1.கணவனைக் கவரும் வழிகள் 40


உங்கள் கணவரை முந்தானைக்குள் முடிந்துகொள்ள வேண்டுமா?
"அடடா! இதைவிட எங்களுக்கு சந்தோஷமான செய்தி ஏதேனும் இருக்க முடியுமா?" பெண்கள் தரப்பிலிருந்து ஏராளமான குரல்....
இதோ உங்களுக்காக....
1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.
2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.
3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.
5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.
6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.
7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.
8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.
9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.
10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.
11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.
12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.
13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.
14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.
15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.
16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.
17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.
20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.
22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.
23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.
24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.
25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.
26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.
27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.
28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.
30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.
32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.
33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.
34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.
35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.
36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.
37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.
40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சித்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன" (அல்குர்ஆன் 30:21)
மனிதன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறான்.
அவற்றிலிருந்து அவன் மன அமைதி பெறுவதற்கு அவனது துணைவி பேருதவியாக இருப்பாள் என்று திருக்குர்ஆன் கூறி திருமண உறவின் அவசியத்தை விளக்குகிறது. மேலும் "நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்ககூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை" (அல்குர்ஆன் 40:61)
பகலில் உழைக்கும் மனிதனுக்கு இரவு என்பது அமைதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் உழைப்பவன் இரவில் உறங்கி எழும்போது அவன் அமைதி பெறுகிறான். இது போல் மனிதனுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்துள்ளாள்.
இவ்வுலக வாழ்வில் திருமணம் மனிதனுக்கு அவசியம் என்பதால் இவ்வுலகில் மனிதர்களுக்கு நல்வழிகாட்ட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் உட்பட அனைவரும் திருமணம் செய்துள்ளார்கள்.
"உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
திருமண உறவைத் தவிர்க்க முடியுமானால் முதலில் அதை நடைமுறைப்படுத்திக் காட்ட சாத்தியமானவர்கள் இறைத் தூதர்கள்தான். ஆனால் திருமண உறவு தவிர்க்க முடியாதது என்பதால் இறைத் தூதர்கள் அனைவருக்கும் மனைவி மக்களை அல்லாஹ் கொடுத்துள்ளான்.
PDF
Print
E-mail

அன்பு! இறைவன் அளித்துள்ள முக்கியமான, மகத்தான அருட்கொடை. இறைவன் தனது படைப்பினங்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகளை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகின்றான் என்பது நபிமொழி.
உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.
இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று மனைவியிடம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!! எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
1. உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள். ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.
2. உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.
3. வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். (வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)
4. வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!
6. கணவனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
7. உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விஷயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.
8. உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு! ஆடம்பரம் வேண்டாம். கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.
9. சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ, இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.
10. உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.
11. நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?
12. வீட்டை சந்தோஷமான இடமாக வைத்திருங்கள். "ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்" என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.
13. கணவன் சில காகிதங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத் தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.
14. உங்களுடைய சந்தோஷங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோஷமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.
15. உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.
16. கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விஷயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை, படுக்கையறையில் மட்டும்!!!
4.சண்டையா? சீக்கிரம் சமாதானமாகி விடுங்களேன்!

[ சண்டை போடாத தம்பதியர் யாரும் இருக்கமாட்டார்கள். சண்டை இல்லாவிட்டால் வாழ்க்கையானது உப்புச் சப்பில்லாத உணவாகப் போய்விடும். ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், நன்றாக கத்தி சண்டை போடுங்கள், எந்த சமயத்திலும் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். சில மணிநேரம் கழித்து ஏதாவது சாக்கு வைத்து பேசி சமாதானத்திற்கு வழி தேடுங்கள். இதுதான் உண்மையான தாம்பத்திற்கு வெற்றி ]
சண்டை போடாத தம்பதியர் யாரும் இருக்கமாட்டார்கள். சண்டை இல்லாவிட்டால் வாழ்க்கையானது உப்புச் சப்பில்லாத உணவாகப் போய்விடும்.
தம்பதியரிடையே சண்டை வர பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை, உறவினர்களை கவனிப்பது, ஈகோ, சந்தேகம் போன்ற காரணங்களினால் சண்டை ஏற்படும். தவிர்க்க முடியாத காரணங்களினால் சண்டை ஏற்பட்டால் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் அப்புறம் அதுவே விரிசலுக்கு காரணமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
ü  தகவல் தொடர்பு குறை
தம்பதியரிடையே பேச்சுவார்த்தை குறைந்தாலே ஏதோ சிக்கல் என்று அர்த்தம். இதுவே சண்டைக்கு முதல் விதையாக அமைகிறது. எனவே எதுவென்றாலும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்று எப்போது நிற்காதீர்கள். வாழ்க்கைத் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துக் கேளுங்கள். சில விசயங்களை பேசுவதை கேளுங்கள் இணக்கம் அதிகமாகி சண்டை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ü  பொருளாதாரப் பிரச்சினைகள்
தம்பதியரிடையே சண்டை வர முக்கியகாரணியாக பணப்பிரச்சினை முன்நிற்கும். அதிகம் செலவு செய்வது யார் என்பதில் தொடங்கி, எதனால் செலவு ஏற்படுகிறது என்பது வரை அலசி ஆராய்ந்து சண்டை போடுவார்கள். எனவே பணத்தை வெளிப்படையாக கையாளுங்கள் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை.
ü  உறவுகளை கவனிப்பது
மனைவி வீட்டு உறவுகளோ, கணவர் வீட்டு உறவுகளோ இருவரையும் சமமாக மதிக்கும் பட்சத்தில் எந்தவித பிரச்சினைகளும் எழ வாய்ப்பே இல்லை. தன் வீட்டு உறவுகளை மட்டும் மதித்துவிட்டு துணையின் வீட்டு உறவுகளை தவிர்த்தால் நிச்சயம் சண்டை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
ü  சமாதானமாகி விடுங்கள்
சண்டை வந்தால் அதை வெளிப்படுத்திவிடுங்கள். மவுனமாக இருந்துவிட்டால் அப்புறம் சிக்கல் அதிகமாகி அதுவே தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிடும். ஏனெனில், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமாகிவிடுவது பெரும் ஆபத்தாகும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி பின்னர் இருவருக்கும் இடையே எதிர்மறை எண்ணங்கள் குடியேற காரணமாகிவிடும்.
ü  ஈகோ வேண்டாம்
தம்பதியர் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.
எனவே ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், நன்றாக கத்தி சண்டை போடுங்கள், எந்த சமயத்திலும் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். சில மணிநேரம் கழித்து ஏதாவது சாக்கு வைத்து பேசி சமாதானத்திற்கு வழி தேடுங்கள். இதுதான் உண்மையான தாம்பத்திற்கு வெற்றி என்கின்றனர் நிபுணர்கள்
5.வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா? விட்டுப் பிடிங்க!
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சிக்கக் கூடாது.
வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் இப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம்....
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.
வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க..
உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதில் சொல்வது தெரிகிறது.
கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..
காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.
உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.
உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.
சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.
கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை...

PDF
Print
E-mail

[ காதல் உணர்வுகள் எல்லாருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள். இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்களிடமும் இருந்தது. அதை நீங்கள் உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் புதைத்து வைத்துவிட்டீர்கள். அதை தோண்டி எடுக்க வேண்டும்.
அதெல்லாம் மறந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். அதற்கான வழி முறைகளை சுருக்கமாகச் சொல்கிறேன்.
அவர் வெளியில் செல்லும்போது வழியனுப்பிவைப்பது, இடையில் போனில் கூப்பிட்டுப் பேசுவது, சாப்பிட்டாயிற்றா? அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளாதே என்பது மாதிரி கரிசணம் காட்டுவது இப்படி.. எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள்.
மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவளைக் கூப்பிட்டு, உன் இடுப்பு அழகு, உன் மூக்குதான் ரொம்ப அழகு.. நீ சிரிக்கும்போது நட்சத்திரம்போல் ஜொலிக்கிறாய்... என உங்களவளின் உடல் அழகைப் பற்றியோ அல்லது அவரது உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன்! தனது மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு தான் அவருக்கு வரும். அந்த உடையைப் பார்க்கும்போதெல்லாம் இது அவளுக்கு நீங்கள் சொன்னதைத்தான் அவள் நினைத்துப் பார்ப்பாள். அவளிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும்.]
வசியப்படுத்துவது எப்படி?
ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் இன்றும்கூட கிராமத்திலும், ஏன் நகரத்திலும்கூட பல பெண்கள் சாமியாடிகளிடம் குறிகேட்கச் செல்வதும், வசிய மருந்துகளைப் பயன்படுத்துவதும், ஜோதிடர்களைத் தேடி ஓடுவதும், முழந்தாளிட்டு மணிக்கணக்கில் பிரார்த்தனை செய்வதும் பல வீடுகளில் சர்வசாதாரணமாக நடக்கிறது.
