ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை
ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை பள்ளிவாசல் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வழியுமில்லை சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை. பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் முக்கியப்பணி. இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை. ஒரு மஹல்லாவில் பல்வேறு சிந்தனைகள்கொண்ட மக்கள், பலதரப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதென்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு நிமிடமும் ஒருவித அச்சத்தோடும் ப...