அரபா நோன்பு பற்றிய கேள்விகள்

கேள்வி 01.
அரபா நோன்பு வெள்ளிக்கிழமையில் நோற்கலாமா?
➖➖➖➖➖
பதில்:வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதாக இருந்தால் முந்திய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் சேர்த்து நோன்பு பிடிக்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது.
அந்த ஹதீஸில் *"லா தஹுஸ்ஸூ யவ்மல் ஜும்அதி பிஸியாமின்"* என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அதாவது, வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி *(விசேஷமாகக் கருதி)* நோன்பு நோற்க வேண்டாம் என்றுள்ளது.
அப்படி நோற்பதாக இருந்தால் மாத்திரமே மேல் கூறிய சட்டம்.
வெள்ளிக்கிழமை என்பதை கருத்திற் கொள்ளாமல் வேறு சுன்னத்தான நோன்புகளை கருத்திற் கொண்டு அந்நாளில் நோற்பது மேல் கூறிய சட்டத்திற்குள் இடம் பெற மாட்டாது.
எனவே, வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு வந்தால் முந்திய நாள் அல்லது பிந்தைய நாள் நோன்பு நோற்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இது மிகவும் தெளிவான ஒரு விஷயம்.
யாராவது ஒருவர் பேணுதல் கருதி வெள்ளிக்கிழமை அரபா நோன்பு நோற்று அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்பாராக இருந்தால் அது குற்றமில்லை.
பிந்தைய நாள் துல் ஹஜ் 10 இல் நோன்பு நோற்பது கூடாது. அது பெருநாள் தினமாகும்.
....................................
கேள்வி 02
அரபா நோன்பு ஒரு நோன்பா? அல்லது இரண்டு நோன்புகளா?
➖➖➖➖➖➖
பதில்: சிலர் அரபா நோன்பை பிழையாக விளங்கி இரண்டு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
"யவ்மு அரபா" என்றால் "அரபா தினம்" என்று அர்த்தம்.
அரபா தினம் என்றால் *ஒரு நாளைத்* தான் குறிக்கும்.
இரண்டு நாட்களை குறிப்பதாக இருந்தால் ஹதீஸில் *"அரபா தினங்கள்"* அதாவது *"அய்யாமு அரபா அல்லது யவ்மா அரபா"* என்று இடம் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, துல் ஹஜ் 9 ஆம் நாள் நோற்கும் நோன்பு தான் அரபா நோன்பு. அது ஒரு நாள் நோன்பு தான் என்பது மிகத் தெளிவு.
-----------------
கேள்வி 03.
ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் நாளில் தான் அரபா நோன்பா?
➖➖➖➖➖➖➖
பதில்:
ஹதீஸில் *"ஸியாமு யவ்மி அரபா"* என்று இடம் பெற்றுள்ளது.
அதாவது, *"அரபா நாள் நோன்பு"* என்பதாகும்.
நாட்களை தீர்மானிப்பதுஎன்பது (இடங்களின் ஒன்று கூடல்களை வைத்து அல்ல. )பிறையை வைத்துத் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 *அரபா தின நோன்பும் இடத்தை அடிப்படையாக வைத்து உருவான நோன்பு கிடையாது.*
இடத்தை அடிப்படையாக வைத்து நோன்பு உருவாகியிருந்தால் *"ஸியாமு அரபா"* அதாவது *"அரபா நோன்பு"* என்று இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் ஹதீஸ்களில் "ஸியாமு அரபா" என்று இல்லாமல் "ஸியாமு *யவ்மி* அரபா" என்று தான் இடம் பெற்றுள்ளது.
அதாவது "அரபா நோன்பு" என்றில்லாமல் "அரபா *தின* நோன்பு" என்று தான் வந்துள்ளது.
எனவே, அரபா தினம் (நாள்) என்பது பிறை 8 இலோ பிறை 10 இலோ இல்லை. அரபா தினம் என்பது பிறை 9 ஆகும்.
அரபா தின நோன்பு நோற்பவர்கள் தமது பிறைக் கணக்கின் படி பிறை 9 இல் தான் நோன்பு நோற்க வேண்டும். அது அரபா என்ற இடத்தில் ஹாஜிகள் ஒன்று கூடும் அதே நாளாகவும் அமையலாம். அல்லது அது அல்லாத நாளாகவும் அமையலாம். அது பிரச்சனையே இல்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
30/08/2017

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001