ரமலானை வரவேற்போம்
ரமலான் இன்னும் சில தினங்களில் வரபோகிறது கேட்கும் பொழுதே எவ்வளவு உள்ளத்தில் மகிழ்ச்சியாக உள்ளது! ஒவ்வொரு வருடமும் ரமலான் உற்சாகமாக வருகிறது ஆனால் இதற்கு நம்மில் பலர் தயார் இல்லை! ஒரு சாரார் வேலை படிப்பு நிக்காஹ் என்ற அற்ப காரணங்களை கூறிய ரமலானை பாழாக்கி விடுகிறார்கள் - இன்னும் சிலர் என்ன புது வகை உணவு செய்யலாம்? ஸஹருக்கு என்ன செய்யலாம் - இப்தருக்கு என்ன செய்யலாம் என்பதில் நோன்பை பாழாக்கி விடுகிறார்கள்!
•
இன்னும் சிலர் உண்ணுவது உறக்குவது என்பதிலயே ரமலான் சென்று விடுகிறது! இன்னும் சிலருக்கு பிறை பற்றி கருத்து வேறுபாடு - தராவிஹ் தொழுகை எண்ணிக்கை பற்றி கருத்து வேறுபாடு இதிலயே பலருக்கு ரமலான் பாழாகி விடுகிறது நவுதுபில்லாஹ்! வருடத்தில் ஒரு முறை தான் இந்த ரமலான்
நமக்கு கிடைகின்றது அதையும் அற்ப காரணங்களால் நாம் பாழாக்கி விட கூடாது!
ஏன் என்றால் எத்தனையோ நபர்கள் நமக்கு தெரிந்தவர்கள் சென்ற ரமலானில் நம்முடன் இருந்தவர்கள் தற்பொழுது கிடையாது! இன்னும் சிலர் இன்று நாளையோ என்று கையில் உயிரை பிடித்து கொண்டு மரண படிக்கையில் உள்ளார்கள்! இவர்களிடம் கேட்டு பாருக்கள் ரமலான் உடைய அருமை பற்றி!!! காரணம் உடலில் ஆரோக்கியம் இருக்கும் போது அதன் அருமை தெரியவில்லை - சாகும் நேரத்தில் தான் அதன் அருமை நம்மில் பலருக்கு விளங்குகிறது!
ரமலானை வரவேற்போம்
•
ரமலான் வரும் முன்பே நாம் ரமலானில் அதிகம் அமல்கள் செய்ய எற்றால் போல் நம்முடைய வேலை படிப்பு
சூழ்நிலைகளை ஆகிவற்றை ஆக்கி கொள்ள வேண்டும்!
நம்மில் எத்தனை நபர்கள் இந்த ரமலானை முழுமையாக அடைய போகிறோம் என்பது தெரியாது அதனால் இயன்ற அளவுக்கு இப்போது இருந்தே நாம் ரமலானுக்கு என்ன என்ன அமல் செய்யலாம்! அதை எப்படி செய்யலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும்!
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்! மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்!
