பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்
[ டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும். நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.] டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500-க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50-க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு ...