இஸ்லாமிய பார்வையில் உழைப்பின் சிறப்பு
ஹலாலான உழைப்பின் சிறப்பு இஸ்லாம், மறு உலகத்தின் தயாரிப்பான வணக்க வழிபாடுகளை ஆர்வ மூட்டவதைப் போலவே உலக வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்ற ஆகுமான உழைப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். "அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது" (76:15) உழைப்பதை வலியுறுத்தும் நபிமொழிகள்: ‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூ...