சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்
ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி بسم الله الرحمن الرحيم இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது ” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்து கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்து களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்து களை கட்டுப்படுத்த முடியவில்லை. சாலை விபத்து க்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்து களை தடுக்கமுடியாது. சாலை விபத்து கள் சம்பந்தமான ஓர் புள்ளி விபரம்: நம் இந்தியத் திருநாட்டில் 2011 ஆம் ஆண்டில் நடற்த சாலை விபத்து களில்...