இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தண்ணீர் ஒரு மாபெரும் அருட்கொடை!

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ,  விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகள் இதனால் மரணமடைந்துள்ளார்கள் நம் மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் மகத்துவத்தையும். அதனை பயன்படுத்தும் முறைகளையும் நாம் அவசியம் தெறிந்து கொள்வதோடு தற்பொழுது இந்த வறட்சி நீங்கி செழிப்பான நிலை உருவாக நாம் செய்யவேண்டியது என்ன காண்போம்.    நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் 5000 ஆண்டு௧ளுக்கு முன்................. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம்குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை)அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத்துணைவியாரையும் , குழந்தையையும் விட்டுவிட்டு இருகரமேந்தி துஆ செய்துவிட்டு வந்தார்கள். கடும் வெயில் , சுடும் பாலைவன மணல் , நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள் , தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது. எங்கும் கானல் நீர்தான். பச்சிளங் குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள் , குழந்