” நாம் நம் நபியை சார்ந்து வாழ்கிறோமா ? “


قال الله تعالى

قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ‌ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ‌‌ۖ‏

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

 ‏”‏ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا. ‏

 

நாம் ம்முடைய  பியைச் சார்ந்தவராக‌ வாழ்ந்துவருகிறோமா ?  ம்பந்தமாக பார்ப்போம்.! வாருங்கள்……!!!

அன்புள்ளவர்களே! ன்னைக்கு நாம் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டும்பியுடைய நேசர் / நபியுடைய  பிரியர் என்று சொல்லிக்கொண்டும்?  பி என்னுடைய கனவில் வர வேண்டும் என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். ஆனால்;  நபி  அவர்களோ! சில தீய பண்புடையவர்களை பார்த்து   இவர் நம்மைச் சார்ந்தவரல்ல  என்று கூறியுள்ளார்கள். அந்த நபி  அவர்கள் யாரெல்லாம் நம்மைச் சார்ந்தவரல்ல  என்று கூறியுள்ளார்களோ அந்த பட்டியலில் நாம் இடம் பெறுகிறோமாப்படி இடம் பெற்றால் அந்த பட்டியலில் இருந்து நாம் வெளியேற என்ன செய்ய வேண்டும்?  சம்பந்தமாக தெரிந்து நம்மை சரி செய்வோமாக!.

து வரை அந்த பட்டியலில் நாம் இடம் பெறாவிட்டால் நம்மை  இன்னும் முழுமையாக பாதுத்துபரிசுத்தமாக வாழ்வோமாக!

இப்படி அத்தீய பண்புகளை நம் வாழ்வில் தவிர்ந்து கொண்டால் நம் வாழ்வும் முழுவதும் நபிகளின் நேசத்தை பெற்றுத்தரும் வாழ்வாகுமே! சம்பந்தமாக இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை ல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன்  

 அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى 

قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ‌ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ‌‌ۖفَلَا تَسْـــٴَـــلْنِ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنِّىْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ‏-[ سورة هود – سورة 11 – عدد آياتها 46] ‏

(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.)  .- [அல்குர்ஆன்  11: 46, 9:56]

 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا. ‏”»‏‏ , (رواه جامع الترمذي]

நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும், ஆலிம்களின் உரிமைகளை அறியாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்”  (முஸ்னத் அஹ்மத்தபரானீ, )

எனது வழி முறையைப் புறக்கணித்தாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்:-

أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ. قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا. وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ. وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا. فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ “” أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي “”. رواه البخاري

யாரஸூலல்லாஹ்! தங்கள் நபி  அவர்களின் வணக்க வழிபாடுகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள மூன்று நபர்கள் நபி  அவர்களின் பரிசுத்த மனைவியரிடம் வந்தனர். அவர்களுக்கு நபி  அவர்களின் வணக்க நிலைகளை பற்றி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி  வர்களின் வணக்கங்களை குறைவானதாக கருதினார்கள். எனவேஅல்லாஹ்வின் திருத்தூதருடன் நம்மை எவ்வாறு ஒப்பிட முடியும்?’ “அல்லாஹ் அன்னாரின் முன், பின் பாவங்களை (பாவங்கள் இருந்தாலும்) மன்னித்துவிட்டான்’, என்று சொல்லி (தம்மை சமாதானப்படுத்தி)க் கொண்டார்கள். அவர்களில் ஒருவர், “இனி எப்பொழுதும் இரவு முழுதும் நான் தொழுது கொண்டேயிருப்பேன்என்றும், இரண்டாமவர், ‘இனி எப்பொழுதும் நிரந்தரமாக நோன்பு வைத்து வருவேன்’. என்றும் மூன்றாமவர், “இனி பெண்களை விட்டும் விலகியிருப்பேன்! எக்காலமும் மணமுடிக்கமாட்டேன்என்றும் கூறினார். (அவர்களுக்குள் இந்தப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்) ரஸூலுல்லாஹி  அவர்கள் வந்து சொன்னார்கள்: “இவ்வாறு, இவ்வாறு எல்லாம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்தீர்களல்லவா? கவனமாகக் கேளுங்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உங்களில் அனைவரையும் விட அதிகம் அல்லாஹ்வை அஞ்சுபவன், உங்களில் அனைவரையும் விட அதிகம் அவன்மீது பயபக்தியுள்ளவன், எனினும், நான் நோன்பு வைக்கவும் செய்கிறேன்நோன்பு வைக்காமலும் இருக்கிறேன், தொழவும் செய்கிறேன், தூங்கவும் செய்கிறேன், பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன்(இதுதான் எனது வழி முறை) எனவே யார் எனது வழி முறையைப் புறக்கணித்தாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்!’’ என்று கூறினார்கள்(புகாரி 5063)

நீ விதிகளை உறுதியாக நம்பாத வரை  என்னைச் சார்ந்தவனல்ல:-

عَنْ أَبِي حَفْصَةَؒ قَالَ: قَالَ عُبَادَةُ بْنُ الصَّامِتِؓ لِابْنِهِ: يَابُنَيَّ! إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ اْلإِيمَانِ حَتَّي تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللّٰهُ تَعَالَي الْقَلَمُ فَقَالَ لَهُ: أُكْتُبْ فَقَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: أُكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّي تَقُومَ السَّاعَةُ يَابُنَيَّ! إِنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ مَاتَ عَلَي غَيْرِ هذَا فَلَيْسَ مِنِّي. رواه ابوداؤد

ஹஜ்ரத் உபாததிப்னுஸ் ஸாமித் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ அவர்கள் தன் மகனிடம்மகனே! (இவ்வுலகில்) உனக்கு கிடைத்த எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) உன்னை விட்டும் தவறிப் போகாது என்பதையும், உனக்குக் கிடைக்காத எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) உனக்குக் கிடைக்காது என்பதையும் நீ உறுதியாக நம்பாத வரை ஈமானுடைய உண்மையான ருசியை நீ சுவைக்க முடியாது. (தொடர்ந்து தனது மகனிடம்) அல்லாஹ் முதலில் படைத்தது எழுதுகோலைத்தான். பின்பு எழுதும்படி அதற்குக் கட்டளையிட்டான், “ரட்சகனே, நான் எதை எழுதுவேன்?’ என்று அது கேட்டது. இறுதி நாள் வரை வரவிருக்கின்ற அத்தனை பொருளுக்குமான (நிர்ணயிக்கப்பட்ட) விதிகள் அனைத்தையும் நீ எழுதுவாயாக!’ என்று அல்லாஹ் கூறியதாக நபி  அவர்கள் மூலம் நான் கேட்டுள்ளேன்மகனே! எவன் இதற்கு மாற்றமான வேறு நம்பிக்கையுடன் மரணிப்பானோ அவன் என்னைச் சார்ந்தவனல்ல!’என்றும் நபி  அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் உபாதா இப்னுஸ் ஸாமித் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத்)

இனிமையான குரலில் குர்ஆனை ஓதாதவர் நம்மைச் சார்ந்தவரல்லர்:-

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ هذَا الْقُرْآنَ نَزَلَ بِحَزَنٍ فَإِذَا قَرَأْتُمُوهُ فَابْكُوا فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا وَتَغَنَّوْا بِهِ فَمَنْ لَّمْ يَتَغَنَّ بِهِ فَلَيْسَ مِنَّا. رواه ابن ماجه

மறுமை பற்றிய கவலை, மறுமை பற்றிய நிம்மதியின்மையை ஏற்படுத்தவே இந்தப் புனித குர்ஆன் அருளப்பட்டது. எனவே, அழுதவாறு ஓதுங்கள். அதை நீங்கள் ஓதும்போது அழுகை வராவிட்டால் அழுபவரைப் போன்று பாவனை செய்யுங்கள், குர்ஆனை இனிய குரலில் ஓதுங்கள், ஏனேனில்இனிமையான குரலில் ஓதாதவர் நம்மைச் சார்ந்தவரல்லர், நம்மை முழுமையாகப் பின்பற்றுபவர்களில் அவர் ஆகமாட்டார்என்று ரஸூலுல்லாஹி  அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸஅதுப்னு அபீவக்காஸ் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ அவர்கள் அறிவிக்கிறார்கள்[இப்னுமாஜா]

பெரியவர்களுக்கு கண்ணியம் / சிறியவர்ககளுக்கு  இரக்கம் காட்டாதவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

عن أنس بن مالك أن شيخاً جاء يريد النبي صلى الله عليه وسلم وحوله أصحابه فأبطؤا على الشيخ أن يوسعوا له فقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقر كبيرنا ويرحم صغيرنا.

அனஸ் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- ஒரு பெரியவர் நபியை சந்திக்க வந்தார் நபியை சுற்றி தோழர்கள் இருந்தனர் இடம் இல்லாமல் நின்ற அப்பெரியவருக்கு இடம் கொடுக்க தாமதித்தனர் அப்போது நபி சொன்னார்கள் பெரியவரை மதிக்காதவரும் சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் நம்மை சார்ந்தவரல்ல..

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لَيْسَ مِنْ اُمَّتِيْ مَنْ لَمْ يُجِلَّ كَبِيْرَنَا، وَيَرْحَمْ صَغِيْرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ. رواه احمد والطبراني في الكبير

நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும், ஆலிம்களின் உரிமைகளை அறியாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்  (முஸ்னத் அஹ்மத், தபரானீ, )

எவர் முஸ்லிம்களின் காரியங்களில் உதவி,  ஒத்தாசை செய்யவில்லையோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல:-

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لاَيَهْتَمُّ بِاَمْرِ الْمُسْلِمِيْنَ فلَيْسَ مِنْهُمْ، وَمَنْ لَمْ يُصْبِحْ وَيُمْسِ نَاصِحًا لِلّهِ وَلِرَسُوْلِهِ وَلِكِتَابِهِ وَلِاِمَامِهِ وَلِعَامَّةِ الْمُسْلِمِيْنَ فَلَيْسَ مِنْهُمْ. رواه الطبراني

எவர் முஸ்லிம்களின் காரியங்களில் கவனம் செலுத்தாமலும், அவைகளைப் பற்றிச் சிந்திக்காமலும் இருக்கிறாரோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல. மேலும், எவர் காலை, மாலை அல்லாஹுதஆலாவுடன், அவனது ரஸூலுல்லாஹி  உடன், அவனது வேதத்துடன், முஸ்லிம்களின் தலைவர் மற்றும் பொது (மக்கள்) முஸ்லிம்களுடன் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லையோ, மேலும் (எவர் இரவு, பகல் ஏதாவது நேரத்தில் மனத் தூய்மையுடனும் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்யவில்லையோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்லஎன்று ரஸூலுல்லாஹி  அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபதுப்னு யமான் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்(தபரானீ, தர்ஙீப்)

அநியாயம் செய்யும் மூவர்  நம்மைச் சார்ந்தவனல்ல:-

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ مِنَّا مَنْ دَعَا اِلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَي عَصَبِيَّةٍ. رواه ابوداؤد

எவர் முஸ்லிம்களின் காரியங்களில் கவனம் செலுத்தாமலும், அவைகளைப் பற்றிச் சிந்திக்காமலும் இருக்கிறாரோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல.

எவர் காலை, மாலை அல்லாஹுதஆலாவுடன், அவனது ரஸூலுல்லாஹி  உடன், அவனது வேதத்துடன், முஸ்லிம்களின் தலைவர் மற்றும் பொது (மக்கள்) முஸ்லிம்களுடன் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லையோஅவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல.

மேலும் (எவர் இரவு, பகல் ஏதாவது நேரத்தில் மனத் தூய்மையுடனும் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்யவில்லையோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல (அபூதாவூத்)

عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ “”.

(துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவரும்

சட்டைப்பைகளைக் கிழித்துக்கொள்பவரும்

அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்(புஹாரி 1297)

நமக்கு எதிராக ஆயுதத்தை எடுத்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

  عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا. (الحديث) رواه مسلم،

எவர் நமக்கு எதிராக ஆயுதத்தை எடுத்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல!” (முஸ்லிம்)

எவர் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ مَرَّ عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ. رواه مسلم،

நபி  அவர்கள் ஒரு தானியக் குவியலைக் கடந்து சென்ற போது, தமது புனிதமான கரத்தை அக்குவியலுள் நுழைத்ததும், கையில் ஈரத்தை உணர்ந்தார்கள்.இந்த ஈரம் எப்படி வந்தது?” என ரஸூலுல்லாஹி  ந்தத் தானிய வியாபாரியிடம் கேட்டதற்கு. யாரஸூலல்லாஹ்,  மழையில் தானியம் நனைந்துவிட்டதுஎன்றார் அவர். நனைந்த தானியத்தை, அதை வாங்குபவர் பார்க்கும்படி குவியலின் மேற்பகுதியில் ஏன் நீர் மாற்றவில்லைஎவர் ஏமாற்றுகிறாரோ (மோசடி செய்கிறாரோ) அவர் என்னைச் சார்ந்தவரல்ல (என்னைப் பின்பற்றுபவரில் உள்ளவரல்ல) என்று ரஸூலுல்லாஹி  அவர்கள் கூறினார்கள்(முஸ்லிம்)

கொள்ளையடிப்பவன் நம்மைச் சார்ந்தவரல்ல:-

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا.(وهو جزء من الحديث) رواه الترمذي

எவன் (மற்றவர்களின் பொருள்களைஅபகரிப்பானோ [கொள்ளையடித்தாரோ] அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” (திர்மிதீ)

பிறரை தூண்டி விடுபவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَي زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَي سَيِّدِهِ. رواه ابو داؤد،

ஒரு பெண்ணை அவளுடைய கணவனுக்கு எதிராக, அல்லது ஓர் அடிமையை அவனுடைய எஜமானனுக்கு எதிராக எவர் தூண்டி விடுவாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல  (அபூதாவூத்)

ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர் அவர்களைச் சேர்ந்தவராவார் அவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

«عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏”‏ ‏‏

ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார். அவர் நம்மைச் சார்ந்தவரல்ல ( அபூதாவூத் 1514 ,  4031)  

மீசையை  வளர்ப்பவர் நம்மைச் சார்ந்தவரல்ல:-

عَن زيد بن أَرقم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ: مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا

யார் மீசையை குறைக்கவில்லையோ அவர் நம்மை சார்ந்தவரல்ல[துர்ருல் மன்ஸூர்]

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவரல்ல:-

அன்புள்ளவர்களே! கணவன்மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ளவர்கள் அவர்களின் பிணக்குகளைத் தீர்த்து, அவர்களை சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இல்லாததையும் இருப்பதையும் இணைத்து மனைவியிடம் போட்டுக் கொடுத்து, கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

 ». عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم‍ « لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ ». رواه البخاري

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி  அவர்கள் கூறினார்கள்.  (அபூதாவூத் 2177)

». أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ، وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ. ». رواه البخاري

(என் தந்தை) அபூமூசா رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ அவர்கள் தமது கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பின்பு மயக்கம் தெளிந்தபோது, “நபி  அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித் துக்கொள்ளும் பெண்ணைவிட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். எவரிடமிருந்து நபி  அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன்என்று கூறினார்கள்.(புஹாரி 1296)

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001