”தலாக்” – விவாகரத்துச் சட்டம் ஓர் விளக்கம்.
தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – விவாகாரத்தைப் பயன்படுத்தியேயாக வேண்டும் என இஸ்லாம், முஸ்லிம்களை வற்புறுத்துவது போல் – எங்காவது நடக்கும் தலாக் நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, ”பெண்னின கொடுமை” என்று மொத்த பழியையும் இஸ்லாத்தை நோக்கி வீசப்படுகிறது. ”அல்லாஹ் அனுமதித்தவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்” (நபிமொழி) என்று வேண்டா வெறுப்பிலேயே ”தலாக்கை” இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. தலாக் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கு முன், திருமணப் பந்தம் பற்றி இஸ்லாம் கூறுவதை அறிந்த கொள்வோம். வாழ்க்கை ஒப்பந்தம். இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்