குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை
ரஸ்மின் MISc நன்றி - frtj இறுதித் தூதராக முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது: 'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்). இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27. இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போ