தக்வாவை கற்றுத் தரும் குர்பானி [இறையச்சமா?இறைச்சியா?]

 


 

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ

 

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

 

இஸ்லாத்தின் அடிப்படையான 5 கடைமைகளும் தக்வாவை கற்று தருவது போல, இந்த குர்பானி தியாகத்தையும், தக்வா எனும் இறையச்சத்தை கற்றுத்தருகிறது

 

1] ஈமான் [கலிமா]:- لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ

ஈமான் கொள்ளும் போது தக்வாவோடு ஈமான் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதுபோல ஒருவர் வாழும் போதும் لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ வின் பிறகாரம் [தக்வாவோடு] வாழ வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவரது வாழ்வு நல்ல வாழ்வாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதுபோல ஒருவர் மரணிக்கும் போது ஈமானோடு, [தக்வாவோடு] மரணிக்க வேண்டும். இல்லையெனில் அவரது மரனம் நல்ல மரணமாக‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார்.

عن معاذ رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏”‏لقِّنوا مَوْتاكم لا إلهَ إلَّا اللهُ؛ فإنَّ مَن كان آخرَ كلمتِه لا إلهَ إلَّا اللهُ عندَ المَوتِ؛ دخَلَ الجنَّةَ‏”‏ ‏(‏‏(‏رواه أبو داود 3089)‏‏)‏‏.‏.‏

ஒருவரின் இறுதிச் சொல்லாக لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ ஆகிவிடுமானால். அவர் சொர்க்கத்தில் நுழைவார். [அபூதாவூத் 3089]

 عَنْ عُثْمَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ دَخَلَ الْجَنَّةَ. رواه مسلم، باب الدليل علي ان من مات  

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக அறிந்த நிலையில் எவர் மரணமடைகிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்’’. (முஸ்லிம்)

2] தொழுகை:-  ஒரு நாளைக்கு 5 நேரம் தொழுதால் வெறுக்கத்தக்க செயல்களை விட்டும், தவறான செயல்களை விட்டும், நம்மை பாதுகாத்து தக்வா எனும் ஞானத்தை கற்றுத்தருகிறது.

اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ

தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். [அல்குர்ஆன் 29:45]

3] நோன்பு:–  நாம் இறையச்சமுடையோராகத்தான் நமக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது .

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன்மூலம்) நீங்கள்இறையச்சமுடையோர் ஆகலாம் {அல்குர்ஆன் 2:183.}

4] ஜகாத்:–  நமது உள்ளத்தை பக்குவப்படுத்தி, தீய ஆசைகளை விட்டும் பாதுகாக்க வேண்டுமென ஜகாத் நமக்கு தக்வாவை கற்றுத்தருகிறது..

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ‌ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ

(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுப்பீராக! அதனால் அவர்களை நீர் சுத்தப்படுத்தி அவர்களின் அகங்களை தூய்மையாக்கி வைப்பீராக! மேலும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதியளிப்பதாகும், மேலும் அல்லாஹ், செவியேற்கிறவன், மிக்க அறிகிறவன்.{அல்குர்ஆன் 9:103}

5] ஹஜ்:–  அல்லாஹ்வுக்காக எனது நேரம், எனது செல்வம், எனது குடும்பம், எனது தொழில், போன்ற எல்லாத்தையும் அர்பணம் செய்யும் தக்வாவை ஹஜ் நமக்கு கற்றுத்தருகிறது..

ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம். ஹஜ் கடமையைப்பற்றிகூறப்படும்வசனம்  லில்லாஹி என்று தான் துவங்குகிறது.

[وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ( 97ال عمران

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். {அல்குர்ஆன் 3:97}

6] தக்வாவை கற்றுத் தரும் குர்பான்:– நமது குர்பானி பெயருக்கோ, புகழுக்கோ, முகஸ்துதிக்கோ இருக்க கூடாது. மாறாக இக்லாஸ் நிறைந்ததாக‌ மனத்தூய்மையாக இருக்க வேண்டுமென இந்த குர்பானி நமக்கு தக்வாவை கற்றுத்தருகிறது

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் ங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக{அல்குர்ஆன் 22:37}

 قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

நீர் கூறும்: மெய்யாக ன்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகியஅல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

 [அல்குர்ஆன் 6:162]

♣ குர்பானிகொடுப்பதின்முக்கியத்துவம் ♣ 

பல நாட்கள் சாப்பிட வசதியில்லாத நிலையில் இருந்த நம்முடைய நாயகம் () அவர்கள் தொடர்ந்து குர்பானி கொடுத்துள்ளார்கள்.

وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: أَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ، يُضَحِّي كُلَّ سَنَةٍ . رواه أحمد والترمذي وقال: حديث حسن .

நபி (ஸல்) அவர்கள் மதினாவில் தங்கிய பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள். [திர்மிதி 1507]

வசதியுள்ளவர்கள் அவசியம் இவ்வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் கூட்டு குர்பானியாவது கொடுத்து அந்த குர்பானியின் நன்மையைப் பெற முன்வர வேண்டும்.

[வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு நபியவர்களின் எச்சரிக்கை:- ]

عن أبي هريرة، أن رسول الله -صلى الله عليه وسلم- قال: «مَن كان له سَعَة، ولمْ يُضَحِّ، فلا يَقْرَبَنّ مُصَلّانا». [حسن.] – [رواه ابن ماجه وأحمد.]

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.  [இப்னுமாஜா 3123.]

 

குர்பானி கடமையாகுவதற்க்கு பொருளதார சக்தி எவ்வளவு பெற்றிருக்க வேண்டும் [ஷாஃபிஈ]
***********************************

ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் தஷ்ரீக்குடைய மூன்று நாட்களில் தன்னுடைய தேவைக்கும், தான் எவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுப்பது கடமையோ அவர்களுடைய தேவைக்கும், போக அதிகம் செல்வம் யாரிடம் இருக்குமோ அவர் குர்பானி கொடுப்பது [சுன்னதே முஅக்கதா] வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.

குறிப்பு :- அதிகம் செல்வம் பெற்றிருத்தல் என்பதாகிறது அந்நாட்களில் தன் தேவைக்கு போக மீதியுள்ள‌ செல்வத்தை வைத்து குர்பானி பிரயாணியை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அச்செல்வம் இருக்க வேண்டும். குர்பானி கடமையாகுவதற்க்கு பொருளதார சக்தி எவ்வளவு பெற்றிருக்க வேண்டும்

குர்பானி கடமையாகுவதற்க்கு பொருளதார சக்தி எவ்வளவு பெற்றிருக்க வேண்டும். [ஹனஃபி]
***************************************************

குர்பானி கொடுக்கும் நாட்களான துல்ஹஜ் பிறை 10 முதல் 12 ஆம் நாள் வரையுள்ள நாட்களில் ஒருவருக்கு அவரது அடிப்படைத் தேவைகள் & கடன்கள் போக,

1. 200 திர்ஹம் அல்லது 87.495 கிராம் தங்கமோ அல்லது
2.612.465 கிராம் வெள்ளியோ அல்லது
3. மேற்கண்டவற்றில் ஒன்றின் மதிப்புள்ள பணமோ அல்லது தங்கம், வெள்ளி, பணம் இம்மூன்றும் சேர்த்து வெள்ளியின் மதிப்பளவு [ இன்றைய நிலவரப்படி கணகீட்டுக் கொள்ளுங்கள் தோராயமாக‌ ரூபாய் ₹ 48631 ] இருந்தாலோ, அல்லது
4. வெள்ளியின் மதிப்பளவு வியாபாரப் பொருட்கள் இருந்தாலோ, அல்லது
5. குடியிருக்கும் வீடல்லாத வேறு சொந்த வீடோ கட்டடங்களோ இருந்தாலோ, அல்லது
6. பயன்படுத்தும் வாகனம் அல்லது அதிகப்படியான வாகனம் இருந்தாலோ,
7. வெள்ளியின் மதிப்பளவு காலிநிலம், மனை இருந்தாலோ,
8. வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள் போக வெள்ளியின் மதிப்பளவு
அதிகப்படியான ஆடம்பரப் பொருட்கள் இருந்தாலோ, குர்பானி கடமையாகுவதற்க்குறிய தகுதிகளாகும்.

