வெள்ளி, நவம்பர் 08, 2019

நபியின் மீது உண்மையான அன்பு எது?ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ , ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺃﻣﺎ ﺑﻌﺪ : ﻓﺈﻥ ﺧﻴﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ , ﻭﺧﻴﺮ ﺍﻟﻬﺪﻱ ﻫﺪﻱ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ , ﻭﺷﺮ ﺍﻷﻣﻮﺭ ﻣﺤﺪﺛﺎﺗﻬﺎ ﻭﻛﻞ ﺑﺪﻋﺔ ﺿﻼﻟﺔ ( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ 2002: ) ﻭﻓﻰ ﺭﻭﺍﻳﺔ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 1577: : ﻭﻛﻞ ﺿﻼﻟﺔ ﻓﻰ ﺍﻟﻨﺎﺭ .
சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும,;, பித்அத் எல்லாம் வழிகேடுகளாகும், ‘வழிகேடுகளெல்லாம் நரகத்தில்தான். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள.; (முஸ்லிம் ஹதீஸ் இல: 2002, நஸாயீ :1577).

நமது உயிரை விடவும் மேலாக நபியவர்களை நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْوَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.அல்குர்ஆன் 33:6           இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
قل ان كنتم تحبون الله فاتبعو ني يحببكم الله ويغفرلكم ذنوبكم والله غفورالرحيم 
பொருள்;- ‘’நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றி நடப்பீர்களாக, அப்பொழுதுதான், அல்லாஹ் உங்களை நேசித்து, உங்கள் குற்றங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் கிருபை உள்ளவன் என்று (நபியே! முஸ்லிம்களுக்கு) கூறுவீராக’’(3;31)
ü  இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர்அம்சமாகும்.
என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்றுஇறைத்தூதர்(ஸல்)அவர்கள்கூறினார்கள்:
எனஅபூஹுரைரா(ரலி)அறிவித்தார்.
Ø  உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ü  இறைவன் மற்றும் இறைத்தூதரை நேசிப்பது என்பது, ஒன்று மற்றொன்றுடன் தொடர் புடையது. ஒருவரை நேசித்து, மற்றவரை நேசிக்காமல் இருக்கமுடியாது. ஒருவரை வெறுத்தாலும் மற்றவரை வெறுக்க வேண்டியது வரும்.
இருவரின் நேசத்தையும் ஒருசேர அடைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அது என்ன வழி? இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிட்டதை முடிந்தளவு கடைப்பிடித்து வாழவேண்டும். அவ்விருவரும் தடுத்ததை முற்றிலும் தவிர்ந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு எது பிரியமானதோ அது நமக்கும் பிரியமானதாகவும், அவர் களுக்கு எது வெறுப்பானதோ அது நமக்கும் வெறுப்பானதாகவும் இயற்கையாகவே ஆக வேண்டும்.
சொல்லாலும், செயலாலும், இன்பத்திலும்-துன்பத்திலும், லாபத்திலும்-நஷ்டத்திலும், செழுமையிலும்-வறுமையிலும், ஆரோக்கியத்திலும்-நோயிலும், இளமையிலும்- முதுமையிலும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக அவர்களை பின்பற்ற வேண்டும்.
மனோ இச்சைக்கு எதிராக எதை தூண்டினார்களோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். பிரியப்படும் இருவரையும் அதிகம் நினைவு கூரவேண்டும். பிரியமான இருவரையும் நினைவு கூரப்படும் போது பணிவு, பயபக்தியுடன் கண்ணியப்படுத்திட வேண்டும்.
இருவரும் யாரை நேசித்தார்களோ அவரையும் நாம் நேசிக்க வேண்டும்.வெறுத்தோரைநாம்வெறுக்கவேண்டும்.அவ்விருவரின் எண்ணம் போன்று நமது வாழ்வு அமைந்திட வேண்டும்.

ஒன்றை நேசிப்பது அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்என்பது அரேபிய பழமொழி. நாம் இறைவனையும், இறைத்தூதரையும் உண்மையாக நேசிக்கும் போது மற்றதை காணமாட்டோம். மற்றதை கேட்க மாட்டோம். இருவரின் ஆழமான நட்பில் நாம் மூழ்கும் போது கண்முன் நடப்பது தெரியாது.
காதுக்கு நேராக பேசுவது கேட்காது. நமது பார்வையும், செவிப்புலனும் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுக்காகவே மட்டும் செயல்படும். மற்றவர்களுக்காக செயல்படாது. இதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். இந்தத் தன்மை இறைவனையும், இறைத்தூதரையும் நேசிப்பவர்களிடம் வெளிப்பட வேண்டும்.
இறைவனை நேசிப்பதினால் நன்மையான காரியங்கள்தான் வெளிப்படுமே தவிர தீமைகள் அல்ல.
ü  ஹஜ்ரத் அலீ(றழி) அவர்களிடம் அண்ணல் நபீ(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னை மார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்என்று கூறினார்கள். 
அலீ(றழி) அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே! அண்ணலாரின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் அண்ணலார் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கொண்டிருந்த பரிபூரணமான இறை உறுதியே! எனவே, ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது? அல்லாஹ் தஆலா திருக்குர் ஆனில் கூறுகின்றான். 
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை
அல்லாஹ்வின் இந்த அறிவிப்பிலே, மேற்கானும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு குறைந்து விடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளதை காண்கிறோம். 
நேசம் இரு வகைப்படுகின்றது! ஒன்று, தான் விரும்பி நேசிப்பது, மற்றெது இயற்கையாகவே நேசிப்பது! விருப்பமான தேசத்தில் இயற்கையும் கலந்து விட்டது என்றால், அது பரிசுத்தமான, பரிபூரணமான நேசமாகி விடுகிறது. இத்தகைய நேசத்தைத்தான் கொண்டிருந்தார்கள், அண்ணலார் மீது அவர்களது தோழர்கள்”. 
நபி (ஸல்) மீது அன்பு நபித்தோழர்கள் போட்டி
இந்த ஈமானின் சுவையை அனுபவிப்பதற்காக நபித்தோழர்கள், நீ முந்தியா? நான் முந்தியா? என ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள்.போர்க் களத்திற்குப் போவதற்காக, அங்கு தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்வதற்காகப் போட்டி போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை நபி (ஸல்) அவர்களின் அன்பு தான். அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்
ü  உமர்(றழி) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள்.அல்லாஹ்வின்தூதரே!எனதுஉயிரைத்தவிர...... மற்றெல்லாத்தையும்விடதாங்களேஎனக்குஅதிகம் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றீர்கள்”! 
தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாகமாட்டார்என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர்(றழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள்என்னுயிரைவிட இப்பொழுது அதிகப்பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள். 
ஓ உமரே! இப்பொழுது தான்!என்று அண்ணலார் கூறினார்கள்.

