மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? அல்லது ரஃயியா
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாகும். ரஃயி என்றால் மனிதனின் சுய சிந்தனையின் மூலம் வந்தவைகளாகும். மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு வஹியின் மூலமாக கொடுக்கப்பட்டதாகும். வஹியாக கொடுக்கப்பட்ட மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத, அல்லது நபியவர்கள் அனுமதி வழங்காத எந்த ஒன்றையும் மார்க்கமாக செயல் படுத்த முடியாது. அப்படி செயல் படுத்தினால் அவர்கள் தெளிவான வழிகேடர்கள் என்று அல்லாஹ் பின் வருமாறு எச்சரிக்கிறான். “மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(33-36) மார்க்க விவகாரங்களில் நாம் யாரை பின் பற்ற வேண்டும் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் மூலம் அவதானிப்போம். அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படல் “நம்பிக்கை கொண்டவர்க...