அதேபோல வீட்டில் மனைவியோடு பிரச்சினை ஏற்பட்டால் அல்லது நெருக்கம் குறைந்து போனால் மது மற்றும் பிற மங்கையரை நாடுதல் போன்றவற்றில் ஆண்கள் ஈடுபடுவதையும் காணலாம். பிரச்சினை இதையும் தாண்டினால்தான் விவாகரத்து போன்றவை நடக்கின்றன.
நீங்கள் கணவனாக, அல்லது மனைவியாக... யாராக இருந்தாலும் உங்கள் இருவரில் யார் பிரச்சினைக்கு காரணமாக இருந்தாலும் அதனால் நீங்கள் இருவருமே பாதிக்கப்படுவீர்கள்.
அவ்வாறே, பிரச்சினையைத் தீர்க்க இருவரில் யார் ஒருவர் முன் வந்தாலும்... விட்டுக்கொடுத்தாலும் அதனால் வரும் இன்பம் இருவருக்குமே கிடைக்கும்.
இப்படியொரு இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்ப சிம்பிள்...
நீங்கள் உங்களவரை வசியப் படுத்தவேண்டும்!
வசியப் படுத்துதல் என்றால் உடனே ஏதோ மந்திர மையை தலையில் தடவு வது அல்லது ஏதோ மருந்தை இட்லியில் வைத்துக் கொடுப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவரோ, மனோ தத்துவ நிபுணரோ செய்யும் மெஸ்மெரி சத்தையும், ஹிப்னாடிசத்தையும் கற்பனை செய்து பார்க்கிறார்கள்.
மாறாக, பேச்சால், செயலால், அன்பால் கவர்வதுதான் வசியப்படுத்துவது.நீங்கள் அவரை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.
மற்றவர்களை விட உங்களவர்தான் விசேஷமானவர் என நீங்கள் நினைத் திருப்பதாக அவருக்கு உணர்த்த வேண்டும், நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அவரது பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
அதாவது அவரை சந்தித்த போது நீங்கள் காட்டிய ரொமான்ஸ் உணர்வை மறுபடி புதுப்பிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் மறைந்து போகும்.
இனிமையான இல்லறத்தின் உயிர்நாடியான ரொமான்சை உருவாக்குங்கள்:
கணவன் மனைவியிடையே காதல் உணர்வுகளை உண்டாக்குவதற்கு எது தடையாக இருக்கிறதோ அதை முதலில் தூக்கியெறியுங்கள். திருமணமான புதிதில் அவர் கோபித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வலியச் சென்று கோபத்தைத் தணித்திருப்பீர்களே.. அவர் உங்களை சத்தம்போட்டு திட்டி யிருந்தால் பதிலுக்கு எதிர்த்துப் பேசாமல் தணிந்து போயிருப்பீர்களே.. இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.
இதற்கெல்லாம் ஏதாவது ஓரிடத்தைத் தயார் செய்ய வேண்டாமா? நேரத்தை ஒதுக்க வேண்டாமா? நிறைய பணத்தை செலவழிக்க வேண்டாமா? எதுவுமே வேண்டாம். எந்த இடத்திலும், எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் இதை நீங்கள் சாதிக்கலாம்.
எப்படியெனில், காதல் உணர்வுகள் எல்லாருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள். இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்களிடமும் இருந்தது. அதை நீங்கள் உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் புதைத்து வைத்துவிட்டீர்கள். அதை தோண்டி எடுக்க வேண்டும். அதெல்லாம் மறந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். அதற்கான வழி முறைகளை சுருக்கமாகச் சொல்கிறேன்.
இல்லறத் துணையின் மீது அக்கறை செலுத்துங்கள்:
சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களவரின் சிந்தையை எப்போதும் நிறைத்துக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கூட்டுக்குடும்பத்தில் இருப்பவராக இருந்தால் தனியாக மனம் விட்டுப் பேசவோ, சின்னச் சின்ன சேட்டைகள் செய்யவோ வாய்ப்புகளோ, பணிச் சுமைகளால் நேரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் எதிர்பார்க்காத நிலையில் சின்னச்சின்ன முத்தங்கள், ஸ்பரிசங்கள் என அவரை சீண்டிக்கொண்டே இருக்கலாம். இல்லாவிட்டால், இதுவே அவரது மனதில் என்னை யாரும் கவனிப்பதே கிடையாது என்ற நெருடலையும், தனிமை உணர்வையும் உண்டாக்கிவிடும். இதைத் தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருக்கு உதவி செய்யுங்கள்.
மனைவி குடும்பப்பொறுப்புகள் போன்ற சுமைகளால் நெருக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாமியாராக இருந்து மருமகள் பிரச்சினையில் மாட்டிக்கொள் ளும் சூழலில் கண்ணீர் வடிக்க நேரிடும். இந்த நிலையில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என அப்படியே உருகிக் காட்டவேண்டும். எதுக்கு இங்கேயே கிடந்து அல்லல் படுகிறாய்.. வா வெளியில் போகலாம் என வீட்டில் சொல்லிவிட்டு அவரை வெளியில் அழைத்துச் செல்லலாம். அவருக்குப் பிடித்தமானதை வாங்கித் தரலாம்.
அவர் வெளியில் செல்லும்போது வழியனுப்பிவைப்பது, இடையில் போனில் கூப்பிட்டுப் பேசுவது, சாப்பிட்டாயிற்றா? அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளாதே என்பது மாதிரி கரிசணம் காட்டுவது இப்படி.. எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள்.
மனைவியின் உடம்பு மற்றும் உடையில் கவனம் செலுத்துங்கள்:
மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு, உன் இடுப்பு அழகு, உன் மூக்குதான் ரொம்ப அழகு.. என உங்களவரின் உடல் அழகைப் பற்றியோ அல்லது அவரது உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன்.. தனது மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு தான் அவருக்கு வரும். அந்த உடையைப் பார்க்கும்போதெல்லாம் இது அவருக்கு நீங்கள் சொன்னதைத்தான் அவர் நினைத்துப் பார்ப்பார்.அவரிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும்.
மனம் விட்டுப் பேசுங்கள் அதுவும் அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள்:
இன்ப துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள மனம் விட்டுப் பேசுங்கள், அது மட்டுமல்ல, அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள், உங்களவர் ஒரு கருத்தைச் சொன்னால் உடனே அதற்கு எதிர்த்துப் பேசுவதையோ, மறுத்துப் பேசுவதையோ செய்யாதீர்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது உங்களின் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்.
உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் செய்து அசத்துங்கள்:
உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்து அசத்திவிட்டால் அவர் மயங்கி விடுவார். தினமும் மனைவி எழுந்துதான் காபி போட்டுக் கொடுக்கவேண்டும் என்ற எழுதாத நியதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை மாற்றி நீங்கள் அவளுக்கு காபி போட்டுக் கொடுக்கலாம். சமையல் வேலைகளில் உதவி செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயங்களில் மனைவியோடு ஒத்துழைக்கலாம்.
அவருக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால் மறுமுறை அதை தவிர்த்துவிடலாம்.
இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் மனைவியுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறே, கணவனுக்கு எது பிடிக்கும் என்பதைப் பார்த்துப் பார்த்து செய்யும்போது கணவன் அதில் திருப்தி யடைந்துபோவதோடு உங்களையும் திருப்திபடுத்த முயல்வான்.
குற்றங்குறை இல்லாமல் முழுமையாக இருப்பவர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கும் போது பிரச்சினைகள் மறைந்துபோகும். இவ்வாறு இருந்தால் இல்லறம் இனிக்கும்
7.இல்லறம் இனிக்க !
பெண்களுக்கு :
o உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.
o அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.
o பிடிவாத குணம் இருக்க கூடாது.
o வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..
o எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லணும்.
o மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது.
o எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
o எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.
o முதலில் நம்பிக்கைக்கு இலக்கணமாக நடந்து கொள்ளவேண்டும்.
o கணவரின் குடும்பத்தாரை நம் குடும்பம் போல் பார்க்க வேண்டும்.
o கணவருக்கு பணிவிடைகள் செய்வதை மகிழ்ச்சியாக என்ன வேண்டும்.
o இஸ்திரி செய்தல், ஷூ பாலிஷ் செய்தல் போன்ற கணவரின் வேலைகளை விருப்பமுடன் நாம் செய்ய வேண்டும்.
o அலுவல் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும்.
o கணவருக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்ய வேண்டும்.
o நம் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள வேண்டும்.
o அவ்வபோது சிறு சிறு பரிசுகள் கொடுக்கலாம்.
o பகலில் நைட்டி அணிவதை தவிர்த்து அவருக்கு பிடித்தமான சேலையில் இருக்கலாம்.
மேற்கண்டவற்றை செய்து வந்தாலே கணவன்மார்கள் மனைவியின் வசம் ஆவது உறுதி.
ஆண்களுக்கு :
o உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.
o விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.
o சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.
o உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்.
o கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.
o சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க.
o மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க.
இருவருக்கும் :
o இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.
o எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.
o ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.
o இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.
o இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளணும்..
o ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.
o விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..
o சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.
o கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்.
o இருவருக்குள்ளும் நல்ல புரிதல் (understanding) இருக்க வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!