இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்

ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை. ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல் : புகாரி : 1773 “ உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான் ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: புகாரி 1521 “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா ?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் , “ இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத் , பாவச் செயல் எதுவும் கலவ