[குர்பானியின் நோக்கம்:-]

குர்பானி எனும் மாபெரும் தியாகத்தின் மூலம் படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக{அல்குர்ஆன் 22:37}

[போன வருட நம் குர்பானி எப்படி இருந்தது சுயபரிசோதனை  செய்வோம் வாருங்கள்:-]

பஸ்ஸுல டிரைவரை பார்திருககிறீர்களா? 

அவரு ஒரு இடத்துல இருந்தாலும், அவரின் கவனம் நாளா புறமும் கவனம் இருக்கும். அவரின் கவனம் நாளா புறமும் இருந்தால்தான் 60 பயணிகளை நல்ல முறையில் கொண்டு சேர்க்க முடியும். அது போல நாமும் முற்கால அமல். தற்கால அமல். பிற்கால அமல் என மூன்று காலத்திலும் தக்வாவோடு அமல் செய்கிறோமா? என ஒவ்வெரு நேரமும் சுயபரிசோதனை செய்து வாழ‌ வேண்டும். அப்படி சுயபரிசோதனை செய்து வாழந்தால் மட்டும்தான் நம் வாழ்க்கை ஒளிமையைப் பெறும். எவ்வித தடங்களுமின்றி ஈமானில் உறுதியோடு வாழ்க்கை நகரும்.. இன்ஷா அல்லாஹ்.

[தன்னை சீர்திருத்தம் செய்ய நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள்:- ]

கீழுள்ள கேள்விகளுக்கான் பதில் நம்மிடம் இருந்தால் கொஞ்சம் அதிகப்படுத்த முயற்சிக்க‌ வேண்டும். இல்லையென்றால் தவ்பா செய்து அதிகமாக ஆர்வபட்டு அமல் செய்ய  முயற்சிக்க‌ வேண்டும். அப்படி முயற்சி செய்தால் மட்டுமே குர்பானி எனும் தேர்வில் கொஞ்சமாவதுநடுத்தரமான

மதிப்பெண்களையாவது பெற முடியும்.

1] போன வருடம் குர்பானி கொடுத்தோமே? குர்பானி கற்றுத்தந்த தியாக உணர்வு நம்மிடத்தில் இன்றைய நாள் வரை வந்திருக்கிறதா? அப்படி இல்லையெனில்;  , அப்போம் நம் குர்பானியில் கொஞ்சம் பிழையுள்ளது.

2] இப்ராஹிம் [அலை] அவர்கள் தன் மகனை அல்லாஹ்வுக்காக அர்பணம் செய்தார்கள் என வருடா வருடம் கேட்கிறோமே. தம் மகன்/ மகளை அல்லாஹ்வுக்காக எந்த விஷயத்தில் அர்பணம் செய்துள்ளோம். [பிள்ளைகளை ஒழுங்காக வளர்பதிலா? பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கொடுப்பதிலா? Etc..]

3] நாம் வருடா வருடம் குர்பானி கொடுக்கிறோமே குர்பானியின் முழுமையான சட்டங்கள் தெரிந்த பிறகுதானே குர்பானி கொடுக்கிறோமா?. அப்படி இல்லையெனில்;   நம் குர்பானியில் கொஞ்சம் பிழை ஏற்பட போகிறது. [அல்லது] பிழை ஏற்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் நம்மிடம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு நம் குர்பானியின் தரம் உள்ளது.