Ø  அண்ணலாரின் தோழர் ஒருவர் ஒருதடவை அண்ணாலரின் சமூகத்திற்கு வந்து இறுதி நாள் எப்பொழுது வரும்? என்று கேட்டார். அந்த நாளை எதிர் பார்க்கும் நீர் அதற்குரிய எந்த சாதனையை திரட்டிவைத்திருக்கின்றீர்கள்! என்று அண்ணலார் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் நிறைய தொழுகைகளையும், நோன்புகளையும், தானதருமங்களையும் சேர்த்து வைக்கவில்லை! ஆனால், அல்லாஹ் மீதும், அவனுடைய தூதர் மீதும் எனதுள்ளத்தில் நிறைய அன்பு சேர்த்து வைத்துள்ளேன்!என்றார். 
Ø  எவரை நீர் நேசித்தீரோ, மறுமையில் அவருடனேயே இருப்பீர்கள்!என்றார்கள் பெருமானார் அவர்கள். அதாவது மனிதன், உலகில் எதை அதிகம் நேசிக்கின்றானோ, அதனுடன் தான் அவன் மறுமையில் எழுப்பப்படுவான், என்பது இதன் பொருளாகும்.
இந்த நபிமொழியை அண்ணலாரின் தோழர்கள் பலர் அறிவித்துள்ளனர். இவர்களில், அப்துல்லா இப்னு மஸ்ஊத்(றழி), அபூ மூஸா அஸ்அரி(றழி), ஸப்வான்(றழி), அபூதர்(றழி) பொன்றோரும் உள்ளனர். 
அண்ணலாரின் இந்த அறிவிப்பை கேட்டதும், அவர்களது தோழர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லாது போய் விட்டது. என்று அனஸ்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஏனெனில் அண்ணலாரின் அன்பு அவர்களின் தோழர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம் ஊடுருவி சென்றிருந்ததல்லவா
ஒருதடவைஅண்ணலாரின்(ஸப்வான்(றழி)    அண்ணலாரின் சமூகத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது உயிர், எனது பெருள், எனது குடும்பத்தார், உறவினர் அனைவரையும் விட தங்கள் மீது அதிக பாசம் இருந்து வருகின்றது. எனக்குத் தங்கள் நினைவு வந்து விட்டால், என்னால் அதனை பொறுக்க முடியாமல் போய்விடுகிறது. ‘’அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீது எந்த அளவு நேசம் கொண்டுள்ளேன் என்றால், தங்களது நினைவு வந்ததும் தங்களை உடனே வந்து பார்க்காவிடில் எங்கு எனது உயிரே பிரிந்துவிடுமோ! என்று கூட சந்தேகப்படவேண்டியதாக இருக்கிறது. உடனே தங்களை வந்து தரிசித்துக் கொள்ளாதவரை நிம்மதி ஏற்படுவதில்லை. இப்பொழுது எனக்கு ஒரே கவலை ஏட்பட்டுவிட்டது. மரணம்தங்களுக்கும்இருக்கிறது.ஏனெனில்,தங்களோஅல்லாஹ்வுடையதூதராக இருக்கின்றீர்கள். எனவே தூதர்களது அந்தஸ்தில் தரிசனம் கிடைக்காது போய்விடுமே!என்று முறையிட்டுக் கொண்டார்கள்.மறுமையில் பிரவேசித்தாலும் கூட நான் தாழ்ந்த அந்தஸ்தில் தான் இருந்து வேண்டி வரும். எனவே தங்களை தரிசிக்காத நிலையில் அந்த சுவர்க வாழ்வும் எனக்கு மிகக்கடினமாகத்தானே இருந்து வரும்
அண்ணலார் இதற்கு விடை கூறாது மௌனம் சாதித்ததார்கள். உடனே, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆஜராகி, கீழ்வரும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள் 
ومن يطع الله والرسول فألئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما
பொருள் : எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடந்து கொள்கிறார்ளோ அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், மெய்யடியார்கள், உயிர்தியாகிகள், நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்களே தோழமைக்கு சிறந்தவர்களாக இருக்கிறாகள் இந்தத் தோழமையானது அல்லாஹ்வுடைய ஓர் அருளாகும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
‘’எனக்குப் பின்னால் தோன்றக்கூடியவர்களிலும் என்னை அதிகம்நேசிக்கக் கூடியவர்கள் சிலர் இருப்பார்கள், அவர்கள் என்னை காண்பதற்காகவேண்டி தங்கள் உயிர், பொருள், குடும்பத்தார் அனைவரையும் அர்பணித்து விட இருப்பார்கள். (துர்ருள் மன்தூர்) 
ü  இப்னு காலித் (றழி) அவர்கள் கூறினார்கள். ‘’எனது தந்தை உறங்கச் சென்றால், அவர்களுக்கு உடனே நித்திரை வந்து விடாது; அண்ணலாரோடு கழித்த நாட்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்; அவர்களோடு. அன்போடு அளவளாவிக் கொண்டிருந்ததை நினைவு கூறுவார்கள். மக்கா தோழர்கள், மதீனா தோழர்கள் ஒவ்வருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நினைவு கூறுவார்கள். இவர்கள்தான் எனது உடன் பிறந்தார் உறவினர் எல்லாம்! என் மனம் இவர்கள் பக்கம்தான் ஈர்கப்படுகிறது. யாஅல்லாஹ்! எனக்கு விரைவில் மரணம் அழிப்பாயாக! நானும் இவர்களோடு போய் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று கூறியவாறே தூங்கிவிடுவார்கள்.
ü  ஒரு தடவை அபூபக்கர் (றழி) அவர்கள் அண்ணலாரிடம் கூறினார்கள்! 
‘’அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது தந்தை முஸ்லிமாவதைவிட, தங்கள் சிறிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன்! ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா? அதாவது தமது சந்தோஷத்திற்கு பதிலாக அண்ணலாரின் சந்​தோசத்தையே அவர்கள் அதிகம் விரும்பினார்கள். 
உமர் (றழி) அவர்கள், ஹழ்றத் அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘’எனது தந்தையார் முஸ்லிமாவதை விட தாங்கள் முஸ்லிமாவதைக் கொண்டு நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்! எனெனில் தாங்கள் முஸ்லிமாவது அண்ணலாருக்கு அதிகப் பிரியமாக இருக்கின்றது’’ என்று கூறினார்கள். 
ü  பிலால் (றழி) அவர்கள், மரணப்படுக்​கையில் இருந்தார்கள்; இறுதி மூச்சின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கணவரின் கடைசிக்கட்டத்தை காணச்சகியாது அவர்களது மனைவியார், ‘அதோ என் கதியே! என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தார்கள். அச்சமயம்,பிலால் (றழி) அவர்கள், தம் மரணத்தைக் குறித்து சந்தோஷமடைந்தவராக ‘’ ஸுப்ஹானல்லாஹ்! என்ன சுவையான விஷயம்! நான் நாளை அண்ணலாரை தரிசிப்பேன்! அவர்களது இதர தோழர்களையும் சந்திப்பேன்! ‘’என்று கூறினார்கள். 
ü  ஜைத்(றழி) அவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றி, அபூஸுப்யான் ஜைத் (றழி) அவர்களை நோக்கி, ‘’உம்மை விடுதலை செய்து விட்டு, உமக்குபதிலாக முஹம்மதுக்கு இந்தத்தண்டனை அளிப்பதாயிருந்தால் நீர், அதற்கு சம்மதிப்பீரா? என்று கேட்டார்! அதற்கு ஜைத் (றழி) அவர்கள் ‘’ அல்லாஹ்வின் மீது சத்யமாக, அண்ணலார், அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு சிறு முள் தைத்து விட்டதாக இருந்தால் கூட, நான் சுகமாயிருப்பதை என்னால் சகிக்க முடியாதே! என்று கூறினார்கள். அப்போது அபூஸுப்யான், ‘’முஹம்மதுவை அவர்களது தோழர்கள் நேசிப்பதைப்போல வேறெவரையும் யாரும் இப்படி நேசிப்பதை நான் கண்டதில்லை! ‘’என்று ஆச்சரியப்பட்டு கூறினார்கள். 

