இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாமும் -நண்பர்களும்

  ஸஹர் _ சாப்பாடும் _ பைக்கும் ! ரமலான் கடைசி   10 தினங்கள் -   அதிகமாக ஸஜ்தா செய்வா ? இல்லை , ஊரைவிட்டு ஊர் சென்று வித விதமாக உணவை ருசிக்கவா ? இதைப் பற்றி நான் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன் . இப்போது ஒரு உயிர் போன பின் அவசியம் கருதி எழுதுகிறேன் . திருமங்கலக்குடிவடக்கு தெரு மஹல்லாவை சேர்ந்த V. A.R. நகரில்வசிக்கும் மேஸ்திரி ஹாஜா ஷரீப்ன்   இளைய மகன்   H. அம்ஜத் (20) வாகன விபத்தில் வபாத் ஆகிவிட்டார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி   ராஜிவூன் ... தயவுசெய்து ரமலான் மாதங்களில் ( சகர் சாப்பிட டீ குடிப்பதற்கு ) என்று இருசக்கர வாகனத்தில்   வெளியூர் செல்லும் சகோதரர்களை வீட்டில் உள்ள தாய் தந்தையர் கொஞ்சம் கண்காணியுங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகளை இழப்பது என்பது மிகவும் கடினமான தருணம் அது நம் எதிரிக்குக் கூட நிகழக்கூடாது இறைவன் தான் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் ... இலவச ஸஹர் உணவு   யாருடைய பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது ? வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவ...