ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி!
ஒரே கேள்வி! இரு பதில்கள்!! [ .... கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் .... ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம். தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள். கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் "கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம். தகவல் புரட்சி விண்ணை ...