தக்வாவை கற்றுத் தரும் குர்பானி [இறையச்சமா?இறைச்சியா?]
لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ இஸ்லாத்தின் அடிப்படையான 5 கடைமைகளும் தக்வாவை கற்று தருவது போல , இந்த குர்பானி தியாகத்தையும் , தக்வா எனும் இறையச்சத்தை கற்றுத்தருகிறது . 1] ஈமான் [ கலிமா ]:- لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ ஈமான் கொள்ளும் போது தக்வாவோடு ஈமான் கொள்ள வேண்டும் . இல்லையெனில் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . அதுபோல ஒருவர் வாழும் போதும் لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ வின் பிறகாரம் [ தக்வாவோடு ] வாழ வேண்டும் . அவ்வாறு இல்லையெனில் அவரது வாழ்வு நல்ல வாழ்வாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . அதுபோல ஒருவர் மரணிக்கும் போது ஈமானோடு , [ தக்வாவோடு ] மரணிக்க வேண்டும் ....