எதுஇஸ்லாமியஆட்சி? சவூதியா-தாலீபானா?
اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது 22:41 இஸ்லாமிய ஆட்சி! என்றால் என்ன? ******************************************************************** இன்று முஸ்லிம்களுக்குள் உள்ள மிகப்பெரிய தவறுதலான புரிதலில் இஸ்லாமிய ஆட்சியை பற்றிய புரிதலும் ஒன்றென்றால் அது மிகையாகாது! ஏன் இஸ்லாமிய ஆட்சியை முஸ்லிம்களுக்குள் சிலரே இன்று வேண்டாம் என்று சொல்லும் நிலையும் வந்து விட்டதை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், நம் மக்களிடையே இஸ்லாமிய ஆட்சியை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே! ஆனால் முஸ்லிமாக வாழக்கூடிய எல்லோரும் குரானை கொண்டு ஆட்சி செய்வதையும் அதன் க...