[”குர்பானி கொடுப்பவர்களே!! மார்க்க ஞானம் மிக மிக‌ அவசியம்:- ]

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்! [16:43 ]

 நம் குர்பானி மக்பூலாக & தக்வாவோடு இருக்க வேண்டுமெனால் மார்க்க ஞானம் மிக‌ அவசியமாகும்.

 நமது குர்பானியின் ஒவ்வொரு செயல்களும் இபாதத்துகளாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மார்க்க கல்வி மிக மிக அவசியமானதாகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ  “‏ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [இப்னுமாஜா,  229]

இந்த ஹதீஸிர்க்கு விளக்கமாக மாமேதை இமாம் கஜ்ஜாலி [ரஹ்] அவர்கள் கூறுவதாவது:

ஒருவர் புதிதாக கடை திறக்க போகிறார் என்றால், அவர் கடையின் வியாபாரம் சம்பந்தமாக ஹலால்‍- ஹராம் -கொடுக்கல்- வாங்கல்- கடன்- போன்ற இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக கற்ற பிறகுதான் கடையை திறக்க வேண்டும்.

அது போல ஒருவர் குர்பான் கொடுக்க  போகிறார் என்றால்- அவர்- குர்பானியின் சிறப்புகள்,-  குர்பானி கொடுக்காததின் தண்டனைகள்?,- யார் மீது குர்பானி கடமை? குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை? எவையெல்லாம் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள்?-  குர்பானிப் பிராணிகளின் வயது?‍‍-  குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்? குர்பானிப் பிராணிகளின் வளர்ப்பின் ஒழுக்கங்கள்? கூட்டுக் குர்பானி?-  குர்பானி எங்கே கொடுப்பது?-  எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?  - அறுப்பின் ஒழுக்கங்கள், அறுப்பின் ஓதப்படும் ஸூன்னத்தான துஆக்கள் ஆகியவைகளை மனனம் செய்வது கல்வி கடமையாகி விடுகிறது.

இவைகலெல்லாம் கற்ற பிறகுதான் குர்பான் கொடுக்க வேண்டும். இவைகலெல்லாம் கற்ற பிறகு நாம் குர்பான் கொடுத்தால்; நம் குர்பானி 100-க்கு 100- மதிப்பெண்னை பெறலாம் இன்ஷா அல்லாஹ்.

 

ஹதீஸ்களின் அடிப்படையில் குர்பானிப் பிராணிகளின்பற்றிநாம் அறிவது என்னவென்றால்,

1) ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் – இவற்றை மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும். வேறு பிராணிகளை குர்பானி கொடுக்க கூடாது.

2) ஆடு அல்லது மாடாக இருந்தால் இரண்டு வயதும் ஒட்டகமாக இருந்தால் ஐந்து வயதும் குர்பானி பிராணிக்கு பூர்த்தியாகியிருக்க வேண்டும். இவை கிடைக்க சிரமமாக இருந்தால் மட்டுமே ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைவானதை குர்பானி கொடுக்க கூடாது.

3) எவ்வித குறைபாடுகளற்ற கொழுத்த பிராணிகளை குர்பானிக்காகத் தேர்வு செய்ய வேண்டும்.

4) பாலூட்டும் பிராணியைக் குர்பானி கொடுக்க கூடாது.

[தியாகத் தன்மை வர வேண்டும்:- ]

இந்த குர்பான் எனும் அமல், அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் குர்பானுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த குர்பான் எனும் அமல் செய்பவர்கள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

[தியாக‌ உறுதியை ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும்:- ]

இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி,  ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாக குர்பானி திகழ்கின்றது. அல்லாஹ் []  அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. 

குர்பானி செய்யும் மனிதர்களிடம் குர்பானி நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், []  ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே கொடுத்தோம்‍, சாப்பிட்டோமென்று இருந்தால் அந்த குர்பானியின் நிலை குறித்து பாடங்கள் / படிப்பினைகளை  இழக்க‌ வேண்டியதாகி விடும்.

 

குர்பானி எல்லோருக்கும் பயன்:-

.

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ” [الحج:34].

ஆனால் அந்த காலத்து குர்பானிக்கும் நம் குர்பானிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு காலத்தில் குர்பானி என்பது ஏழைகளுக்கு எந்த பிரயோஜனமும் இன்றி வெறும் சடங்காக இருந்தது. ஆகாயத்தின் நெருப்புக்கு இரையாக மட்டும் இருந்தது. அதாவது இறைவனுக்காக பலி கொடுக்க நாடியவர் அதை எடுத்துகொண்டு போய் மலை உச்சியிலோ மைதானத்திலோ வைத்துவிடவேண்டும். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதைக் கரித்து சாம்பலாக்கினால் அதை இறைவன் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். வானிலிருந்து நெருப்பு வரவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை۔

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்கள் காபீல் ஹாபீல் இருவருக்கும் இக்லிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்வதில் ஏற்பட்ட வழக்கில் இறைவனின் தீர்ப்பு இதுவாகத்தான் இருந்தது. இருவரும் தங்கள் பலி பொருளை மைதானத்தில் வைக்க ஹாபீலின் ஆடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானத்தின் நெருப்பு வந்து அதை மட்டும் கரித்தது. அதன்படி இக்லிமாவைத் திருமணம் புரியும் வாய்ப்பு ஹாபீலுக்கு கிடைத்தது.

ஆக, இந்த முறையிலான குர்பானியால் குர்பானி கொடுப்பவருக்கு மட்டுமே லாபம் கிடைத்து வந்தது. ஆனால் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம் நடைமுறைக்கு வந்த குர்பானி முறையில், இறைச்சி ஏழைகளுக்கும் உறவுகளுக்கும் பங்கிடப்படுவதால் எல்லோருக்கும் பயன் கிடைக்கிறது.

[குர்பானி கொடுக்க பிறரை தூண்டுபவருக்கும் அழகிய கூலி கிடைக்கிறது.]

 عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.

எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்”  (அபூதாவூத் , திர்மிதீ 2671 )

......................  ........................................

மனிதர்களாகிய நாமும் நம்முடைய ஒவ்வொரு உறுப்பையும் ரப்பின் பொருத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்

 

அல்லாஹ் [தடுத்ததிலிருந்து நம்மின் ஒவ்வொரு உறுப்பையும் தியாகம் செய்ய வேண்டும்:-

✍🏻 அன்புள்ளவர்களே!   ஸ்மாயில்  (عَلَيْهِ السَّلاَمُ) அவர்கள் தன் ரப்புக்காக, தன் உயிரையும் தியாகம் செய்தார்கள். மனிதர்களாகிய நாமும் ம்முடைய ஒவ்வொரு உறுப்பையும் ரப்புக்காக தியாகம் செய்து ரப்பின் பொருத்தத்தை அடைவோமாக!

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக

قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَاءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ.

 (மகன்) கூறினார்;  என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்[அல்குர்ஆன்  37:102]

 மேற்கண்ட‌:- ஆயத்திற்கு த‌ஃப்சீர் விரிவுரையாளர்கள் ஸ்மாயில் (அலை) அவர்கள் தன் ரப்புக்காக தன் உயிரையும் தியாகம் செய்தார்கள். மனிதர்களாகிய நாமும் நம்முடைய ஒவ்வொரு உறுப்பையும் ரப்பின் பொருத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என விளக்கம் எழுதியுள்ளார்கள். (இப்னு கஸீர்)

சரி இப்போது விரிவாக பார்க்கலாம். வாருங்கள்..

1] நமது  “நாவு” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-நாவின் தியாகம் என்பது : பொய், புறம் , பிறர் மனம் நோகும்படி பேசுதல், பிறரைபட்டப் பெயர் சூட்டி அழைத்தலை  விட்டும்  தவிந்த்து இருத்தல் என்பதாகும். (49:11)

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ عَنِ النَّبِيِّ قَالَ: لاَ يَنْبَغِيْ لِلْمُؤْمِنِ اَنْ يَكُوْنَ لَعَّاناً

ஒரு முஃமின் சாபமிடுபவனாக, (பழிப்பவனாக) இருப்பது அவனுக்கு முறையல்ல” (திர்மிதீ) நல்ல வார்த்தையை பேசுவது தர்மமாகும் (புஹாரி:6022]

2] நமது  “கை” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-கையின் தியாகம் என்பது : தம் கையினால் பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதாகும். [உதாரணமாக] பிறரை அடித்தல், தண்ணீரை வீண் விரயம் செய்தல், தீய சாட்சிக்கு கையெழுத்து போடுதல், தீய கொடுக்கல் வாங்கல், மார்க்கத்திற்க்கு புரம்பான விஷயங்களை எழுதுதலை விட்டும்  தவிந்த்து இருத்தல் என்பதாகும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ

எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மை யான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார். [புஹாரி 10]

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِۖۛۚ وَاَحْسِنُوْاۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.  {அல்குர்ஆன் 2:195..}

وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِۖ உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் } என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம் : தீய உணவுப்பண்டங்களை தன் கையால் தயாரித்தல், தீய உணவுப்பண்டங்களை தன் கையால் விற்பனை செய்தல், தீய உணவுப்பண்டங்களை தன் கையால் வாங்கி பிறருக்கு கொடுத்தல், தீய உணவுப்பண்டங்களை பிறரிடமிருந்து நம் கையினால் வாங்குவது. Etc இவையெல்லாம் உலக வாழ்வில் நம் கையால் அழிவை தேடும் காரணிகளாகும்.

وَاَحْسِنُوْا என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம் :  மேற் சொன்ன விஷயங்களை தவிர்தலே நன்மை செய்வோராக ஆகலாம். இன்ஷா அல்லாஹ்.

عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ يَقُولُ: مَنْ رَأَي مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذلِكَ أَضْعَفُ اْلإِيمَانِ. رواه مسلم، .

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்.  (Riyad as-Salihin 184  )

3] நமது காது ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-காதின் தியாகம் என்பது:– இசை கேட்டல், புறம் பேசுவதை கேட்டல், தீமைகளை கேட்டும் அதை தடுக்காமல் இருத்தல்.  செவியுறக்கூடாத விஷயங்களைச் செவியுறுவதை  விட்டும்  நீங்கி  இருப்பதாகும்.

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ

அவர்கள் வீணான  (பேச்சு, செயல் ஆகிய) வற்றை விட்டு விலகியிருப்பார்கள் . {அல்குர்ஆன் 23:3}

4] நமது  “கண்க‌ள்” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-

கண்ணின் தியாகம் என்பது:-  வீண் விளையாட்டான செயல்களைப் பார்பதை விட்டும் நீங்கி இருப்பதாகும்..

وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ لا وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا.  இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணானதின் பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள். (அல்ஃபுர்கான்:72)

டி வி பார்ப்பதில், பேஸ்புக் பார்ப்பதில், வாட்ஸப்,  இண்ஸ்டாகிராம்,  யூட்யூப்,  ஆகிய வைகளில்  பார்க்க‌கூடாத விஷயங்களை பார்ப்பதை விட்டும் நீங்கி இருப்பதாகும்.

اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.(அல்குர்ஆன் 36:63,65)

يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். (அல்குர்ஆன் 24:24, 25)

5] நமது  “கால்க‌ள்” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-

கால்களின் தியாகம் என்பது:-   தீமையின் பக்கம் போகாமலிருத்தல், தீமைக்கு உதவமாலிருத்தல்,  என்பதாகும்.

6] நமது “வயிறை” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-

வயிறுடைய தியாகம் என்பது :- நாம் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் ஹராமான‌ உணவை சாப்பிடாமல் இருத்தல் என்பதாகும்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்த பாத்திரத்தையும்  நிரப்புவது, அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை. 

அவர் வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் தண்ணீருக்காகவும், மூன்றில் ஒரு பாகம் மூச்சுவிட காலியானதாக வைத்துக்கொள்ளவும்.

7] நமது நப்ஸு” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-நப்ஸுடைய தியாகம் என்பது :– பேராசை, மனோ இச்சை ஆகியவற்றை விட்டும் நீங்கி இருப்பதாகும்.

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ اللهِ صلعم كَانَ يَقُولُ: اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا..

ஹஜ்ரத் ஸைதுப்னு அர்க்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் (اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا) யாஅல்லாஹ்! பலன் தராத கல்வியை விட்டும், அச்சமற்ற உள்ளத்தைவிட்டும், மனநிறைவு கொள்ளாத ஆத்மா (நப்ஸ்) வை விட்டும், ஏற்றுக் கொள்ளப்படாத துஆவைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் என்று துஆச் செய்து கொண்டு இருப்பார்கள். (முஸ்லிம்)

8] நமது “உள்ளம்” ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-உள்ளத்தின் தியாகம் என்பது :-  பிறரைப் பற்றிய நல்லெண்ணம் வைப்பதும், உலக ஆசைகளை விட்டும் நீங்கியிருப்பதாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَصْرٌ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “‏ حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ ‏”‏ நிச்சயமாக பிறரைப் பற்றிய நல்லெண்ணம் வைப்பது அழகிய வணக்கங்களில் உள்ளதாகும். ( அபுதாவூத் 4993)

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰى‏ தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். [அல்குர்ஆன் 87:14]

 وَذَكَرَ اسْمَ رَبِّه فَصَلّٰى‌ அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். [அல்குர்ஆன் 87:15]  நம் வாழ்வில் இறைசிந்தனை மட்டுமே அதிகமாக இருக்க வேண்டும்.

✍🏻 அன்புள்ளவர்களேநாம் குர்பானி கொடுப்பவராக இருந்து  நகம், முடியை வெட்டாமல், குர்பானி கொடுக்கும் வரை 10 நாட்கள் பேணுதலாக‌ இருந்து நம் குர்பானியை சிறப்பித்தது போல‌. நம் வாழ்நாள் முழுவதும் சிறக்க ஹலால் ஹராம் பேணி வாழ்வோமாக!

قال : “‏«مَنْ كان له ذِبْحٌ يَذْبَحُهُ، فإذا أُهِلَّ هِلال ذِي الحِجَّة، فلا يَأْخُذَنَّ من شَعْرِه ولا من أظْفَارِه شيئا حتى يُضَحِّي»‏”‏ (‏‏(رواه مسلم)‏‏)‏‏.

9] நமது “ரூஹு “ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-ரூஹுடைய தியாகம் என்பது:- மறுமையின் இன்பங்களை விட்டும் நீங்காதிருப்பதாகும். அதாவது சொர்க்க நரகத்தை பார்பது போல தொழுதல், உஸ்மான் ரலி அவர்களைப்போல மண்ணரைக்கு சென்றால் தாடி நனையும் வரை அழுதல்,

10] நமது  ஸிர்ரு”  ரப்பின் பொருத்தத்திற்காக தியாகம் செய்ய வேண்டும்:-ஸிர்ருடைய தியாகம் என்பது  : அல்லாஹ் அல்லாத அனைத்து படைப்பு எண்ணங்களை வீட்டும் நீங்கி இருப்பதாகும். இரு நன்மை, தீமையை எழுதும் மலக்கு நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் என்ற சிந்தைனையுடன் வாழுவது.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ.

ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும். (திர்மிதீ)

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّه جَنَّتٰنِ‌ தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. [அல்குர்ஆன் 55:46]

நம்மின் ஒவ்வொரு உறுப்பும் ஸதகா செய்ய வேண்டும்:-

நாம் நம்முனுடைய ஒவ்வோர் உறுப்புக்கும் ஸதகா செய்வோமாக!!  மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்.  புகாரி (2707)

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001