ü ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமி (ரலி),அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு உளூச் செய்ய தண்ணீர் மற்றும் தேவையானவற்றைக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள், “நீ என்னிடம் (தேவையானதைக்) கேள்என்று கூறினார்கள். நான் உங்களுடன் சுவனத்தில் இருப்பதையே கேட்கின்றேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “இதைத் தவிர வேறு ஒன்றுமில்லையா?” என்று கேட்டார்கள். அது மட்டும் தான்என்று கூறினேன். அப்படியானால் நீ அதிகமாகத் தொழுவதன் மூலம் உனக்கு அது கிடைப்பதற்கு என்னுடன் ஒத்துழைப்பாயாகஎன்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.நூல் : முஸ்லிம் 754, நஸயீ 1126, அபூதாவூத் 1125
இந்த நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள், கேள் என்றதும் பொன்னையும் பொருளையும் கேட்டு விடவில்லை. அந்த அன்சாரித் தோழர்களைப் போன்று மறுமையில் சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் பாக்கியத்தைத் தான் கேட்கின்றார்.

பெண்மணியின் அன்பு.

ü  நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பினால் ஒரு பெண் எப்படி நடந்து கொண்டார்? என்பதை அறியும் போது நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது.
ஒரு அன்ஸாரிப் பெண்மணியின் தந்தை, அவரின் சகோதரர், அவரின் கணவர்மூவரும்உஹதுப்போரில்நபியவர்களுடன்கலந்து கொண்டனர்.அதில்வீரமரணமும்அடைந்தனர்.
அந்தப்பெண் போர்க்களம் காண வந்தபோது, அந்த மூவரும் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நபி (ஸல்) எப்படி இருக்கிறார்கள்?’ என்றுதான் முதலில் விசாரித்தார். நபியை கண்கூடாக கண்ட போதுதான் அவரின் கவலை மாயமாகிப் போனது. இதுதான் மெய்யான அன்பு.

ü  அப்துல்லாஹ் என்ற அன்னையின் வீர மைந்தன் கூறுகிறார் : நானும் என் தாயும் உம்மு அம்மாராவே!  நபி (ஸல்) அவர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது என் தாய்க்குக் கடினமான வெட்டு விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து தாயின் காயத்திற்குக் கட்டிடச் சொன்னார்கள். பின்னர் உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக! உன் தாய் இங்கிருந்து போராடுவது (சில பெயர்களைக் கூறி) இன்னின்ன யுத்த வீரர்கள் இங்கிருந்து போராடுவதை விடச் சிறந்தது. அவர்களின் கணவர் இங்கிருந்து போராடுவது இன்னின்ன நபர்கள் போராடுவதை விடச் சிறந்தது. உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது என் தாய் அல்லாஹ்வின் தூதரே! சுவனத்திலும் நான் உங்களுக்கு அருகிலிருக்கப் பிரார்த்தியுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ{ம்ம இஜ்அல்ஹ{ம் ருபகாயீ பில் ஜன்னா - யா அல்லாஹ் இவர்களை சுவனத்திலும் என் நண்பர்களாக ஆக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்ட என் தாய் இந்தப் பாக்கியம் கிடைத்த பின் அழிந்து போகும் இந்தத் துன்யாவில் எமக்கு என்ன இழப்பு ஏற்பட்டால் தான் என்ன? என்று கூறி மீண்டும் போராடத் தொடங்கி விட்டார்கள் என்கிறார்கள்.
 இந்நிகழ்ச்சிகள் யாவும் அன்னை உம்மு அம்மாரா அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த பாசத்தையும், அவர்களைக் காப்பதில் கொண்டிருந்த கரிசனையையம், ஆண்களையும் மிஞ்சும் அவர்களின் வீரத்தையும், துணிவையும் எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு பெண் புலியாக நின்று போராடியுள்ளார்கள். இவர்களது ஈமானிய உணர்விலும் உறுதியிலும் ஒரு துளியாவது எம்மிடமிருந்தால் எம் வாழ்வில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்று எண்ணிப்பாருங்கள்.


குறிப்பு;- அண்ணலார் மீது அன்பு கொள்வது சம்மந்தமாக மார்க மேதைகள் பல அடையாளங்கள் கூறியுள்ளனர். காழீ இயாழ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். 
ஒரு மனிதன் ஒரு பொருளின் மீது மோகங் கொள்வதாயின், மற்றெல்லாவற்றையும் விட அதன் மீது அன்பு கொண்டே தீருவான் இதுவே அந்த அன்பின் உன்மையான அடயாளமாகும். அவ்வாறு இல்லையாயின், அந்த அன்பு வெறும் போலி அன்புதான்!’’ 
எனவே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்; செய்த முன்மாதிரிகளையே பின்பற்றிச் செய்ய வேண்டும். எதனை விட்டு தடுத்தார்​களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும். சுகத்திலும், துக்கத்திலும், வறுமையிலும்,செல்வத்திலும், எந்த நிலையிலும் அண்ணலாரையே பிள்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.


ﻻ ﺗﻄﺮﻭﻧﻲ ﻛﻤﺎ ﺃﻃﺮﺕ ﺍﻟﻨﺼﺎﺭﻯ ﺑﻦ ﻣﺮﻳﻢ ﻓﺈﻧﻤﺎ ﺃﻧﺎ ﻋﺒﺪﻩ ﻓﻘﻮﻟﻮﺍ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ’ ( ﺍﻟﺒﺨﺎﺭﻱ 3445: )
கிறிஸ்தவர்கள் மரியமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னைப் புகழாதீர்கள். நான் அவனின் அடிமைதான், எனவே அல்லாஹ்வின் அடிமை என்றும் திருத்தூதர் என்றும் செhல்லுங்கள்’ (புஹாரி : 3445)