(சூரத்துல் : அல் முல்க் : 02)
அல்லாஹ் நம்மை படைத்த நோக்கமே அவனை இக்லாஸ் ஆன முறையில் அமல் செய்ய தான் என்றால் அதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ரமலானில் நமக்கு உள்ளது அதை ஒரு போதும் தவற விட்டு விட கூடாது! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்! அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! (நூல் : ஸஹீஹ் புகாரி : 1896)
நம்மில் எத்தனை பேர் இந்த பாக்கியத்தை அடைய போகிறோம்? இன்ஷாஅல்லாஹ் ரமலான் வர போகிறது அதை எந்த விதத்தில் எப்படி ஆதரித்து வரவேற்க போகிறோம்? என்பது தான் இப்போது முக்கியம்! ரமலான் என்பது நோன்பிற்கு மட்டும் தானா? நம்மில் பலர் ரமலான் என்றாலே நோன்பு மட்டும் நினைவில் வரும் காலை முதல் மாலை வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும்! ஆனால் அவ்வாறு கிடையாது! ரமலானில் நோன்பு என்பது ஒரு பகுதி
மட்டுமே அதை தவிர்த்து இன்னும் நிறைய உள்ளது!-
ரமலான் என்பது : ரமலான் என்றால் அமைதிக்கான மாதம் உடல் ஆரோக்கியத்திற்கான மாதம் - நல்ல அமல்கள் எந்த இடையூறும் இல்லாமல் செய்ய ஏற்ற மாதம் - அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையும் பெற்று தரும் மாதம் - சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் - நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம் - அல்குர்ஆன் அதிகம் ஒத ஏற்ற மாதம் - பாவங்களை விட்டு விலகி நல்லோர்களாக மாற ஏற்ற மாதம் - அல்லாஹ்வை நெருக்க ஏற்ற மாதம் - தானம் தர்மங்கள் அதிகம் செய்ய ஏற்ற மாதம் - உபரியானா தொழுகைகள் தொழ ஏற்ற மாதம் சுபஹானல்லாஹ் இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம் ரமலான் மாதம் பற்றி!!!!
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ரமலானில் நோன்புடன் நிறுத்தி விடாமல் நம்முடைய சக்திக்கு எற்றால் போல் அதிகம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்!
·
ரமலானுக்கு இப்போது இருந்தே தயார் ஆகுவோம்!
'
நம்மில் பலர் சரியாக தொழ மாட்டோம்! அல்குர்ஆன் ஒத மாட்டோம் பாவங்களில் இருந்து விலக மாட்டோம் ரமலான் வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியமாக உள்ளோம் நவுதுபில்லாஹ்!
•
நல்ல அமல்கள் செய்ய வேண்டும் - பாவங்களை விட்டு விலக வேண்டும் என்று எண்ணம் இருக்கும் பொழுது ஏன் அதை ரமலான் வரை தாமதம் செய்ய வேண்டும்?
ஷைத்தான் இவ்வாறு தான் நம்மை ஏமாற்றி கொண்டு இருப்பான் ரமலான் வரும் பொழுது மாற்றி கொள்ளலாம் என்பான் - பின்பு ரமலான் 10 நோன்புகள் பின்பு மாற்றி கொள்ளலாம் என்பான் பின்பு ரமலான் 20 நோன்பு பின்பு பார்த்து கொள்ளலாம் என்பான் பின்பு ஒற்றைப்படை நோன்பில் மாற்றி கொள்ளலாம் என்பான் கடைசியாக ரமலான் முடிய போகிறது இதன் பின்பு மாறி என்ன ஆக போகிறது என்று கடைசி வரை நம்மை அமல் செய்யவும் விடாமல் பாவங்களில் இருந்து விலகுவும் விடாமல் வைத்து விடுவான் நவுதுபில்லாஹ்!
1)
பாவங்களில் இருந்து விலகி இன்றே
அல்லாஹ்வின் பக்கம் திரும்புபோம்!
பாவங்களில் இருந்து விலக ரமலான் வரை காத்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! இன்று பாவங்களில் இருந்து விலகி அந்த பாவத்தின் பக்கம் மீண்டும் செல்ல கூடாது என்று உறுதியாக எண்ணம் வைத்து அல்லாஹ்விடம் தவ்பா செய்து அவன் பக்கம் மீள்வோம்! மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லாமல் இருக்க அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்!
நாம் இப்போதே பாவங்களில் இருந்து விலக வில்லை என்றால் ரமலான் அப்போதும் நம்மால் அவ்வளவு எளிதில் பாவங்களை விட்டு விலக முடியாது! ரமலானை தூய்மையான உள்ளதுடன் வரவேற்போம் இன்ஷாஅல்லாஹ்!
.
2)
அமல்கள் செய்ய திட்டமிடுவோம்!
நாம் ஒரு ஊர்க்கு பயணம் செய்ய போகிறோம் அல்லது ஒரு தொழில் ஆரம்பம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு எவ்வாறு திட்டமிடுவோம்? அதை பற்றி பலரிடம் ஆலோசனை கேட்டு யோசித்து பின்பு ஆரம்பம் செய்வோம்!
@sadham_ibnu_akbar
அழிந்து போக கூடிய உலகிற்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால் அழிவே இல்லாத மறுமை வாழ்கைக்கு தயார் செய்ய நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
•
நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும் - சிலருக்கு பள்ளிக்கூடம் கல்லுரி - இன்னும் சிலருக்கு வேலைகள் சுய தொழில்கள் - மருத்துவ பார்ப்பது என்று ஏதேனும் ஒன்று இருக்கும்! 'இன்ஷாஅல்லாஹ் ரமலானில் அமல் செய்ய எற்றால் போல் நம்முடைய வேலை படிப்புகளை ஆக்கி கொள்ள வேண்டும் அதை எவ்வாறு செய்யலாம் எப்படி செய்யலாம் என்று இப்போதே திட்டமிட வேண்டும்!
3)
ரமலான் பற்றி இப்போதே அறிந்து வைத்து கொள்ளுவோம்!
ரமலான் மாதத்தில் தான் நம்மில் பலருக்கு இதை செய்யலாமா கூடாத? இது செய்ய அனுமதி உண்டா இல்லை என்று நிறைய கேள்விகள் எழும் பலர் ஸஹர் செய்யாமல் குளிப்பு கடமை ஆகி விட்டது! இப்போது எப்படி நோன்பு வைப்பது என்று ஸஹர் நேரத்தில் ஒவ்வொரு நபருக்கா போன் செய்து கொண்டு இருப்பார்கள்! இவ்வாறு சந்தேகம் நம்மில் ஒவ்வொரு நபருக்கும் எழும் எனவே ரமலான் வரும் முன்னே அதை பற்றி இயன்ற அளவுக்கு அறிந்து வைத்து கொள்ள வேண்டும்! ரமலான் சார்ந்த நூல்கள் வாசிப்பது! பயான்கள் கேட்பது! அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்களை பின் பற்றும் ஆலிம்களை கேட்பது என ஏதேனும் ஒரு வழியில் அறிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும்!
4)
மனஇச்சைகளை வீழ்த்துவோம்!
.ரமலான் உடலுக்கு மட்டும் அல்ல உள்ளதை சீர் செய்யவும் ஏற்ற மாதமாகும்! இவ்வளவு காலம் உள்ளம் பல தீய செயல்களை தூண்டி அதை செய்ய வைத்து! பல தவறான எண்ணங்களை உள்ளத்தில் வர வழைத்து நம்மை நிறைய பாவங்கள் செய்ய வழி காட்டி உள்ளது இதற்கு ஒரு முற்று புள்ளியாக இந்த ரமலான் மாதம் உள்ளது!
உள்ளத்திற்கு எதிராக நாம் யுத்தம் செய்து அதை அல்லாஹ்விடம் பணிய செய்ய வேண்டும்! உள்ளம் அசுத்தம் ஆக இருந்தால் அதை நல்ல அமல்கள் மூலம் சுத்தம் செய்து விடலாம்! உள்ளத்தில் அதிகம் நல்ல செயல்கள் சென்றால் எளிதாக உள்ளம் தூய்மை ஆகி விடும் உள்ளம் தூய்மை ஆகி விட்டால் நம்மை இறைவன் பக்கம் செல்ல உள்ளமும் உறுதுணையாக இருக்கும்!
இந்த ரமலானில் மட்டும் நாம் உள்ளதை எதிர்த்து அடக்கி விட்டால் அல்ஹம்துலில்லாஹ் அதன் பின்பு அதை எதிரிப்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும்! எனவே இந்த ரமலான் மாதத்தை வீணாக்கி விட வேண்டாம்!
