மணப்பெண் தேடும் படலம்!
[ பெண் பார்க்கச் செல்லும் முன் பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து பார்ப்பது வழக்கம். காலம் மாறி மாப்பிள்ளை படிப்பு குடும்பம் பற்றி விசாரிப்பு அதிகமாகி விட்டது. ஆணை விட பெண் படிப்பு அதிகமாகிவிட்ட காலம். பெண் வீட்டார் வரதட்சணை தர விரும்பாத நிலை. படிக்காத குடுப்பத் தலைவன் வெளிநாடு சென்று படிக்காததால் தான் படும் சிரமம் தன பிள்ளைகளுக்கு வரக் கூடாதென்று தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்து விட்டமையால் அவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்களாக மாறிவிட்டனர். பணம், வரதட்சணை முதலியவைகள் பேசுவதென்றால் பெண் கொடுப்பதனை தவிர்த்து விடுகின்றனர். சிலர் படித்த பெண்கள் நமக்கு சரிவராது என்று நினைப்பதுமுண்டு. நமக்கு கிடைத்தது புரட்சியல்ல. நாம் அடைந்திருப்பது மறுமலர்ச்சி. மறுமலர்ச்சியில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதற்காக அனைத்துமே தவறு என்ற முடிவுக்கு வரக்கூடாது. வீட்டில் அடைபட்டிருந்த பெண்கள் வெளியில் வந்து படிக்க ஆரம்பித்த அருமையான மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது . படிக்கச் சென்ற ஒரு பெண் செய்த தவறினால் ஒட்டு மொத்த பெண்களுமே தவறு செய்து விடுவார்கள் என்பது எவ்வ