தொழுகையில் .... தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். 1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல். 2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது. 3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது. 4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது. 5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது. 7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல். 8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது. 9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது. 10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது. 11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது. 12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். 13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒத...