இறை தண்டனையின் அடையாளம்



மனித சமுதாயம் விழிப்புணர்வு பெறுவதற்காக தொடர்ந்து நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பிக் கொண்டேயிருந்தான். ஆனாலும் மனித சமுதாயம் அவைகளைப் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மாறாக ஷைத்தானுடன் கைகோர்த்துக் கொண்டு அட்டூழியங்கள் செய்யத் தொடங்கின.அநியாயங்களும், அக்கிரமங்களும் அளவுக்கதிமாக பெருகிக் கொண்டே சென்றது. அல்லாஹ்வுடைய பொறுமை முடிவுக்கு வந்து கோபம் வெளிப்படத் தொடங்கிற்று.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்த சமுதாயதத்திற்கு தகுந்த வாறு அவர்களுடைய மொழி பேசக் கூடிய நபியை அல்லாஹ் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டே இருந்தான் 
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ
'தமக்கிடையே எச்சரிப்பவர் ஒருவர் (இறைத்தூதர்) வந்து செல்லாத சமுதாயத்தினர் எவருமில்லை' (35:24)
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا
 'திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்தினரிடையேயும் நாம் ஓர் இறைத் தூதரை அனுப்பியிருந்தோம்' (16:36)
ü  நூஹ் (அலை) அவர்கள்
(( நூஹ் (அலை) காலத்து மக்கள் நீண்ட ( ஆயுள் வளத்தைப் பெற்றிருந்தனர் ) வயதையுடைய மக்களாவர். ஒவ்வொரு சமுதாயத்து நபிக்கும் ஒரு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் வழங்கப்பட்டது போல், ஒவ்வொரு சமுதாயத்து மக்களுக்கும் ஒரு அந்தஸ்தை அல்லாஹ் வழங்கி கவுரவித்தான். நூஹ் (அலை) காலத்து மக்களுக்கு அல்லாஹ் நீண்ட நெடிய ஆயுளை வழங்கி கவுரவித்தான் நூற்றுக்கணக்கான வயதையுடையவர்களாக வாழ்ந்தார்கள். துனியாவின் நீண்டதொரு சுகமான ஷைத்தானின் கேளிக்கை வாழ்க்கை அவர்களை மதிமயங்கச் செய்திற்று அதுவே அவர்களை அல்லாஹ்வுடைய மறுமையை மறக்கடிக்கச் செய்தது. அல்லாஹ்வை பொய்ப்பித்தனர் அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கீழ்கானுமாறு இறங்கிற்று. . .
நாம் கொட்டும் மழையைக்கொண்டு வானங்களின் வாயில்களைத்திறந்து விட்டோம், மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், என அல்லாஹ் கூறுவதிலிருந்து அம்மக்களின் அட்டூழியமும், அட்டகாசங்களும் அதிகரித்துக் கொண்டு சென்றதால் அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடு தான் அந்த வெள்ளப்பிரளயம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதனால் அந்த வெள்ளப் பிரளயத்தை இயற்கையின் சீற்றம் என சாதாரணமாக நினைத்திட முடியாது. மேலும் அந்த வெள்ளப் பிரளயம் திடீரெனத் தோன்றியவை அல்ல ! திடீரெனத் தோன்றி தாக்கினால் அதை இயற்கையின் சீற்றம் எனக் கூறிடலாம். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அறிவித்து விட்டுச் செய்கிறான் எவ்வாறு ?
வெள்ளப்பிரளயத்தை அனுப்பி அநியாயக்கார மக்களை அழிக்கப் போவதை அல்லாஹ் முன்கூட்டியே தனது நபியிடம் அறிவித்து விடுகிறான், நபியும் இவ்வாறு அல்லாஹ்விடமிருந்து பேரழிவு வர இருக்கிறது என அம்மக்களிடம் எச்சரிக்கவும் செய்கிறார்கள், தனது மகனிடமும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் ''என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!'' 11:42 அதற்கு அவன் . . ''என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான்(தப்பி) விடுவேன்''11:43.
எனக்கூறுp விடுகிறான்.

ü  ஹூது (அலை)

நூஹ் (அலை) காலத்து நிராகரிக்கப்பட்ட மக்கள் முழுவதும் அழித்தொழிக்கப்பட்டு எஞ்சியிருந்தவர்கள் அனைவரும் முஃமின்களாக இருந்தார்கள். இம்மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய கோபத்தில் சீறிப் பாய்ந்த பேரலைகளுடன் கூடிய வெள்ளப் பிரளயத்தை நேரில் கண்டவர்கள் என்பதால் அல்லாஹ்வை மிகவும் பவ்வியமாக வணங்கி வழிபடலானார்கள். இது அதிக காலங்கள் நீடிக்கவில்லை ஜெனரேசன்கள் மாற,மாற கொஞ்சம், கொஞ்சமாக அம்மக்களின் மீது ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்: இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர், அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். 69:6,7
என்று முஹம்மது (ஸல்) அவர்ளுக்கு வஹியில் அல்லாஹ் அறிவிக்கிறான். நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் ஏறிக் கொண்டு பெரு வெள்ளத்திலிருந்து கரை ஒதுங்கி அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக வெளியேறிச் சென்று புதுயுகம் கண்ட ஈமான் தாரிகளுடைய வாரிசுகளாவர் இந்த பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்ட ஆது சமுதாயத்தவர்கள்.
ஷைத்தானுடைய சதிவலையில் தொடர்ந்து வீழ்ந்தனர் துனியாவின் சுகபோக வாழ்வில் திளைத்தனர் தங்கள் தலைவர்களின் கட்டளைகளை செவிமடுத்தனர் அவைகளை செவ்வனே செய்து முடித்தனர் தூதுத்துவத்தைப் பொய்ப்பித்தனர் படைத்தவனை மறந்தனர். நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக்கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள். 11:59

ü  ஸாலிஹ் (அலை) அவர்கள்

அல்லாஹ்வையும், அவனது தூதுத்துவத்தையும் தொடர்ந்து பொய்ப்பித்த ஆது சமுதாயத்து மக்கள் கொடும் காற்றில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் போதே அதில் அல்லாஹ்வையும் அவனது தூதத்துவத்தையும் ஈமான் கொண்டவர்கள் மட்டும் காப்பாற்றப் பட்டனர் நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம். 7:72.
ஆக இவ்வாறு நிராகரிப்போர் முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டப் பின் எஞ்சியோர் அல்லாஹ்வை வழிபடும் ஈமான்தாரிகளாக இருந்தனர். அவர்களிடமும் ஜெனரேஷன் மாற்றம் ஏற்பட்டதும் ஷைத்தான் மிக அழகாக அவனுக்கே உரிய நடையில் லாவகமாக சென்று இலேசாக அம்மக்களை தட்டத் தொடங்கினான் அவர்களும் அவனுடைய மாயவலையில் பட படவென விழத் தொடங்கினர். பொறுமையின் பொக்கிஷமான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த மக்களுக்கும் அவர்களுடைய கோத்திரத்திலிருந்தே ஒரு நபியை ஸாலிஹ் (அலை) அவர்களை தேர்வு செய்து தனது இறைச்செய்தியுடன் அனுப்பி வைத்தான் ஸமூதுகூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்);. . . 7:73
ஆது சமுதாயத்து மக்களுக்கு அல்லாஹ் உடல் வலிமையைக் கொடுத்தது போல் ஸமூது சமுதாய மக்களுக்கும் உடல் வலிமையைக் கொடுத்திருந்தான் ஏறத்தாழ ஆது சமுதாயத்து மக்கள் போன்றே இவர்களும் இருந்தனர். நூஹ் (அலை) சமுதாயத்து மக்கள் போன்று யுகம் விட்டு வேறொரு யுகத்தில் வந்து வசிக்க வில்லை. ஆதுசமுதாயம் அழிக்கப்பட்ட அதே பூமியில் ஸமூது சமுதாய மக்கள் தோற்றுவிக்கப் பட்டதால் உடல் வலிமையும், புத்திக் கூர்மையும் அவர்களுக்கிருந்தது போலவே இவர்களுக்கும் இருந்தது அவர்களைப் போன்றே இவர்களும் வானளாவிய மாளிகைகளைக் கட்டி படாடோபமாக வாழ்ந்தனர். 
அல்லாஹ்வின் அந்த அத்தாட்சியை சினங்கொண்டு அதன் கால் நரம்புகளை அறுத்து துண்டித்து விட்டனர். அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள். 26:157
அத்துடன் அவர்கள் விட்டார்களா ? என்றால் அது தான் இல்லை. அத்தாட்சியைக் கேட்டார்கள் அத்தாட்சி கொடுக்கப்பட்டது அத்தாட்சியை அழித்தனர் அத்துடன் நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கையை பொய்ப்பிக்கும் விதமாக அத்தண்டனையை கொண்டு வந்து காட்டும் படி ஏளனம் கூறினார்கள் . . .இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); ''ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள். 7:77
ஏற்கனவே அம்மக்களின் அட்டூழியங்களின் மீது கோபம் கொண்டிருந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அத்தாட்சியயை அழித்ததன் மூலம் இன்னும் கோபம் கொண்டிருந்த நிலையில் இறைவன் புறத்திலான வேதனைக்கு அவசரப்பட்டனர் இறுதியில் அல்லாஹ் தனது வேதனையை அவர்களுக்கு பூகம்பமாக இறக்கினான் . . .எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர். 7:78. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் அதனால் அவர்கள் காய்ந்துமிதிபட்ட வேலி(யின்கூளம்) போல் ஆகிவிட்டனர்.54:31
தங்களிடம் இருந்த வலிமையை உண்ர்ந்த அவர்கள் அல்லாஹ்வை மறந்து, அல்லது மறுத்து மாபெரும் இருமாப்புடன் நடந்து கொன்டனர்; ஆகையினால் இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். எனவும் பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர். என அல்லாஹ் கூறுகிறான்.கடும் மழை பெய்யும் போது ஏற்படுகிற சாதாரண இடி முழக்கமே நமக்கு பெரும் பீதியைக் கிழப்பி வடுகிறது என்றால் . அல்லாஹ் கூறுகிற பெரும் சப்தம் மனிதர்களையும் பேரண்டத்தையும் கிடுகிடச் செய்திருக்கும் என்பதை உணரலாம். அதில் அழிவுக்கு ஆளான மக்கள் நிச்சயமாக அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி (யின் கூளம்) போல் ஆகி இருப்பர் என்பதை இன்று நாம் சுனாமி சீற்றத்தில் சிக்கி மடிந்தவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி (யின் கூளம்) போல் கிடந்ததை ஊடகங்களின் வாயிலாக கண்டோம்.

ü  லூத் (அலை) அவர்கள்.
லூத் நபி காலத்து கல்மாறிக்காற்று அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; 15:74
காலத்தில் அவர்களின் சமூகத்தார்களின் மீது அல்லாஹ் எவ்வாறு கோபம் கொண்டு அவ்வூரை தலை கீழாக புரட்டினான் என்பதை சுருக்கமாப் பார்ப்போம் . லூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள் அவர்களுடைய சமுதாயத்து மக்களிடம் தான் நபியாக தேர்வு செய்யப்பட்ட செய்தியை கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான் :''நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.''ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். 26:160, 163
அத்துடன் அவர்களுக்கு முந்தைய எந்த சமுதாயத்தவர்களும் செய்திடாத செய்யத் துனியாத, மனித சமுதாயம் வெட்கி தலைகுணியக் கூடிய செயலைச் செய்தனர். ...உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?'', ''மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள்- நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.'' அல்குர்ஆன் 7:80 லிருந்து 81 வரை
எவ்வளவோ அச்சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை செய்தும் அவர்கள் திருந்தவில்லை, தங்களது இழி செயலுக்காக வருந்தவுமில்லை தொடர்நது அவைகளை நாகரீகமெனக் கருதி செய்து கொண்டிருந்தார்கள்
எந்த ஒரு சமுதாயத்திடமும் தன்னுடையை வேதனைiயை இறக்குவதற்கு முன் ஒரு சோதனையை அனுப்புவான் அந்த சோதனையில் அவர்கள் அளவு கடந்து வரம்பு மீறும்போது அந்த வரம்பு மீறலையே அவர்களுக்கு முடிவாக அமைத்து விடுவான் .
அல்லாஹ்வுடைய கோபம் மனிதர்கள் மீது இறங்கத் தொடங்கினால் இவ்வாறே படிப்படியாக இறங்கத் தொடங்கும், ஒவ்வொன்றும் பலமான அடியாக விழத்தொடங்கும், அத்துடன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வசுவாசம் கொண்டவர்களை அக்கொடியவர்களின் வேதனையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்களின் பார்வையைப் பறித்து அவ்விடத்திலேயே அவர்களை குருடர்களாக்கியும் அந்த மலக்குகள் மூலமே நபிக்கு தனது தண்டனை இறங்கவிருப்பதையும், அதனால் நபியையும் அவரது குடும்பத்தாரையும் இடம் பெயரச் சொல்கிறான்.
இறைத்தூதரும் அவர்களுடன் ஈமான் கொண்ட முஸ்லீம் குடும்பத்தினரும் இடம் பெயரத் தொடங்குகிறார்கள், அல்லாஹ்வுடைய பேரிடி முழக்கம் ஒன்று அம்மக்களைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73 இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. 7:84பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய கொடுங்காற்று சுடப்பட்ட கற்களை அவ்ஊர் ழககள் மீது வீசி எறிந்து அனைத்து அநியாயக்கார வரம்பு மீறிய மக்களையும் அழித்து அவ்வூரை அல்லாஹ் தலைகீழாக புரட்டி விடுகிறான் . பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 15:74

ü  ஷூஐபு நபி(அலை) அவர்கள்.

ஷூஐப் நபி (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் மீது அல்லாஹ்வின் கோபம் எவ்வாறு இறங்கி அழிந்தொழிந்து போனார்கள் என்று பார்ப்போம் ஒவ்வொரு சமுதாயத்து மக்களிடமும் தோன்றிய நபி மார்களும் தனது சமுதாயத்து மக்களிடம் தங்களுடைய தூதுத்துவத்தை எடுத்துச் சொல்லி மக்களிடத்தில் நிலவியிருந்த தீமைகளை தடுத்ததைதைப் பாரத்தோம் ஷூஐபு (அலை) அவர்கள் தங்களது சமூகத்தார்களிடம் கண்ட மனிதன் மனிதனுக்கு இழைத்த அநீதிகள் பலதை தடுத்து குரல் கொடுத்தார்கள் மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,)
''என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்'' என்று கூறினார். 7:85
இன்று சென்னை நகரங்களின் அன்றாட நெருக்கடி பஜார்களில் சென்று பார்த்தால் நம்மவர்கள் செய்யும் வியாபாரம் மேற்கூறும் அல்லாஹ்வின் வசனத்திற்கு நேர் மாறாக நடப்பது கண்கூடான காட்சியாக இருக்கும். அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்.முஸ்லீம்கள் மேற்கானும் குர்ஆன் வசனத்திற்கொப்ப தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அப்படி வியாபாரம் செய்பவரே முஸ்லீமாக இருக்க முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான் நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்'' என்று கூறினார். 7:85 பொறுமையின் பொக்கிஷமான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் சகமனிதன் மீது இழைக்கும் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று விட்டதால் அவனுடைய வேதனை அந்த கொடுங்கோலர்கள் மீது பூகம்பமாக இறங்கத் தொடங்குகிறது. . . .அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர். 7:91  ((அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தாதீர்கள், எனும் மேற்கானும் திருமறை வசனம் ஷூஐப் நபியை பொய்ப்பித்தவர்களை எச்சரித்துக் கூறியது, அல்லாஹ்வை ஈமான் கொன்டவர்களை அச்சமுதாயம் சொல்லொனாத் துயரங்களை கொடுத்து வாழவிடாமல் துரத்தும் நிலை ஏற்பட்டதும் இறை நிராகரிக்கும் அப்பொய்யர்களின் மீது அல்லாஹ் பூகம்பத்தை ஒரே இரவில் அவர்களை முற்றிலுமாக அழித்து விடுகிறான்.

