மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்..?
மௌலவி M. பஷீர் ஃபிர்தௌஸி இஸ்லாம் கல்விக்கும் ஞானத்திர்க்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம் கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தை பாதுகாக்கவும் அதனை பரப்புவதர்க்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன் 29:48,49) இந்த வசனத்திர்க்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்: குர்ஆன் என்பது ஏவல், விலக்கல்,செய்திகள் என்று சத்தியத்தை தெரிவிக்கக்கூடிய தெளிவான வசனங்களாகும் இதனை அறிஞர்கள் தங்களது உள்ளத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் இக்குர்ஆனை மனனம் செய்வதையும், ஓதுவதையும்,இன்னும் அதனை விளக்குவதையும் அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக்கியுள்ளான். பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கற்ற...