இஸ்லாத்தின் பார்வையில் கடன்
மனிதர்கள், படைத்த இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எவ்வாறு இஸ்லாத்தில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளனவோ அதே போன்று ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமிற்கோ அல்லது அடுத்த மதத்தை சேர்ந்தவருக்கோ என்ன கடமைகள் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அம்சங்களும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன ஒரு அடியான் மற்றுமொரு அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான் என இம்மார்க்கம் இயம்புகின்றது அந்தளவு பிறருக்கு உதவும் காரியத்தை எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தருகின்றது இஸ்லாத்தில் சகோதரத்துவ வாஞ்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இஸ்லாத்தில் இனவேறுபாடு இல்லை ! இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை ! இஸ்லாத்தில் குலப்பெருமை இல்லை ! இவ்வாறு இஸ்லாத்தின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்னல்படுகிறான் என்றால் அவனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமே கடனுதவி ஆகும் ஒரு மனிதனுக்கு கடனுதவி வழங்கினால் அவனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை அதே போன்று அவன் தனது கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு ஏற்படும் வருத்தத்திற்க...