வெளிவந்தது கொகா கோலா ரகசியம் முஸ்லீம்களே உஷார்!
RASMIN M.I.Sc உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது. கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது. இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது. கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்? கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது. 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடு...