இஸ்லாத்தில் ஹராமானஉணவு

             
இறைவன், மனிதனது பிரயோசனத்திற்காக இயற்கையான சூழலையும் எல்லா விலங்குகளையும் கனிவர்க்கங்களையும் தாவரங்களையும் ஆக்கியுள்ளான். ஏனெனில், அவைகளின் மூலம் உண்டு, பருகி, உடுத்து உறங்கி, ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே. ஆனால், மனிதனுடைய உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக வேண்டியும் தனது பரம்பரையை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் ஏனைய மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். திருக் குர்ஆன்-2:173)-                                                                                                அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான். - (திருக் குர்ஆன்-6:119)
 ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்
1
. ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்
2.ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்
3.ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்குரிய ஏக அதிகாரமாகும்
4.ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.
 1)ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்
இஸ்லாம் ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வழிகள் அனைத்தையும் தடைசெய்வது போன்றே ஹராத்தைச் செய்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதையும் தடை செய்துள்ளது. பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது ஹராமாக்கியிருந்த சில விஷயங்களை தந்திரமான வழிகளைக் கையாண்டு ஹலாலாக்கிக் கொண்டதை இஸ்லாம் கண்டித்தது. நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
'யஹூதிகள் புரிந்த குற்றச் செயல்களை நீங்கள் செய்யாதீர்கள். அவர்கள் மிக அற்பமான தந்திர வழிகளைக் கையாண்டு அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாக்கிக் கொண்டார்கள்.' அல்லாஹ் யஹூதிகளுக்கு சனிக்கிழமை மீன் பிடிப்பதைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் தந்திரமான முறையில் இத்தடையை மீறினார்கள். வெள்ளிக்கிழமை குழிகளை வெட்டி சனிக்கிழமை அதில் மீன்கள் விழ வழிசெய்தார்கள். பின்னர் ஞாயிற்றுக்கிழமை போய் அவற்றைப் பிடித்து வந்தார்கள். இவ்வாறு ஒரு ஹராமாக்கப்பட்ட விடயத்தை தந்திரமான வழிகளைக் கையாண்டு செய்வதும் இஸ்லாமிய நோக்கில் ஹராமாகவே கொள்ளப்படும்.
ஹராமாக்கப்பட்ட ஒரு பொருளை வேறு பெயரால் குறிப்பிட்டு அதனை ஹலாலாக்க முயல்வது, ஒன்றின் உண்மை நிலை அப்படியே இருக்க அதன் வெளித் தோற்றத்தை மாற்றி ஹராமான ஒன்றை ஹலாலாக்க முயல்வது அனைத்தும் பாவமான ஹராமான தந்திர வழிகளாகும். பொருள் மாறாதிருக்க பெயரை மாற்றுவதிலோ, உண்மை நிலை அப்படியே இருக்க உருவத்தை மாற்றுவதிலோ எத்தகைய அர்த்தமும் இல்லை. அதனால் ஹராம் என்ற நிலை மாறப்போவதுமில்லை.
வட்டிக்கும் மதுபானத்திற்கும் வேறு பெயர்களைச் சூட்டுவதால் வட்டியினாலும் மதுபானத்தினாலும் கிடைக்கும் பாவம் நீங்கப் போவதில்லை.
'எனது சமூகத்தில் ஒரு பிரிவினர் மதுவை ஆகுமாக்கிக் கொள்வார்கள் அதற்கு வேறு பெயரிட்டு அழைப்பார்கள்' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  .(அஹ்மத்)
