இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்
اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54] இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது ; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது . உலகில் சத்தியம் நிலைக்கவும் , அசத்தியம் அழியவும் , அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே ! நபி ( ஸல் ) அவர்கள்தமதுஏகத்துவப்பிரசாரத்தை , ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது , முதலில் விளங்கி , அதிகளவு விரும்பி ஏற்று , செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே ! நபி ( ஸல் ) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆத்மீக , பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் ...