திங்கள், மே 18, 2015

வியக்க வைக்கும் தகவல்கள்

ஜம் ஜம் அதிசயம்


மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது.
தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜரா (அலை)  அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.
கிணற்றின் அளவு
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்.
 
இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக  அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
அதன்குடிக்கத்தக்க தன்மைஒவ்வொரு ஆண்டும் உம்ரா  ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி(universal)..
பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும்  மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க   நீருக்காக சஃபா  மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.ஒட்டகத்தைப்பற்றி அதிசயம்

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான்பாலைவனக்கப்பல்’.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும்தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பானகப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம் என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பானஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும்செய்து கொண்டே..!
ப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில்50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி நாட்கள் வரை... தன் எடையில்22%இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8%எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88%நீர்ச்சத்துதான் இருந்ததுஎன்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில்12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%- இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம்கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர்அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்துஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர்அறைகளில்நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிசேமித்துக்கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள்அதன் உண்மையானஅளவை விட 240% விரிந்துஇடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவுவிரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள்,வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240%அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால்இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ...தன்னுடைய சிறுநீரையும்குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள்சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும்குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடைகிட்னியாகஇருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும்.அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன்விசேஷ லிவர்ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம்என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன்கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோஅல்லது /சி செய்யப்பட்டகுளுகுளுஇடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்துபால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு விட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள்பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும்தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்குசிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து41.7°Cவரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில்55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றைசுவாசித்து வெளியேற்றினோம் என்றால்16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும்வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..!மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டுமடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள்அதன்மீதுஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும்,  கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போதுகொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன்கையால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோதூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டமணற்புயலிலிருந்து கண்ணிற்குமுழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்திகூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும்புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமானவெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும்,நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோநீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும்உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
அதிலிருந்து இது தோன்றியதுஇதிலிருந்து அது தோன்றியதுஎன்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடிவிளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்''ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீபயணம்செய்யும் ஒட்டகம்..., நீரும்உணவும்நல்ல சீதொஷ்ணமும் தாரளமாககிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ,தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படிபாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...
(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே...!எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்பகுத்தறிவைகேட்டுப்பாருங்கள்இறை மறுப்பாளர்களின் போலிவார்த்தைகள்பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில்உணராலாம்.


 மேகங்களும் - மழை உருவாகும் விதமும் !
தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கிஅதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(
அல்குர்ஆன் 7:57)
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(
அல்குர்ஆன் 15:22)
சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரைகட்டாந்தரைமணல்வெளிநீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும்சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள்உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டுபரவி திரவமாகவும்ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.
இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. இப்பொறியியல் (Mechanism) மீள் சுழற்சியாக (re cycle) நடைபெற்று வருகின்றது.
இதையே அல்லாஹ் சுருக்கமாகசூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம் என அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையாஅதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.                                                                          (அல்குர்ஆன் 24:43).
 
மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கேற்ப மழை மேகங்கள் திட்டமான படிமுறைகளுக்கு அமையவே ஒவ்வொரு வடிவங்களாக உருவாக்கப்படுகின்றன.
முதல் படித்தறம்:
காற்றின் மூலம் மேகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.
இரண்டாம் படித்தறம்:
காற்றானது சிறிய மேகங்களை ஒன்று சேர்த்து பெரிய மேக மூட்டத்தை உருவாக்கும்.
இவ்விரு படிமுறைகளையும் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மூன்றாம் படித்தறம்:
சிறிய மேகங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிவதன் மூலம் பெரிய மேக மூட்டம் தோன்றி இதன் நடுவில் நீர் ஆவியாகும் விகிதம் இதன் ஓரங்களை விட அதிகளவில் காணப்படும். இதனால் மேகமானது செங்குத்தான நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள குளிரான பிரதேசத்திற்கு இவ் வளர்ச்சியடைந்த பகுதி ஒடுங்கி பெரியளவில் ஆலங்கட்டியாக உருவெடுக்கும். நீர் ஆவியாகி இவ்வாறு ஆலங்கட்டியாக உருவாகி மேகத்தினூடாக மழையாக நிலத்தில் விழும். இதையே அல்லாஹ்அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான் எனக் குறிப்பிடுகின்றான்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிக அண்மையில்தான் மேகங்களின் உருவாக்கம்,அமைப்புமழை உருவாகும் தொழினுட்பம் ஆகிய தகவல்களை நவீன தொழினுட்ப முறைகளின் மூலம் அறிந்துகொண்டனர்.
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400வருடங்களுக்கு முன்பு இவ் அறிவியல் உண்மையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவேஅல்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைவேதம் என்பது இந்த இடத்திலும் எந்த சந்தேகமும் இன்றி நிரூபனமாகின்றது.மின்னல்
அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன்.
(
அல்குர்ஆன் 13: 12,13)
மழை மேகங்களிலுள்ள அணுக்கள் உராய்ந்தோ அல்லது பிற வழிகளிலோ மின்னோட்டம் பெற்று விடுகின்றன. (மின்னோட்டம் பெறும் வழிகள் இன்னும் முற்றிலுமாக விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை). இவ்வாறு மேகக் கூட்டங்கள் மின்னோட்டம் பெற்றிருக்கையில் எதிர் மின்னோட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும்போது மின்னோட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியாக மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னோட்டம் பாயும்போது இடியுடன் மின்னல் தீப்பொறி போல ஒளிக் கீற்றாய் தென்படுகின்றது. சில வேளைகளில் மின்னலானது மரத்தையோநிலத்தையோ தாக்கக்கூடியதாக இருக்கும்.
மேலுள்ள குர்ஆன் வசனத்தில் மின்னலைப் பற்றி அல்லாஹ் கூறுகையில்,அச்சத்தையும்எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான் எனக் கூறுகின்றான்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மேலோங்கியுள்ள இக்கால கட்டத்திலேயே மேகங்களின் மூலம் மின்னோட்டம் ஏற்படும் முறை முற்றிலும் அறியப்படாது இருக்கும் நிலையில் எவ்வாறு 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பளுவாக மேகங்களினூடாக மின்னல் தோன்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள்?
நிச்சயமாகஅல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மனித உடல் - வியக்க வைக்கும் தகவல்கள்


கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.
இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70... மேலும் பார்க்க ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.
இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
இருதயத் துடிப்பானதுஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.
நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால்மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்குவலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.
மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.
மனிதனின் மூளை 100... மேலும் பார்க்க மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.
நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.
நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.
இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.
தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.
நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.
நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால்சராசரியாக 8 அடி வரை வளரும்.
மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்


ஒட்டகச்சிவிங்கி


பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் உயரமானது ஒட்டகச்சிவிங்கி என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.  ஒட்டகச்சிவிங்கியைப் பற்றி படிக்கப் படிக்க அதிசயமாக இருக்கும்.
சாதாரணமாக ஓர் ஆண் ஒட்டகச்சிவிங்கி 4.8 முதல் 5.5. மீட்டர் (16 அடி முதல் 18 அடி வரை) உயரம் இருக்கும். இந்த உயரமுள்ள ஒட்டகச்சிவிங்கியின் எடை 1300 கிலோ இருக்கும். இதன் ஆயுள்காலம் 25ஆண்டுகள்.
ஒரு நாளைக்கு 63 கிலோ எடை உணவை உட்கொள்ளும் என்கிறார்கள்.
இதன் நடை அலாதியானது.  பார்க்கச் சிரிப்பாகவும் விநோதமாகவும் இருக்கும். நடக்கும்போது ஒரு பக்கத்தில் உள்ள இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி நடக்கும். இந்த நடைக்குப் பெயர் "பேஸ்' (ல்ஹஸ்ரீங்). ஒட்டகங்களும் இதே போலத்தான் நடக்கும்.  இந்தக் காரணத்தால் மிக நீளமான அடிகளை எடுத்துவைக்க இவற்றால் முடியும். அத்துடன் இதற்கான உடல் சக்தி செலவாவதும் குறைகிறதாம்.
மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. இதன் கொம்பை வைத்து ஆண், பெண் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆணின் கொம்பு பெண்ணின் கொம்பை விட உயரமாகவும் உரோமங்கள் நிறைந்தும் காணப்படும். சிலவற்றுக்கு இரண்டு கொம்புகளும் இன்னும் சிலவற்றுக்கு 4 கொம்புகளும்கூடத் தலையில் காணப்படும்.  ஒட்டகச்சிவிங்கியின் உடலில் காணப்படும் வண்ணப் புள்ளிகளின் வடிவமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபடும்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே தூங்கும்.  அதுவும் நின்றுகொண்டேதான்!  உட்கார்ந்தோ படுத்தோ தூங்கினால், எதிரிகள் தாக்கவரும்போது எழுந்துகொள்வதற்கே வெகு நேரம் பிடிக்கும்.  ஆகவே எப்போதும் நின்று கொண்டேதான் தூங்கும்.
இதன் இதயத்தின் எடை 11 கிலோ இருக்கும். நாக்கு கருப்பு நிறத்திலிருக்கும்.  உலக விலங்குகளிலேயே மிக நீண்ட கழுத்தையும் வாலையும் கொண்டது. சில ஆண் சிவிங்கிகளின் வால் எட்டு அடி நீளம்கூட இருக்குமாம்.
சில அறிவியலாளர்கள் ஒட்டகச்சிவிங்கிகள் ஒலி எழுப்பவதில்லை என்று கூறினாலும் ஒரு வகையான குரலொலி இருக்கத்தான் செய்கிறது.  இந்தச் சத்தம் மற்ற உயிரினங்களுக்குக் கேட்பதில்லை. வெளவால்கள் போல இன்ஃப்ராஸவுண்ட் எழுப்புகின்றன என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதன் நாக்கின் நீளம் 53 செ.மீ.
பெண் சிவிங்கியின் பேறுகாலம் 15 மாதங்கள். புதிதாகப் பிறந்த குட்டி 6 அடி உயரமும் 60 கிலோ எடையும் இருக்கும்.
ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகளைச் சிங்கம் மிகவும் விரும்பி வேட்டையாடும்.  சிங்கம் தனது குட்டியைத் தாக்க வருவதைப் பார்த்தால் ஆண் சிவிங்கி தனது நீண்ட கால்களுக்கிடையில் குட்டியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.  அப்படியும் சிங்கம் தாக்கினால், தனது முன்னங்கால்களால் ஓங்கி ஓர் உதை கொடுக்கும்.  இந்த உதையைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் சிங்கம் மயக்கம் போட்டு விடும்.  அவ்வளவு சக்திவாய்ந்த உதை!  சமயத்தில் சிங்கம் இறந்துகூடப் போய்விடும்.
இதனால் மற்ற விலங்குகள் - வரிக்குதிரைகள், மான்கள் போன்றவை தங்களுடைய பாதுகாப்புக்காக ஒட்டகச்சிவிங்கி கூட்டத்தோடு சேர்ந்து தங்களுக்கான உணவைத் தேடிக் கொள்ளும் வழக்கத்தை வைத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக