ஹிஜாப்… ஒழுக்க வாழ்வின் அடையாளம்!!
மனித சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற எண்ணிலடங்கா அருட்கொடைகளில் மிகவும் மகத்துவம் வாய்ந்தது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறிமுறை தான அந்த வாழ்க்கை நெறிமுறைகளை நம்பி , ஏற்றுக்கொண்டு செயலாற்றுகின்ற மனிதர்களை முஸ்லிம்கள் – இறைவனுக்கு கீழ்ப்படிவோர் என்றும் , முஃமின்கள் – இறைநம்பிக்கையாளர்கள் என்றும் இஸ்லாம் அழைக்கின்றது . இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை பிற்போக்குத்தனமாகவும் , அடிப்படை வாதமாகவும் இஸ்லாமிய அடையாளங்களை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிற ஒரு முஸ்லிமை பயங்கரவாதியாகவும் சித்தரிக்கிற ஓர் நச்சு உலகத்திலே வாழ்ந்து வருகின்றோம் . அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின...