நாமும் -நண்பர்களும்
ஸஹர்_சாப்பாடும்_பைக்கும்!
ரமலான் கடைசி 10 தினங்கள் - அதிகமாக ஸஜ்தா செய்வா? இல்லை, ஊரைவிட்டு ஊர் சென்று வித விதமாக உணவை ருசிக்கவா?
இதைப் பற்றி நான் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இப்போது ஒரு உயிர் போன பின் அவசியம் கருதி எழுதுகிறேன்.
திருமங்கலக்குடிவடக்கு தெரு மஹல்லாவை சேர்ந்த V. A.R.நகரில்வசிக்கும்மேஸ்திரி ஹாஜா ஷரீப்ன் இளைய மகன்
H.அம்ஜத் (20)வாகன விபத்தில் வபாத் ஆகிவிட்டார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
தயவுசெய்து ரமலான் மாதங்களில்( சகர் சாப்பிட டீ குடிப்பதற்கு) என்று இருசக்கர வாகனத்தில் வெளியூர் செல்லும் சகோதரர்களை வீட்டில் உள்ள தாய் தந்தையர் கொஞ்சம் கண்காணியுங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகளை இழப்பது என்பது மிகவும் கடினமான தருணம் அது நம் எதிரிக்குக் கூட நிகழக்கூடாது இறைவன் தான் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்...
இலவச ஸஹர் உணவு யாருடைய பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது? வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், மருத்துமனையில் தங்கி இருப்பவர்கள்,இப்படியாக இருப்பவர்களுக்காகத்தானே அது இலவசமாக கொடுக்கப்படுகிறது? ஆனால் இப்போது எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? யார் வீட்டில் உணவு இல்லை? ஏன் ஒவ்வொரு ஜமாத்திலும் இலவச ஸஹர் சாப்பாடு ஏற்பாடு செய்கிறார்கள்? இது இப்போதுதானே புதுப் பழக்கமாகி வருகிறது? 4வருடத்திற்கு முன் மயிலாதுறை அருகில் இருக்கும் ஊரிலிருந்து ஸஸர் சாப்பிட வந்த நான்கு இளைஞர்களை போலீஸ் கைது செய்து சிறையி்ல் அடைத்தார்கள். அப்போது அது பெரிய பிரச்சனையாக ஆனது.
இப்படியும் சிலர் வாழ்க்கை இருக்கிறதுஅதாவது
ஒரு லாரி ஓட்டுநர் இந்த ரமலானில் ஜமாஅத்தாக தொழ முடியவில்லை என்று வருத்தப்பட்டார். அவரின் ஸஹர் சாப்பாடு என்ன என்று கேட்டால், "வண்டி எங்கு நிற்குதோ, அங்கே வாழைப் பழமோ, ரொட்டியோ எது கிடைக்குதோ அதை வாங்கிக் கொள்வேன் என்பார்.
இப்போது அதிக இடங்களில் ஸஹர் சாப்பாடு இலவசம் இலவசம் என்று தமிழ் நாடு முழுவதும் பெரிய விளம்பரமாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு ஆலிம் இப்படி பயான் செய்தார், "இலவச ஸஹர் சாப்பாடு ஜாக்கிரதை" என்று. 'அதில் சில பேர் ஜகாத் நிதியைத் தருகிறார்கள்; அதை உண்ணக் கூடாது' என்று பேசினார்.
ஏற்கெனவே ஸஹர் சாப்பாடுக்காக பைக்கில் சென்று விபத்தில் பல உயிர்கள் போயிருக்கின்றன. இது தேவையா என்று அனைத்து ஊர் ஜமாஅத்தார்களும் யோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் கண்டிப்பாக நட்பு என்ற உறவை பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.
நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்புகொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது.
நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பனிடம் தெரிவிக்கும் போது நெஞ்சத்தில் ஏற்பட்ட கனம் காணாமல் போய்விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டிடத்தைத் தாக்க வரும் மின்னலை இடிதாங்கி வாங்கிக் கொண்டு கட்டிடத்தை காப்பதைப் போல உதவுகிறது. நண்பர்களை அதிகம் பெற்றவர்கள் தங்களது காரியங்களை சுலபமாக முடித்துவிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் நண்பர் பணிபுரிந்தால் இவர் மருத்துவமனை செல்ல நினைக்கும் போது தேவையான ஏற்பாடுகளை நண்பரே செய்துகொடுக்கிறார். கஷ்டங்கள் வரும்போது பக்கபலமாகவும் நிற்கிறார். இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் நபி (ஸல்) அவர்கள் நட்புவைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்லகாரியத்தையும் அற்பமாக நினைத்துவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (4760)
அழகிய நட்பு இறைவனுடைய பொறுத்தத்தை பெற்றுத்தரக்கூடியதாக உள்ளது. நட்பின் ஒழுங்குகளை அறிந்து அதனடிப்படையில் பழகுபவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தல் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ர) அவர்கள்
நூல் : திர்மிதி (1867)
ü நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்
ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாறும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களேத் தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர) அவர்கள்
நூல் : புகாரி (3336)
ü நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்
ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் இந்த நட்புத்தான் தீர்மானிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கங்கெட்டவனாக மாறிவிடுவதுண்டு. படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுவதும் உண்டு. பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இருஉலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்லநண்பர்களை தேர்வுசெய்துகொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ர) அவர்கள்
நூல் : புகாரி (2101)
தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறுஉலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.
عَنِ الْمُجْرِمِيْنَۙ = مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ =قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ =وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙوَ=كُنَّا نَخُوْضُ
مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ
குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும்,ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74 : 45)
நம்மை நாமே சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொண்டாலும் பல நேரங்களில் மனம்போன போக்கில் சென்றுவிடுகிறோம். தவறான முடிவுகளையும் எடுத்துவிடுகிறோம். ஆனால் நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல் அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்துவிடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்லநண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.
அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ர) அவர்கள்
நூல் : புகாரி (7198)
நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும். பெற்றுத் தருகிறது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடன் மறுமையில் நாம் இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய நேசத்திற்குரியவர் அதிகமான நற்செயல்களை செய்து நாம் அவர் செய்த நல்லறங்களைப் போல் செய்யாவிட்டாலும் அவருடன் இருக்கும் சிறப்பை இறைவன் நமக்குத் தருவான். எனவே நம்மை விட அதிக நன்மைபுரிபவர்களுடைய நட்பை நாம் தவறவிடுவது மாபெரும் கைசேதம். நல்லோர்களின் நட்பு இவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா (ர) அவர்கள்
நூல் : புகாரி (6170)
ü அல்லாஹ்விற்காக நட்புவைத்தல்
பெரும்பாலான நண்பர்கள் வீணாக பேசுவது ஊர் சுத்துவது திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீயகாரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. இஸ்லாத்தை பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்புவைத்தவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காகவெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காககொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ர) அவர்கள்
நூல் : அபூதாவுத் (4061)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர் : அபூஹு ரைரா (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (4656)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக்கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர் : முஆத் (ர) அவர்கள்
நூல் : அஹ்மத் (21114)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம்வைத்துக்கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹு ரைரா (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (4655)
அல்லாஹ்வின் அடியார்களில் சில மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்படமாட்டார்கள் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் அல்ஹத்தாப் (ர) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3060)
ü உதவும் நண்பனே உண்மையான நண்பன்
நாம் வசதிவாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள். புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டிடம் எது உறுதியற்ற கட்டிடம் எது என்று நமக்கு தெரிகிறது. அது போல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது. உண்மையான நட்பை பற்றி குறிப்பிடும் போது உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு என்று சொல்வார்கள். அதாவது தன் ஆடை விலகும் போது கை விரைந்து சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுவதைப் போல் நண்பன் கஷ்டப்படும் போது விரைந்து சென்று கஷ்டத்திருந்து அவனை விடுவிப்பவனே உண்மை நண்பன் என்பது இதன் அர்த்தம். இதே பொருளில் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியைச் சொல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர் : அனஸ் (ர) அவர்கள்
நூல் : புகாரி (13)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டுவிடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமைநாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர) அவர்கள்
நூல் : புகாரி (2442)
ü நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்
தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப்போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களை செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்துவிட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்லகாரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு பணிக்கு பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நல்லதை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர) அவர்கள்
நூல் : நஸயீ (4133)
அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர) அவர்கள்
நூல் : புகாரி (24)
ü தவறு செய்தால் மண்ணிப்புக்கோற வேண்டும
தவறு நம்தரப்பிருந்து ஏற்படுமேயானால் கவ்ரவம் பார்க்காமல் நண்பனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமாகவும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான அபூபக்கர் (ர) அவர்கள் தம் நண்பர்களின் மனம் புண்படும்படியாக பேசிவிட்டோமோ என்று நினைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இது போன்ற குணம் நண்பர்களிடையே வந்துவிட்டால் பகைமைக்கு அங்கு வேலையே இல்லை.
பிலால் சுஹைப் சல்மான் இன்னும் சிலர் (இருந்த சபைக்கு) அபூசுஃப்யான் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் (அபூசுஃப்யானைப் பார்த்து) அல்லாஹ்வுடைய வாட்கள் அல்லாஹ்வின் எதிரியின் கழுத்தில் தான் செய்யவேண்டியதை இன்னும் செய்யவில்லை என்று கூறினார்கள். அப்போது அபூபக்கர் (ர) அவர்கள் (அவர்களிடம்) குரைஷிகளின் தலைவரிடத்திலா இப்படி பேசுகிறீர்கள்? என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரே நீர் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திருக்கலாம். நீர் அவர்களை கோபப்படுத்தியிருந்தால் உமது இறைவனை கோபப்படுத்திவிட்டீர் என்று கூறினார். உடனே அபூபக்கர் (ர) அவர்கள் அந்த நபித்தோழர்களிடம் வந்து சகோதரர்களே உங்களை நான் கோபப்படுத்திவிட்டேனா என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை. என் சகோதரரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயித் பின் அமர் (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (4559)
ü பிரதிஉபகாரம் செய்ய வேண்டும்
எப்போதும் நண்பன் நமக்கு செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர் ஒருமுறை செலவு செய்தால் அடுத்த முறை நாம் அவருக்கு செலவு செய்ய வேண்டும். சிலர் நண்பனுக்காக தன்புறத்திருந்து எதையும் கொடுக்காமல் அவனிடமிருந்து அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு நன்மை செய்தால் அதற்கு பதிலாக அவனுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். பொருள்வசதி நம்மிடம் இல்லாவிட்டால் அதிகமாக நண்பனுக்காக துஆ செய்ய வேண்டும்.
அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து யார் அடைக்களம் கேட்கிறாரோ அவருக்கு அடைக்களம் தாருங்கள். உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்க பிரதிஉபகாரம் செய்யுங்கள். (பிரதிஉபகாரம் செய்ய பொருள்) உங்களிடத்தல் இல்லாவிட்டால் அவருக்கு பிரதிஉபகாரம் செய்துவிட்டதாக நீங்கள் என்னும் அளவிற்கு அவருக்காக துஆ செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர) அவர்கள்
நூல் : நஸயீ (2520)
ü நட்பை வெளிப்படுத்த வேண்டும்
நாம் ஒருவரை நேசிக்கிறோம். ஆனால் அவருக்கு நம்முடைய நேசம் தெரியாது. இந்நேரத்தில் கூச்சப்படாமல் அவரிடம் சென்று நமது நட்பை தெரிவித்து நண்பர்களாகிக் கொள்ள வேண்டும்.
நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்துசென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.
அறிவிப்பவர் :அனஸ் பின் மாக் (ர) அவர்கள்
நூல் : அஹ்மத் (11980)
ü குறைகளைத் துருவித் துருவி ஆராயக்கூடாது
நண்பரைப் பற்றி தவறாக ஒரு செய்தி வந்தால உடனே அதை நம்பிவிடக்கூடாது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் சந்தேகக் கண்ணுடன் குறைகளை ஆராய்வது நமக்குத் தேவையில்லாத விஷயம். நல்ல காரியங்களில் தவிர மற்ற விஷயங்களில் நண்பனை பார்த்துப் பொறாமைப் பட்டால் நட்பு வளர்வதற்குப் பதிலாக குரோதங்களும் பகைமையும் வளர்ந்து கொண்டே செல்லும். என்றும் நட்பு நிலைத்திருப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அவர்களுக்குப் பின் வந்தோர் ”எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59 : 10)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ர) அவர்கள்
நூல் : புகாரி (6064)
ஏமாற்றக்கூடாது
நட்பை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூத்து நண்பனை சிலர் ஏமாற்றிவிடுகிறார்கள். இவர்களெல்லாம் நண்பன் போல் நடித்து காரியம் நடத்தும் நயவஞ்சகர்கள். இது போன்ற பொய்யர்களை கண்டுகொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் சில அடையாளங்களை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.
அறிவிப்பவர் : அபூ
ஹு ரைரா (ர) அவர்கள்
நூல் : புகாரி (33)
ü கோபம் கொள்ளக்கூடாது
நம் தோழர்களை திருத்துவதற்காக நாம் பல முயற்சிகளை எடுப்போம். அவர்கள் தீமை செய்யும போது எடுத்துச் சொல் தீமைக்குத் தடைக்கல்லாக விளங்குவோம். அவனுடைய விருப்பத்திற்கு நாம் தடையாக இருப்பதினால் சில நேரங்களில் எடுத்தெரிந்து பேசிவிடுவான். இந்நேரத்தில் அவன் மீது கோபப்பட்டு தவறான வார்த்தைகளை கூறிவிடக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்துகொண்டிருந்தார். மற்றொருவர் வணக்கத்தில் திளைத்தவராக இருந்தார். அந்த வணக்காசாலி தன் நண்பரை பாவத்தில் பார்க்கும் போதெல்லாம் (இதை) செய்யாதே என்று கூறுவார். ஒரு நாள் ஒரு பாவம் செய்பவராக தன் நண்பரை அவர் கண்டபோது அவரிடத்தில் (இதை) செய்யாதே என்று கூறினார். அதற்கு அவர் என்னை விட்டுவிடு. எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்ட (விஷயம் இது) என்னை கவனிப்பவராக நீ அனுப்பப்பட்டுள்ளாயா? என்று கேட்டார். அந்த வணக்கசாலி அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் அல்லது சொர்க்கத்தில் உன்னை கொண்டு செல்லவே மாட்டான் என்று கூறினார். பின்பு இவ்விருவர்களின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அவர்கள் இருவரும் அகிலத்தின் இறைவனிடத்தில் ஒன்றுசேர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து என்னைப் பற்றி நீ அறிந்தவனா? என் கையில் இருப்பவற்றை (செய்வதற்கு) உனகக்கு சக்தி இருக்கிறதாத? என்று கூறிவிட்டு பாவம் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து செல். என்னுடைய அருளாள் சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று கூறினான். மற்றவரைப் பார்த்து இவரை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினான்.
அறிவிப்பவர் : அபூ ஹு ரைரா (ர) அவர்கள்
நூல் : அபூதாவுத் (4255)
ü மானத்துடன் விளையாடக்கூடாது
ஜாலி ஹு என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடிவிடுவதுண்டு. நண்பனின மனது புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில் நண்பனை கேளிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம் நண்பனிடம் நடந்துகொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது. மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது. மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதன் முஸ்லி மான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே அவர் தீமை செய்யப் போதுமானதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (4650)
பெருமையடிக்கக்கூடாது
தனது நண்பனிடத்தில் தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் பெருமையான பேச்சுக்களைப் பேசுகிறார்கள். இந்த மோசமான குணம் இருந்தால் கண்டிப்பாக வலுவான நட்பு ஏற்படாது. நம்முடைய நண்பனும் நம்மைப் போன்ற மனிதன் தான் என்று நினைத்து அவனை வேறுபடுத்திப் பார்க்காமல் பழகும் போது உயிரையும் கொடுக்கும் நண்பனாக அவன் மாறுகிறான். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறும் உபதேசத்தை கடைபிடித்தால் நமது நட்பு வலுப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்புகடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.
அறிவிப்பவர் : இயாள் பின் ஹிமார் (ர) அவர்கள்
நூல் : அபூதாவுத் (4250)
நட்பை முறித்துவிடக் கூடாது
சில நேரங்களில் மிக நெருக்கமாக பழகுபவர்களுக்கிடையில் மனஸ்தாபங்களும் பிரச்சனைகளும் எழுவதுண்டு. இதை பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்து நட்பைத் தொடர வேண்டும். அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக் கொண்டு பகைவர்களாக பலர் வாழ்கிறார்கள். அதிக பட்சமாக 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. நல்ல நட்பிற்கு இறைவனிடத்தில் கூ இருப்பதால் இது ஒரு நற்செயலாக கருதப்படுகிறது. எந்த ஒரு நற்செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர) அவர்கள்
நூல் : புகாரி (6464)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம்
தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும் அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது) இவர்கள் இருவரில் சலாமை முதல் சொல்பவரே சிறந்தவர் ஆவார்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ர) அவர்கள்
நூல் : புகாரி (6237)
நல்லவர்களுடைய தொடர்பை முறித்துவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பின்வரும் வசனத்தில் அறிவுரை கூறுகிறான்.
(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் (6 : 52)
இளைஞர்களே ! விழித்துக் கொள்ளுங்கள்
ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
முக்கிய பங்கு அந்த சமூகத்தில் இருக்கும் இளைஞர்கள் தான் .ஒருசமூகத்தில்வாழும்இளைஞர்அணிபிரியுமானால்,கூறுபோடப்படுமானால், அவர்களது, நடத்தைகள், பண்புகள்மோசமாக அமையுமானால் அச்சமூகம் மோசமான இழிவை நோக்கி செல்லும்.இந்த வரிசையில் இஸ்லாத்தின்வளர்ச்சிக்கு இளைஞர்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர்.
*மதீனா மக்களுக்கு இஸ்லாத்தைபோதிப்பதற்காக நபியவர்கள் அனுப்பிய சஹாபி முஸ்அப் பின்
உமைர் (ரழி) அவர்கள் ஒரு இளைஞரே.
*யமனுக்கு நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும் நபியவர்கள்அனுப்பிய முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஒரு இளைஞரே.
*கலீபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களின்
ஆட்சிக் காலத்தில் குர்ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கெடுத்தபலரும் இளைஞர்களே.
இதே போன்று இஸ்லாமிய வரலாற்றின் பிற்காலங்களிலும்இளைஞர்கள்பலபங்களிப்புகளைச்செய்துள்ளனர்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாலிபப் பருவம்
சிக்கல்களும் போராட்டங்களும்
நிறைந்தது. பூச்சிகள்
விளக்கின் ஒளியில் ஏமாந்து அதில்தமது உயிரை மாய்த்துக் கொள்வது
போல சில இளைஞர்கள் தமது
வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர்
மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளில்இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.
அங்குள்ள மாணவர்கள் வகுப்பறைக்குள்
துப்பாக்கிகளுடனும், கத்திகளுடனும் நுழைகின்றனர்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தமது உணர்வுகளை அழித்துக்கொள்கின்றனர்.
நாகரீகம் என்ற போர்வையில்
ஆண்களும், பெண்களும் சகஜமாகப்பழகி, கூடி கும்மாளமடிக்கின்றனர்.ஆண்களின் காமப் பசியைத் தீர்க்கும்பண்டமாக பெண்கள் மாறிவிட்டனர்.
பல்கலைக்கழகங்கள் பலி பீடங்களாக மாறிவிட்டன.
பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள்தமது உணவுப் பொருட்களுடன்போதைப்பொருட்களையும்
சுமந்து வருகின்றனர்.
இவ்வாறான இளைஞர்களை
அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. போதைப்பொருட்களுக்கு
அடிமையாகுதல்
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின்காரணமாக போதையை பாவிக்கப்
பழகுகின்றனர்.ஆரம்பத்தில் தனது தந்தைக்கு
சிகரட்டை வாங்கிக் கொடுத்த பிள்ளைகாலப் போக்கில் சிகரட்டை புகைப்பவர்களாக மாறி,
இறுதியில் விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப்
பொருட்களை உட்கொள்ள தொடங்குகின்றான்.
இன்று புதிய புதிய பெயர்களில்போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர
இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
2. தவறான சேர்க்கை
ஒருவர் தான் யாருடன் பழகுகின்றான்என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக
அமைகின்றது.
இதனை நபியவர்கள் விளக்கும்
போது *நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போன்றாவான் கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை
இனாமாக தரலாம் அல்லது அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம் அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம்*
(ஹதீஸ்)
3. கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல்
இன்று கையடக்க தொலைபேசிகள்உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின்
ஈமானியஉணர்வைஅதுசீரழித்துக்கொண்டிருக்கின்றது. ஆபாச இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விடயங்களை கண்டுகளித்தல்,
இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளைதூண்டக் கூடிய படங்கள்,
காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர்.இதன் மூலம் இறைநெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.
4
ஓய்வு நேரங்களை பயனற்ற முறையில் கழித்தல்
இளைஞர்கள் ஓய்வு நேரங்களை அரட்டை அடிப்பதிலும்வீண் பேச்சுக்கள் பேசுவதிலும்,
பிறரை மானபங்கப்படுத்துவதிலும்,குறிப்பாக பெண்களின் கற்புக்குஅவமானம் ஏற்படுத்துவதிலும்,
வீண் அவதூறுகளை பரப்பி விடுவதிலும், பிறரின் உயிர், உடமை மானம் சொத்துக்கள்
என்பவற்றிற்கு சேதம் ஏற்படுத்துவதிலும்,
அடுத்தவரின் மனங்களை புண்படுத்துவதிலும், சக
நண்பர்களை கேலி செய்தல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலும்தமது பயன்மிக்க நேரங்களை
வீணாக்குகின்றனர்.அல்லாஹ்வின் இருபெரும் அருட்கொடைகளில்அதிகமானவர்கள் நஷ்டவாளிகளாகவேஉள்ளனர் ஒன்று உடல்ஆரோக்கியம் மற்றொன்று ஓய்வு நேரமாகும்
(ஹதீஸ்)
இந்த வகையில்
இளைஞர்கள்தமது இளைமைக் காலத்தை இறையச்சத்துடன் கழிக்க வேண்டும்.
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து
நடப்பதுடன், விலக்கியவற்றைதவிர்ந்து வாழ வேண்டும். இதன் மூலமே
சுவனத்தை பெறுவதுடன் உலக வாழ்வையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடியும்.
நாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சவால்களை முறியடித்து நமது மனதை கட்டுப்படுத்தி
அல்லாஹ்வும் அவனது தூதரும்காட்டிய வழியில் வாழ்கின்ற போதுதான் நமது இலக்கு வெற்றியை நோக்கி நகரும் இன்ஷா அல்லாஹ்...
கருத்துகள்
கருத்துரையிடுக