5)
ரமலான் தர்மத்தின் மாதம்!
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்! ஜிப்ரீல் (அலை) தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1902)
இமாம் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் வழங்கி கொடை எல்லா வகையான கொடைகளையும் உள்ளடக்கியது : கல்வி கற்றுக் கொடுப்பது, அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக உயிரையும் பொருளையும் தியாகம் செய்வது, அல்லாஹ்வின் அடியார்களுக்கு வழிகாட்டுவது போன்ற எல்லா அம்சங்களும் நபியவர்களிடம் இருந்தன! மேலும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் நன்மை கிட்டுமாறு செய்வார்கள்! அதாவது, அறியாதவர்களுக்கு கல்விகற்பிப்பது, தேவையுடையோரின் தேவைகளை நிறைவேற்றுவது, பசித் தோருக்கு உணவழிப்பது போன்ற எல்லா வழிகளிலும் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டிருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்! இப்படி அவர்கள் கொடை வழங்குவது ரமளான் மாதத்தில் பன்மடங்காகும்! காரணம், ரமளானின் காலம் ஒரு சிறந்த காலம்! அதில் கூலி இரட்டிப்பாக்கப்படும்! (நூல் : மஜாலிஸ் ஷஹ்ரு ரமளான் : 51)
•
தர்மம் என்றாலே செல்வத்தை பிறருக்கு கொடுப்பது மட்டும் அல்ல மாறாக நம்மிடம் உள்ள நல்லவிசயங்களையும் தர்மம் செய்ய வேண்டும்! நபியவர்களைப் போல. எந்த விதத்திலாவது மனித குலம் நம்மைக் கொண்டு பலனடைய வேண்டும்! அப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைகள் உருவாக்குவதற்கு றமளான் ஒரு நமக்கு மகா வாய்ப்பு ஆகும்!
6)
அல்குர்ஆன் ஓத ஆரம்பம் செய்வோம்!
'
இன்று பலர் அல்குர்ஆன் ஓதுவது என்றாலே யாரேனும் வீட்டில் இறந்து விட்டால் - நிக்காஹ்வின் போது அல்லது ரமலான் பொழுது தான் அல்லாஹ் பாதுகாக்கனும்! அல்குர்ஆனில் தான் இம்மை மறுமைக்கு
தேவையான அனைத்தும் உள்ளது! அல்லாஹ்வை நேசிக்கும் ஒவ்வொரு அடியானும் அல்குர்ஆனை ஓதுவதையும் - கேட்பதிலும் இன்பம் காண்பர்கள்!
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது!
(சூரத்துல் : அல் பகரா : 185)
ரமலானையும் அல்குர்ஆனையும் பிரித்து பார்க்கவே முடியாது! அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி ரமலானை சிறப்பித்தான அல்லது ரமலானில் அல்குர்ஆனை இறக்கி சிறப்பித்தான? என்ற முடிவுக்கு வருவது கஷ்டம் ஆகும்!
*
ரமலான் வந்தால் தான் அல்குர்ஆனை கையில் எடுப்பேன் என்று இருக்காமல் இன்று இருந்தே அல்குர்ஆனை ஓத ஆரம்பம் செய்ய வேண்டும்!
*
நாம் அல்குர்ஆனை ஓத வேண்டும் - ஓதுவதை கேட்கவேண்டும்! பிறருக்கும் ஓத சொல்லி கொடுக்க வேண்டும்! ஓத தெரியவில்லை என்றால் தெரிந்த மொழில் ஆவது ஓத வேண்டும்! அல்லது குறைந்தது ஓதுவதையாவது செவிதாழ்த்தி கேட்கவேண்டும்!
7)
உம்ரா செய்ய முயற்சி செய்யவேண்டும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1863)
நாம் தெரிந்தே எவ்வளவு உலக வாழ்கைக்கு செலவு செய்கிறோம் என்றாவது ஹஜ் செய்ய வேண்டும் அல்லது உம்ரா செய்ய என்று பணம் சேர்த்து உள்ளோமா அல்லது அதற்கு ஏதேனும் முயற்சி தான் செய்து உள்ளோமா?
*
இன்ஷாஅல்லாஹ் இந்த ரமலானில் ஆவது உம்ரா செய்ய முயற்சி செய்யவேண்டும் அல்லது நம்மிடம் பொருளாதாரம் அதிகம் இருந்தால் ஸாலிஹான மார்க்க கடமைகளை பேணும் மக்களில் யாரேனும் நாம் ஹஜ் அல்லது உம்ரா செய்ய உதவி செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்!
8)
நன்மைகளை அதிகம் செய்ய முயற்சி செய்யவேண்டும்!
*
ஒவ்வொரு முறை ரமலான் வரும் பொழுதும் நன்மைகளை வாரி வழங்கும் மாதமாகவே வருகிறது! ஆனால் நம்மில் பலர் இதை அலட்சியமாகவே விட்டு வ…
:
நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 148)
*
ரமலான் மாதத்தில் பிறர் நோன்பு வைக்க வில்லை நாம் நோன்பு வைத்து உள்ளோம் என்று இருந்து விடாமல்! அவர் அல்குர்ஆன் அதிகம் உள்ளார் இன்ஷாஅல்லாஹ் நான் அவரை விட இன்னும் அதிகம் ஓத வேண்டும்! நபில் தொழுகைகள் தஹஜ்ஜத் - லூஹா தொழுகை போன்ற உபரியானா தொழுகைகள் மற்றும் தர்மம்கள் அதிகம் செய்ய வேண்டும்!
9)
விளம்பரப்படுத்த வேண்டாம்!
அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று பார்க்கலாம் பலர் உண்ணுவது உறக்குவது உடுத்தும் ஆடை குடும்பம் என அனைத்தும் விளம்பரம் செய்வார்கள்! இன்னும் சிலர் ரமலானில் ஸஹர் உணவு இஃப்தர் உணவு - பெருநாள் ஆடை - தஹஜ்ஜத் தொழுகை - அல்குர்ஆன் ஓதுவது என அனைத்தையும் புகைப்படம் எடுத்து status ஆக வைத்து பெருமை கொள்ளுவார்கள் நவுதுபில்லாஹ்!
*
எவ்வளவு மக்கள் இந்த அருட்கொடைகள் கிடைக்க வில்லை - அல்லாஹ் அதை நமக்கு கொடுத்து உள்ளான் அதற்கு நன்றி செலுத்தாமல் ஏன் இவ்வாறு அதை செய்ய வேண்டும்??? இதனால் கண்ணெறு தான் நமக்கு ஏற்படும்!
*
நன்மை தீமை பதிவு செய்ய அல்லாஹ் மலக்கு மார்களை வைத்து இருக்கும் பொழுது ஏன் இத்தனை ரக்ஆத் தொழுது உள்ளேன் இவ்வளவு ஆயத் ஓதி உள்ளேன் என்று செய்த அமல்களை கூறி ஏன் பெருமை கொள்ள வேண்டும்???
*
இவ்வாறு விளம்பரம் செய்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்! இயன்ற அளவுக்கு பிறருக்கு உதவி செய்யுங்கள் நாமும் நமது குடும்பமும் உண்டோம்! நல்ல முறையில் நோன்பு வைத்தோம் என்று இல்லாமல் நமது அண்டை வீட்டார் உறவுகள் நோன்பு வைத்தார்களா இல்லை ஏதேனும் பிரச்சனையா என்று அறிந்து அவர்களுக்கு நம்மால் ஆன இயன்ற உதவிகளை இன்ஷாஅல்லாஹ் செய்ய வேண்டும்!
ரமழான் நல்லறங்களின் மாதம்:பாவமன்னிப்பின் மாதம்
மகத்தான இரவின் மாதம்:
கருத்துகள்
கருத்துரையிடுக