இன்றைய சூழலில்முஸ்லிம்களும் தற்காப்பு கலையும்
ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் , மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இருக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். ஏனெனில் , இளைஞர்கள் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி ஒழுக்க சீர் கேடான குணா திசை/ செயல் பாடுகளால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை . وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (30 ) இந்த சமுதாயத்தினர் குர்ஆனை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த சமுதாயத்தினர் மீது மிகுந்தபாசம் கொண்ட நபி(ஸல்) அவர்களே குற்றம் சுமத்தி கூறுவார்கள் ” என்ற கீழ் தரமான அளவிற்கு முஸ்லிம்கள் குர்ஆனுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டு வாழ்ந்தால் அல்லாஹ்வின் உதவிகள் இந்தசமுதாயத்திற்கு எப்படி வரும் ? நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு : ...