கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....


கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....
என்னுடைய மனவோட்டம் இதுதான்👇
ü  அவரின் குடும்பம்....
உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்...
.கலைஞரை  இத்தனை வயதுவரை வாழ வைத்தது.  அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்.....இவைகள் தான்.
அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம்.
ü  ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார்.
கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ....நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான்.
குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே...
பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ....எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை.....
கலைஞர் பாதுகாத்தார் ...பாதுகாத்து கொண்டார்....ஒட்டு மொத்த குடும்பத்தின்கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்....
நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்....அவர்களே நம்முடைய சொத்துகள்.
மரணம்இயற்கையானது..மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது.......ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்......
உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்....நாளை நம்க்கும் மரணம் வரும்....மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்... இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்......
சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ......மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்.....
#மரணத்தின்பாடம்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001