முஃமின்கள் மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை



Print

[''... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.'' (அல்குர்ஆன் 4:141)

E-mail

''...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.'' (அல்குர்ஆன் 8:7)
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:17)
எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:249)
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)]
முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை
இறைவிசுவாசிகளே! ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் செல்லும். (16:99-100)
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். நிச்சயமாக உன்னைப் பின்பற்றும் அனைவரும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். (அல்குர்ஆன் 15:42-43)
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் தன்னைப் பின்பற்றும் தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (அல்குர்ஆன் 35:6)
ஷைத்தானை வணங்கும் இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே!
அறிவாற்றல், ஆட்சி அதிகாரம், பணம்பலம் மற்றும் படைபலம் என்று இவ்வுலகின் அனைத்து சக்திகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளை நாம் வெற்றிகொண்டு தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவது சாத்தியமா? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும் இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளும் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே!. ஆம் நாம் முஃமின்களாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் உதவி நமக்கு இருக்கும் வரை நம்மை எந்த ஷைத்தான்களாலும் வெற்றி கொள்ள இயலாது என்பதை கீழ்க்காணும் இறைவசனங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
''... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.'' (அல்குர்ஆன் 4:141)
''...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.'' (அல்குர்ஆன் 8:7)
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:17)
எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:249)
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)
எனவே உண்மை முஃமின்களுக்கு முன்னால் ஷைத்தானிய இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே என்பதையும், இலுமனாட்டிகளை ஒப்பிடும்போது உண்மை முஃமின்கள் சிறுகூட்டத்தினராக, பலம்குன்றியவர்களாகத் தெரிந்தாலும் இறுதிவெற்றி முஃமின்களுக்குத்தான் என்பதையும் அறியமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்.
நாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.
ஆனால் ஒரு நிபந்தனை!. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறைகுர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனபதியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (அல்குர்ஆன்
34:37)
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6:32)
நபியே! யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். (அல்குர்ஆன் 6:70)
ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். (அல்குர்ஆன் 7:51)
எனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
எனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஃமின்கள் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாவர்
பிரிவினைகளும், சுயநலமும், சுகபோகமும், சூழ்ச்சிகளும் நிறைந்த இச்சோதனையான காலகட்டத்தில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்வதென்றால் கருங்கல்லில் நாற் உரிப்பதைப்போன்று மிகக்கடுமையான ஒன்றாகத்தான் தெரியும். இத்தகைய சூழ்நிலைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முஃமின்கள் எதிர்நோக்கித்தான் இருந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு முஃமினாக இவ்வுலகில் வாழ்ந்து எல்லையும், உவமையும் இல்லாத பேரின்ப சுவனத்தை இறைவனின் பரிசாகப் பெறவேண்டுமென்றால் படைத்த இறைவனின் சோதனைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறினோம். (அல்குர்ஆன் 2:214)
முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்!. (அல்குர்ஆன் 3:200)
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.(அல்குர்ஆன் 3:103)
ஆம் உலக சரித்திரத்தில் தங்களுக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள உலகத்திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உத்தமத் தோழர்களான சத்திய ஸாஹாபாக்களின் சோதனைமிக்க வரலாறுகளில் நமக்கோர் அழகிய முன்மாதிரி நிச்சயம் இருக்கிறது.
சோதனைகளை அல்லாஹ்வின் உதவிகொண்டு சாதனைகளாக மாற்றிக்காட்டி, ஈருலவெற்றிகளின் இருப்பிடமாய்த் திகழும் அத்தியாகச் செம்மல்களிடம் இருந்தது ஒன்றுதான். அது கற்பாறைகளையும் விஞ்சும் உறுதிமிக்க ஈமான் என்றால் மிகையில்லை. எனவே நம்மை எதிர்நோக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைக்கற்களாகத் தெரிபவற்றை படிக்கற்களாக மாற்றி அந்த உத்தமத்தோழர்களின் வெற்றிவழியில் நாமும் நடைபோடுவோமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001