ü  மூஸா (அலை) அவர்கள

ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். 26:66
ஃபிர்அவ்ன் இயற்கை எழில் கொஞ்சும் வளம்மிக்க பரந்து விரிந்த பெரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட மிஸ்ரு பிரதேசத்தை ஆட்சி செய்தான். ஆனால் அவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தனது திறமையின் மீதும், தனது உடல் வலிமையின் மீதும் சூனியத்தின் மீதும் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்தான். தனக்கு ஆபத்து என்றால் தனது மந்திரிசபை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கூட அடுத்ததாக ஆக்கிக்கொண்டு சூனியக் காரர்களிடம் முதல்கட்ட ஆலோசனையை நடத்தக் கூடியவனாகவும் அதன்படி செயலாற்றக் கூடியவனாகவும் இருந்தான். தானே கடவுள் என்றான், தனது சகாக்களைக் கொண்டு மிகப்பெரிய பிரமிட்களை உருவாக்கினான், தனது இறந்த உறவினர்களின் சடலங்களை பூமியில் புதைக்காமல் கெமிக்கல் மூலமாக பதப்படுத்தி பெட்டிகளில் பூட்டிவைத்தான் , மக்கள் ஒற்றுமையாக இருந்தால் ஒன்று கூடி அரசாங்கத்தை எதிர்க்கத் துனிபவர்களாகி விடுவார்கள் எனக்கருதி தனது சர்வாதிகாரத்தின் மூலம் மக்கiளை பலவாறாகப் பிரித்து பெரும் பிரவினர்களாக்கினான். . . நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; . . . 28:4
தனக்கு நிகராக ஒருவன் வந்து விடக்கூடாதென்றெண்ணி நகருக்குள் பிறக்கும் ஆண் குழந்தைகளை கொன்று விடும்படி உத்தரவுப் பிறப்பித்து அதைத் தீவிரமாக அமுல் படுத்தவும் செய்தான். . .அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; . . . 2:49.
 மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். 26:65 என்றும் . . . பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். 26:66 என்றும் அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கடல் பிளந்து வழி விட்டதும், மீண்டும் வழியை மூடிக்கொண்டதும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கடல் கட்டுப்பட்டதன் மூலம் உலகம் முடியுறும் காலம்வரை கடல் அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டை மீறாது கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டாலும் சரி, கடல் கொந்தளித்து நீரை வெளிப் படுத்தி மக்களை அழித்தாலும் சரி, கடல் அலைகளை சுனாமியாக வெளிப்படுத்தி மக்களை வழுங்கினாலும் சரி அவைகள் இறைவனுடைய உத்தரவின் வெளிப்பாடுகள் தான் என்பதை மூஸா (அலை) அவர்களையும் அவர்களை ஈமான் கொண்டவர்களையும் வெளியேற்றி விட்டு நிராகரிப்பாளர்களை விழுங்கியது .










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001