர்ஆனின் 3:123 முதல் 127 வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3952,3953,3954)
4, பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3956,3957,3958)
5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி ரளியல்லாஹு அன்ஹு, அபுதர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3965, 3966, 3967)
6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் இறங்கி வருவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3995)
7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள்.(அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3962, 3963, 3988, 4020)
8, 24 காஃபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு,  இப்னுஉமர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3976,3980,4026)
9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3952)
10, ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் - புகாரி 4001)
11, பத்ரு போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து 100 பங்கு ஒதுக்கப்பட்டது. (ஜூபைர் பின் அவாம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 4027)
பின்னணி:
நபி (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ர) தலைமையில் (8 பேர் கொண்ட குழுவை (12 பேர் என்ற குறிப்பும் உண்டு) உளவாளிகளாக, உறையிட்ட கடிதமொன்றைக் கொடுத்து, இரண்டு நாட்கள் பயணித்த பின்னர், அதைப் பிரித்துப் பார்க்கப் பணித்து அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் நீங்கள் மக்காவிற்கும் தாயிபிற்குமிடையிலுள்ள நக்லா எனுமிடத்திற்குச் சென்று, அங்கிருந்தவாறு குறைஷிகளின் நடவடிக்கையை உளவு பார்த்து, செய்திகளை அனுப்ப வேண்டும் எனவும், இதற்காக உமது தோழர்கள் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது.
இரண்டில் ஒன்று:
அபூ ஸுப்யானின் தலைமையில் சிரியாவுக்குச் சென்ற வாணிபக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இதை முற்றுகையிடவே விரும்பினர். இதற்குத் தயாரானபோது, மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.
எனவே, நபியவர்கள் போர் புரிவதையே விரும்பினார்கள். வாணிபக் கூட்டத்தை இடைமறித்தால், அதிக செல்வம் கிடைத்துவிடும் என்றாலும் மக்கா காபிர்கள் மதீனா எல்லைக்குள் பிரவேசித்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்ற நபியவர்களின் தூர நோக்கு சிந்தனை இதில் வெளிப்படுகிறது.
எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
(நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விசயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் (பத்ர்யுத்தத்தின் போது உம்முடன் வருவதை) வெறுக்கக் கூடியவர்களாக இருக்க,நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:05-09)
உறுதிவெளிப்பாடு:
நபி (ர) அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் (ர), அபூபக்கர் (ர) போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே பிரயத்தனப்பட்டார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாத (ர) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)
அதேபோல் மிக்தாம் (ர) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)
அமைதித் தூக்கம்:
முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.
(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11)
மழை மூலம் தூய்மையாக்கல்:
அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி பாதங்களை உறுதிப்படுத்தினான்.
(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11)
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை:
யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.
இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)
 என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)
யுத்தம் ஆரம்பம்:
நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடன், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.
அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.
1ஹம்ஸா (ரலி) X உத்பா    2உபைதா (ரலி) X வலீத்        3அலி (ரலி) X ஷைபா
இதன் பின்னர் யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா (ரலி­) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர­லி) ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான (புகாரி 3141) ஹதீஸ் குறிப்பு ஒன்றுள்ளது.
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர­லி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.
அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி­) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர­லி) அவர்களும் ஆவர். புகாரீ 3141
அல்லாஹ்வின் உதவி:
பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.
(நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.
நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44)
வானவர்களின் வருகை:
அல்லாஹ் தனது உதவியை நேரடியாக வழங்கினான் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.
(நபியே!) உமதிரட்சகன் பால் நிச்சியமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் விசுவாசம் கொண்டோரை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டுவிடுவேன் ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள் என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீ மூலம்) அறிவித்ததா (நினைத்துப் பார்ப்பீராக!) (அல்குர்ஆன் 08:12)
பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். புறமுதுகு காட்டியும் ஓடினர்.
அன்ஸரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ர) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத்)
(விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17)
சத்தியத்திற்கு வெற்றி:
போரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். (பார்க்க: புகாரி 3976, முஸ்லிம்) மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்களில் 14 போர் ஷஹீதாகினர். அவர்களில் 6 குறைஷியர் (முஹாஜிர்கள்), 8 அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது.
உலகில் அராஜக சக்திகள், அநியாய அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும், சமாதானமும் நிலவச் செய்து அல்லாஹ்வின் சட்டம் அகிலத்தை அரவணைக்கும் வரை பத்ருகள் ஓய்வதில்லை. நிச்சியம் அந்த பத்ரின் போது, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், இன்னும் கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)
பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)

வெற்றிக்கான காரணிகள்:
ஈமானிய பலம்அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும்.முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை.நபி (ஸல் ) அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும். புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும்.காபிர்களின் லோகாயத இலக்கும், ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும்.விளைவுகள்:
முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்:
முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல்.இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல்.நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல்.மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை.ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும்.இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது. 
உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. படைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக.  .


இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பத்ருபோர்`


இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பத்ருபோர் ரமழான் 17ல் நடைபெற்றது.ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ருபோரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள்.
இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
இறைவன் அளித்த உயிர் அவனுடைய மார்க்கத்திற்காக அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை நபிதோழர்கள் பெரும் பேராய்க் கருதினார்கள். இறைநெறியை நிலை நாட்டுவதையும் அதற்காக உழைப்பதையும் மையமாகக் கொண்டே அவர்களின் வாழ்க்கை சுழன்றது. அந்த 313 முஸ்லிம்களின் வாழ்வோடு எதிர்கால இஸ்லாத்தின் வாழ்வும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருந்தன.
இறைநெறியை அழிக்க முனைந்தோரை எதிர்த்துப் போரிடும்படி இறைக்கட்டளை கிடைத்த உடனேயே அந்த சிறுபான்மை சத்தியக் குழுவினர் போருக்குத் தயாராகிவிட்டனர். ஆர்ப்பரித்து வரும் குறைஷ்களின் படையை எந்த இடத்தில் சென்று சந்திப்பது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களும் தோழர்களும் கலந்து ஆலோசித்தனர். பல போர்த் திட்டங்களை வகுத்தார்கள். போருக்காக இஸ்லாமியப் படைகள் முகாமிடும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்க முடிவு செய்த போது நபிதோழர்களில் ஒருவர் இது இறை அறிவிப்பா அல்லது தங்களின் சொந்த முடிவா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இது இறை அறிவிப்பு அல்ல, என் சொந்த முடிவுஎன்று கூறியதும், அந்த நபி தோழர் தண்ணீர் வசதியுள்ள மற்றோர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு சென்று முகாமிடலாம் என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்கள் அத்துடன் எதிரிகளின் போர் நிலைகளையும், தந்திரங்களையும் வேவு பார்த்து வருவதற்காக ஒற்றர்களையும் அனுப்பி வைத்தார்கள்.
பத்ருபோர் களத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாகச் செயல்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அறிவை மட்டுமே பெரிதாக எண்ணாமல் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவனிடம் இருகையேந்தி இறைஞ்சினார்கள். “இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் வந்து, “அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்என்று ஆறுதல் கூறினார். அந்த சிறுபான்மை சத்தியக் கூட்டம் “நாங்கள் இறைவனுக்காகவேஎன்று முழுமையாக முன்வந்தபோது இறைவனும் தன் அருளைப் பொழியத் தொடங்கினான்.
போர் நடைபெறும் வேளையில் மழை பெய்வித்தும், வானவர்களை அனுப்பியும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். அவர்களின் பாதங்களை வலுப்படுத்தி இறுதி வெற்றியையும் அளித்தான். நபியவர்களோ, நபிதோழர்களோ இந்த வெற்றி குறித்து சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்காக இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான். “உண்மையாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது, உண்மையில் எறிந்தது நீரல்லர்; மாறாக அல்லாஹ்தான் எறிந்தான். (அல்குர்ஆன் 8:17)
இந்த அருள்நெறி வசனங்களுக்கேற்ப அந்த ஆரம்ப கால முஸ்லிம்களும் விளங்கினார்கள். அவர்கள் தங்களின் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தியே போரிட்டனர் என்றாலும், அவற்றைக் கொண்டுதான் வெற்றி பெற்றோம் என்று சிறிதும் கர்வம் கொள்ள வில்லை. இறையருளின் துணைகொண்டே வெற்றி பெற்றோம் என்று உறுதியாக நம்பினர். இறைவனுக்கு நன்றியும் செலுத்தினர்.
இவ்வாறு அனைத்து பண்புகளையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து சமநிலைப் படுத்தியது “பத்ருபோரின் தனிச்சிறப்பாகும்.
. “”பத்ருபோரில் எந்தெந்த நியதிகளைக் கடைபிடித்ததால் இறை யுதவி அவர்களுக்கு கிடைத்ததோ அந்த இறை நியதிகள் எந்தவித மாற்றமும் இன்றி இன்று வரை அப்படியே உள்ளன. தன்னுடைய அளவற்ற அருட்கொடைகளின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இறைவனும் வழங்கக் காத்திருக்கிறான். ஆனால்..
அந்த இறை நெறிகளைப் பின்பற்ற நம்மில் ஒருவரேனும் உண்டா? இறைவனின் அருட் கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனைப்பேரிடம் இருக்கிறது? நம் உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். இன்றுகூட இறைநெறியை -இஸ்லாத்தை முழுமையாக நிலைநாட்டும் பணி நம் முன் உள்ளது.
பத்ரு தோழர்களிடம் இருந்த அதே துடிப்பும், உணர்ச்சியும் இன்று நமக்கும் தேவைப்படுகிறது. இறைநெறியை நிலைநாட்டியே தீருவோம் எனும் உறுதியோடு நம்மிடம் இருக்கும் வாய்ப்பு வசதிகளையும் ஏன் தேவைப்பட்டால் நமது உயிர்களையும் கூட இறைவழியில் அர்ப்பணிக்கத் தயாராகி விடவேண்டும். அதற்காக இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான செயல்களில் சுய விளக்கம் கூறி ஒருபோதும் ஈடுபடக் கூடாது. அப்படி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்தால் இறையுதவி எப்படியெல்லாம் கிடைக்கிறது என்பதை நாம் நம் கண்களாலேயே கண்டு கொள்ளலாம்.
1432 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற “பத்ருபோரை இன்று நினைவூட்டுவதன் நோக்கம், நம்முடைய உள்ளத்திலும் சத்திய வேட்கை கொழுந்து விட்டெரிய வேண்டும் என்பதற்காகவே. அந்த சத்தியச் சுடர் நமது செயல்களில் வெளிப்பட்டு சுற்றியுள்ள தீமைகளை எல்லாம் சுட்டுக் கரித்து விட்டு ஓர் ஒளிமிக்க புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே!

பத்ருபோரிலிருந்து கிடைக்கும் படிப்பினை:
பத்ருபோர் தரும் படிப்பினைகளை நம் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும்.
(1) பெரும் பான்மை மக்கள் ஒரு விவாதத்தை ஏற்றுக் கொள்வதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் சத்தியவாதிகளுடன்தான் இருப்பான்.(2) இறை நம்பிக்கை கொண்ட பிறகு, இறைவனின் கட்டளைகளுக்கும் இறைத் தூதரின் கட்டளைகளுக்கும் கீழ்படியத் தயங்குவது உள்ளத்தின் நயவஞ்சகமாகும். இறைவன் இத்தகையவர்களை விரும்புவதில்லை, வெறுக்கிறான்.(3) இந்த நயவஞ்சகத் தன்மையும் கோழைத் தனமும் போலி வாதமும் ஒழிய வேண்டுமானால், இறைவன் நம் உள்ளத்தின் இரகசியங்களை அறிகின்றான் என்ற சிந்தனையும் அவன் முன்னிலையில் மறுமையில் நாம் நிற்க வேண்டியுள்ளது எனும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். செல்வம், சந்ததிகள் மீதுள்ள பேராசைதான் இறை வழியில் தியாகம் செய்ய தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவ்விரண்டையும் இறை நம்பிக்கையாளர்களை சோதிக்க இறைவனால் அளிக்கப்பட்ட சோதனைப் பொருட்கள் என உணர்ந்து இறை நம்பிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.(4) சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும். “பத்ருபோரில் வானவர்களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான். அதற்காக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். எனவே இறைவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தான்.(5) இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே. இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க “பத்ருபோர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றம் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.