உடல் தானமும்,இரத்த தானமும்
அ. முஹம்மது கான் பாகவி அறிவியலின் அதீத முன்னேற்றத்தால் , முற்காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த கனவுகள் பல தற்காலத்தில் நனவுகளாகி உள்ளன . அவற்றில் மருத்துவத் துறையின் சாதனைகள் திகைக்கவைக்கின்றன . போன உயிரை மீட்க முடியவில்லையே தவிர , மற்றெல்லா ஊகங்களும் நிஜங்களாகிவருகின்றன . அதே நேரத்தில் , சாதனைகளே சிலவேளைகளில் சோதனைகளாகி மனித இனத்தைச் சீரழிக்கவும் செய்கின்றன . ‘ புதிய கண்டுபிடிப்புகள் ’ என்று சொல்லி , மனித நாகரிகம் , பண்பாடு , சமய மரபுகள் , சமூக்க் கோட்பாடுகள் ஆகியஅனைத்துத்தார்மிகநெறிகளும்கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடுகின்றன . கடிவாளமில்லாத விலங்கு மட்டுமல்ல ; கட்டுப்பாடில்லாத மனித ஆராய்ச்சியும்பேரழிவுதான் . அணுஆயுதங்கள் , வேதிப்பொருட்கள் , மின்னணுச் சாதனங்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும் . இவற்றால் மனித குலம் அனுபவிக்கும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் ; மதுவைப்போல் . மருத்துவ ஆராய்ச்சி – குறிப்பாக அலோபதி சிகிச்சை முறை - என்பது உடனுக்குடன் பலன் தந்தாலும் அதன் பக்க ...