ரமளானை வரவேற்போம்..

ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன , நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன , ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன . ( ஹதீஸ் ) இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான் , இது வானம் , பூமியின் வசந்த காலமாக இருக்கிறது . எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா !!! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது. ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம் '' (அல்பகரா 2:183). ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் ம...