ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்கள் &வழி முறைகள்
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய்யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள். இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன். அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்ப...