ரமழானை வரவேற்போம்-02
அருள் வளம் பொருந்திய அற்புத மாதமாம் ரமழான் வந்துள்ளது . அல்ஹம்துலில்லாஹ் ! பாவ மன்னிப்பும் இரட்டிப்பு நன்மையும் வழங்கப்படுகின்ற இந்தப் புனித மாதத்தின் சிறப்புக்களை அறிந்து பக்குவத்துடனும் அழகிய முறையிலும் இம்மாதத்தினை அனுசரித்து நடக்க நாம் முற்பட வேண்டும் . குர்ஆனின் மாதம் : இந்த ரமழானுக்கு அல்லாஹ் வழங்கிய எல்லாப் புனிதத்துவத்துக்கும் அடிப்படையாக அமைவது இம்மாத்தில் இறுதி வேதமாம் அல்குர்ஆன் அருளப்பட்டதேயாகும் . “ ரமழான் மாதம் எத்தகையதென்றால் , அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் , நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் , ( சத்தியத்தையும் , அசத்தியத்தையும் ) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது . எனவே , உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் . யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ ( அவர் ) வேறு நாட்களில் கணக்கிட்டு ( நோற்று ) க் கொள்ளட்டும் . அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான் . அவன் உங்களுக்குக் கஷ்டத...