இன்று ஆபாச நடனத்தைக் கலை என்றும் மதுபானத்தை ஆன்மீகப் பானம் என்றும் வட்டியை பயன்பாடு என்றும் வெவ்வேறு நாகரிக பெயர்கள் கொண்டு அழைப்பதன் மூலம் அவற்றை ஹலாலாக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நாம் இதுவரை விளக்கிய சட்டவிதிக்கு நல்ல உதாரணங்களாகும்.
 2ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்
இதுவும் ஹலால் ஹராம் தொடர்பான ஒரு முக்கிய விதியாகும். இஸ்லாம் ஒன்றை ஹராமாக்குகின்ற போது அதற்கு இட்டுச் செல்லும் வழிகளையும் அடைத்து விடுகின்றது. உதாரணமாக விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்யும் போது அதற்கு வழிவகுக்கக் கூடிய ஆண், பெண் சுதந்திரமாகக் கலந்து பழகுதல், நிர்வாணப்படங்கள், உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள், ஆபாச இலக்கியங்கள், பெண்கள் தமது கவர்ச்சியை வெளிக்காட்டல் போன்றவற்றையும் தடை செய்கின்றது.
இந்த அடிப்படையிலேயே ஹராத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்துமே ஹராம் என்ற அடிப்படை விதியை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் நிறுவினார்கள்.
இந்தவகையில் ஹராத்திற்கான பாவம் அதனைச் செய்தவரை மட்டும் சாராது. அதற்கு ஏதோ ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் அனைவரையும் அது சாரும். தான் பங்கெடுத்துக் கொண்ட அளவுக்கு ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படுவார். மதுவைப்பற்றி நபி ஸல் அவர்கள் கூறும்போது     மது அருந்துபவரையும் மது பிழிபவரையும்       அதனைச் சுமந்து செல்பவரையும் சபித்தார்கள்.               வட்டியைப் பொறுத்தவரையில் வட்டி சாப்பிடுபவரையும், வட்டி கொடுப்பவரையும், வட்டிக்கணக்கு எழுது பவரையும், அதற்குச் சாட்சியாக இருப்பவரையும் அன்னார் சபித்துள்ளார்கள். இவ்வாறுதான் ஹராத்திற்குத் துணை புரியக்கூடியவர்கள் எல்லோரும் அதன் பாவத்தில் பங்குகொள்கின்றார்கள்.
3.ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்குரிய ஏக அதிகாரமாகும்
இந்த சட்டவிதி, ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது எனக் கூறுகின்றது. மனிதர்களில் எவருக்கும் இந்த உரிமை வழங்கப்படவில்லை. மதத்தலைவர்களுக்கோ, மன்னர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஹலால் ஹராமை நிர்ணயிக்கும் உரிமை இல்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறு நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் ருபூபிய்யத் என்ற தனித்துவமான பண்பில் கைவைத்தவராகக் கருதப்படுவதுடன் அவரை ஏற்றுக்கொள்வோர் அவரை அல்லாஹ்வுக்கு இணை வைத்தோராகவும் கொள்ளப்படுவார்கள். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
  أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
''அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக இயற்றித்தரும் அல்லாஹ்வுக்கு இணையாகக் கொள்ளத்தக்கவர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா?'' (42: 21)
தமது மதகுருமாருக்கு சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொடுத்த அஹ்லுல் கிதாப்களை அல்குர்ஆன் கண்டிக்கின்றது.

சட்டமியற்றும் அதிகாரத்தில் தலையிட்ட முஷ்ரிக்களையும் குர்ஆன்கண்டிக்கிறது.

 قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللَّهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى اللَّهِ تَفْتَرُونَ

''அல்லாஹ் உங்களுக்கு உணவுப் பொருட்களாக இறக்கிய வற்றை நீங்கள் ஹராம் ஹலால் என்று விதித்துக் கொள்கிறீர்களா? (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்கு இதனை அனுமதித்து உள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?'' (10;59)
   وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَٰذَا حَلَالٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ ۚ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (16:116)
இந்த வகையில் ஹலால் ஹராமை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது. அல்குர்ஆன் மூலமோ அல்லது தனது தூதரின் ஊடாகவோ இப்பணியை அல்லாஹ் செய்கின்றான் என்பதை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் (ஃபுகஹாக்கள்) தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். தமது பணி இறை சட்டங்களை விளக்குவதே அன்றி சட்டமியற்றுவதல்ல என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அல்லாஹ் ஹலாலாக்கியவை எவை ஹராமாக்கியவை எவை என்பதை தெளிவுபடுத்துவதோடு அவர்களின் பணி..
''உங்களுக்கு ஹராமாக்கியவற்றை அவன் உங்களுக்கு விளக்கியுள்ளான்.'' (அல்குர்ஆன் - அன்ஆம்: 120)
இதனால்தான் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தில் தலையிட்ட குற்றத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் பல இமாம்கள், அறிஞர்கள் தாம் பூரண தகுதியுடையோராக இருந்த நிலையிலும் ஃபத்வா - மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டினார்கள்.
4ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும்ஷிர்க்காகும்
ஹலாலை ஹராமாக்குவது ஷிர்க் சார்ந்த ஒரு செயலாகும். எனவேதான் ஜாஹிலிய்யாக்கால முஷ்ரிக்கள் மிருகங்கள், தாவரங்களில் சிலவற்றை தமக்குத் தாமே ஹராமாக்கிக் கொண்டிருந்தமையை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மதீனாவில் சிலர் பேணுதல் என்ற பெயரில் ஒருவகை தீவிரப் போக்கின் காரணமாக அல்லாஹ் ஆகுமாக்கிய சிலவற்றை தம்மீது ஹராமாக்கிக் கொண்டு வாழ முற்பட்டபோது அந்தப் போக்கைக் கண்டித்து சில அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின.
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
5:87முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
  وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்5:88.
 ஒவ்வொரு முஃமினும் சாப்பிடும் முன்பு நாம் ஹலாலான உணவை உட்கொள்கிறோமா? என்பதை சற்று யோசிக்க வேண்டும்.
 மாமிச உணவாக இருப்பின் இது முஸ்லிமால் அறுக்கும் முறைப்பேணி அறுக்கப்பட்டதா?இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிமல்லாதோர் அறுத்தது, செத்த மிருகங்கள், வட்டி போன்ற ஹராமான பொருள் கொண்டு வாங்கப்பட்டவை போன்றதெல்லாம் ஹராமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் “அல்லாஹ் உங்களுக்கு அளித்த பரிசுத்தமான வற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்” (7:88) 
. நாம் ஹலாலான உணவை உட்கொள்வதின் மூலம் நல் அமல்களின் வாய்ப்பும் ஹராமான உணவில் தீய அமல்களின் தூண்டுதலும் இருக்கின்றது. மேலும் ஹராமான உணவை உட் கொண்டால் நமது அமல்களும் துஆக்களும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. 
 இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ அல்லது பொது சொத்துகளில் கை வைத்தல், பிறரிடம் வற்புறுத்திக் கேட்டு பெறுதல், தேவையின்றி யாசகம் கேட்டல் போன்ற ஹராமான வழியின் மூலமாகவோ கிடைத்தாலும் சரியே! பின்னர் அவன் அதிலிருந்தே உண்பான், உடுத்துவான், வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான், அதை வாடகைக்கு அமர்த்துவான், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவான், ஹராமைக் கொண்டே தன் வயிற்றை நிரப்பிக் கொள்வான் .
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘ஹராமிலே வளர்ந்த ஒவ்வொரு உடலுக்கும் நரகமே பொருத்தமாகும் (தப்ரானி)
மறுமையில் அவனுடைய செல்வம் பற்றிஅதை எங்கிருந்து சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவழித்தாய்? என்று அவனிடம் விசாரணை செய்யப்படும். அங்குதான் அவனுக்கு நஷ்டமும், நாசமும் காத்திருக்கிறது. எனவே யாரிடம் ஹராமான பொருள் எஞ்சியிருக்கிறதோ அவர் விரைந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளட்டும். அது ஒரு மனிதனுக்குரிய உரிமையாக இருந்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அதை அவரிடம் விரைந்து திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரட்டும். அந்த மறுமை நாள் வந்து விட்டாலோ விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும்.
சிறு குறிப்புகள்
0-   களிமண் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   நஜிஸான ஒன்றை உண்பது, பருகுவது ஹராமாகும்.
0-   மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியவைகள் ஹராமாகும். உதாரணமாக கொழுப்புச் சாப்பாடுகளை உண்பது தீங்கு விளைவிக்கும் என்ற நிலையிலுள்ள நோயாளி அதைச் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   எந்தவொரு கால்நடைகளினதும் விதையைச் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   மதுபானம், அல்லது எந்தவொரு மயக்கம் ஏற்படுத்தும் திரவத்தையோ குடிப்பது ஹராமாகும்.
0-   ஒரு முஸ்லிம் பசி, அல்லது தாகத்தின் காரணமாக மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு நீரை, அல்லது உணவை கொடுத்து மரணத்திலிருந்து பாதுகாப்பது கடமையாகும்.
0-   மற்றவர்களின் பொருத்தமின்றி அவர்களின் உணவுகளைச் சாப்பிடுவது ஹராமாகும். அவர்கள் காபிராக இருந்தாலும் சரி. அவர்களின் உடமைகள் மதிப்புக்குரியதாகும்.
0-   இறைச்சி வகையல்லாத உணவுகள், குறிப்பாக தாவர, தானிய, பழவகை உணவுகள், ஹலாலான மிருகங்களிலிருந்து எடுக்கப்ட்ட பாலினால் செய்யப்பட் தயிர், சீஸ் (பனீர்) பட்டர், ஹலாலான பறவைகளின் முட்டையினால் செய்யப்பட்ட உணவுகள், பான், உரொட்டி, பிஸ்கேட், சொக்லேட், சுவிங்கியம், இனிப்புப் பண்டங்கள், மற்றும் மிருக இறைச்சியினால் செய்யப்படாத ஏனைய உணவு வகைகள் சுத்தமானதாகும். அவைகளை உண்பது ஹலாலாகும்.

கே.எஃப்.சி.(KFC),மெக்டோனால்ட்(MC DONALD) சிக்கன்:
ஓர் அதிர்ச்சி தகவல்!
பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது..
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
                            فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِآيَاتِهِ مُؤْمِنِينَ
 (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்6:118.
  وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
6:121எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

  kfcகே.எஃப்.சி.(KFC) மற்றும் மெக்டோனால்ட்(MCDONALD) போன்ற புகழ்பெற்ற பிரைடு சிக்கன் பாஸ்ட் பூட் கடைகளில் விற்கப்படும் கோழி கறிகள் எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்பதை பார்பவர்கள் மறுமுறை மறந்துகூட அந்த கடைகள் பக்கம் போக மாட்டார்கள்.
கே.எஃப்.சி. கோழிகளில் தடவப்படும் மசாலாவில் வாத்துகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை கொழுப்பு சேர்க்கபடுகிறது. இந்த கொழுப்பானது தயாரிக்கப்படும் விதம் கொடுமையானது. வாத்துகளுக்கு உணவுகள் கட்டாயமாக தினிக்கபடுகிறது. இவ்வாறு உட்கொள்ளும் வாத்துகள் சில நேரங்களில் செத்தும் போய் விடுகின்றன. இவ்வாறு தீவனம் திணிக்கப்பட்ட வாத்துகள் பெருத்து உப்பி போய், அதிக எடையுடன் ஆன பிறகு அவைகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்புகள் எடுக்கபடுகின்றன.
அந்த கொழுப்புகள் kfc கறி கோழிகளில் மசாலாவில் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே சில இஸ்லாமிய அமைப்புகள் kfc ஹராம் உணவு என்று அறிவித்துள்ளது. எனவே இந்த உணவை தவிர்ப்பது சிறந்தது.
மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.
இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய ஆய்வகத்தினர்.
 கான்பெர்ரா:ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் டிவிஸ்டர் வ்ராப்பர் என உணவை சாப்பிட்டதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்ட ஆஸ்திரேலிய சிறுமை மோனிகா ஸமானின் குடும்பத்தினருக்கு இத்தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005-ஆம் ஆண்டு சிட்னியில் கே.எஃப்.சியின் ரெஸ்ட்ராண்டில் ட்விஸ்டர் வ்ராப்பரை சாப்பிட்ட சிறுமிக்கு நச்சுத்தன்மை ஏற்பட்ட மூளை பாதிப்படைந்தது. பேசும் சக்தியையும், நடக்கும் சக்தியையும் இழந்த அச்சிறுமி வீல்சேரில் நடமாடுகிறார்.
நீதிமன்ற தீர்ப்பில் நிராசை அடைந்துள்ளதாகவும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எஃப்.சி அறிவித்துள்ளது. உணவின் தரம் குறித்து உறுதிச்செய்வதில் கே.எஃப்.சி நிறுவனம் தோல்வியை தழுவியதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கே.எஃப்.சி, மெக்டொனால்ட் அபாயம்!!
துரித உணவுகள் என்பவை நவீன வாழ்க்கையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி வருகிறது!
இவற்றில் அதிக அளவு
1.கலோரி    2.கொழுப்பு   3.இனிப்பு    4.உப்பு சோடியம்   5.மாவுச்சத்து   6.புரதம்
காணப்படுவதே இவற்றை நாம் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்கள்.
இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
1.உடல் எடை அதிகரிப்பு    2.சர்க்கரை நோய்    3.மார்பகப்புற்று நோய்    4.இதய நோய்கள்   5.இடத்த அழுத்தம்
கடந்த 30 வருடங்களில்
1. எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
2.60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
3.கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!.! 
  
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001