சூனியம் உலகம் ஒரு பார்வை (3)



E-mail
                                                                                         
         مَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى                                                                                     
يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ البقرة : 102 .4
                                    
‘நாங்கள் படிப்பினையாக இருக்கின்றோம். எனவே (இதைக்கற்று இறைவனை) மறுத்து விடாதே என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை."
ஷெய்தான் மனிதர்களை வழிகேடுக்கும் போது இது போன்ற நல்ல வார்த்தைகளைச் சொல்லியே வழிகெடுக்கின்றான் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ ، وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ الأعراف : 20 ، 21
இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத்தடை செய்யவில்லை என்று கூறினான். ‘நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே" என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
5- فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا
يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ البقرة : 102
கனவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.
கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது மிக இலகுவானதாகும். இருவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டால் போதுமாகும். ஆனாலும் இதை மனிதனுக்கு ஷெய்தான் இலகுவாய் கற்றுக்கொடுக்கமாட்டான். குப்ர் செய்யவேண்டும், சூனியத்தை முழுமையாக நம்பவேண்டும், அதற்காகக் கேவலப்படவேண்டும் இவ்வனைத்தையும் மனிதன் செய்தாலேயே சூனியத்தை மனிதனுக்குக்கற்றுக்கொடுக்கின்றான். ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவி ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா போகும் போது இரு நபித்தோழர்கள் அதைக்காண்கிறார்கள்.
அவர்களைக் கண்ட ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இருவரும் கொஞ்சம் நில்லுங்கள"; என்று கூறிவிட்டு திரும்பி வந்து ‘அது ஸஃபிய்யா தான்" என்று கூறினார்கள். இதைக்கேட்ட அந்நபித்தோழர்கள்’ நபியவர்களே! நாங்கள் சந்தேகம் கொள்வோமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ’ ஷெய்தான் மனிதனின் ரத்த நாலங்களிலெல்லாம் ஓடுகின்றான்" என்று கூறினார்கள். ஒரு வாதத்துக்காக நபிவர்கள் அந்த நபித்தோழர்களிடம் இவ்வாறு சென்று, இச்செய்தியை அந்நபித்தோழர்கள் மக்களிடையே பரப்பி, அது நபியவர்களின் மனைவிமாருக்குக் கேள்விப்பட்டிருப்பின் அங்கு குடும்ப வாழ்வு சிதைவுற வாய்ப்புண்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களைப் பொருத்தமட்டில் சிந்தனையோடு செயல்படுவார்கள். நமைப்போன்றவர்களுக்கு இவ்வாறான ஒன்று ஏற்பட்டால் விளைவு மிக மோசமாகிவிடலாம்.
ஆகவே கணவன், மனைவிக்கிடையில் சந்தேகம் ஏற்படவைப்பது ஷெய்தானுக்கு பெரிய வேளை கிடையாது. ஆனால் மனிதனுக்காக அதைச்செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு அம்மனிதன் வழிப்பட்டு, சூனியத்தைப்படித்து, அவனிடம் கேவலப்படவேண்டும். இதையே ஷெய்தான் மனிதனிடம் எதிர்பார்க்கின்றான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் "ஸிஹ்ருத்தக்யீல்" என்றொருவகை சூனியத்தைக் குறிப்பிடுகின்றான். கயிரைப் போட்டு பாம்பாகத் தோற்றமுறச் செய்ததையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். ஏனெனில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெட்டவெளியில் ‘ஃபிர்அவ்னுடைய கன்னியத்தைக்கொண்டு" என்று கூறி அந்த சூனியக்காரர்கள் அனைவரும் ஒரே முறையில் கையிற்றை மட்டுமே மூஸா நபியவர்களுக்கு முன்னால் போட்டார்கள் அவை உடனே பாம்புகளாகக் காட்சியளித்தன. இந்த சூனியத்தால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கே பயமேற்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆகவே இங்கு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சூனியம் பாதித்திருக்கின்றது. நபிமார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அல்லாஹ் வஹி மூலம் உதவி செய்வான். எனையவர்கள் இவ்வாறு சூனியத்தால் பாதிக்கப்பட்டால் சில வேளை தப்பலாம் அல்லது மரணித்தும் போகலாம். அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து ‘மூஸாவே நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்களே வெற்றி பெறுவீர்கள் உங்களது வலது கையில் உள்ளதைப் போடுவீராக அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும்" என்று கூறுகிறான்.
சூனியக்காரர்களுக்கு கையிற்றைப் பாம்பாக மாற்ற முடியாது. ஆனால் பாம்பு போல காட்ட முடியும். இந்த சூனியம் ஒருவருக்கு வைக்கப்பட்டால் பாதையில் செல்லும் பெண்ணொருவரை மனைவியாகக்காண்பான் மனைவியை மனைவியாகக்காணமாட்டான். ஏனெனில் அவனுக்கு இந்த சூனியத்தால் மாற்றிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாம் தலைகீழாய் தோற்றமளிப்பதுவே இந்த சூனியத்தின் பாதிப்பாகும். இதையே அல்லாஹ் மிகப்பெரும் சூனியம் என்று கூறுகின்றான். நபிமார்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தஃவா செய்தும் அந்த மக்கள் நிராகரித்தமைக்கு இந்த சூனியமே காரணம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏனெனில் சூனியத்தாலும் இவ்வாறு செய்யலாம் என்று நபிமார்களைப்பார்த்து அம்மக்கள் நினைத்தனர். இவை அல்குர்ஆன் நமக்குக் கூறும் செய்திகளாகும். இந்த வகை சூனியம் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح البخاري – (17 449)
- 6994  حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ
مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ
யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் செய்தானால் என்னைப் போன்று தோற்றமளிக்க முடியாது. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)
செய்தானால் நபியவர்கள் போன்று தோற்றமளிக்க முடியாது ஆனாலும் மற்றவர்களைப் போன்று தோற்றமளிக்க அவனால் முடியும் என்பதை இங்கு கவனிக்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் "ஸிஹ்ருத்தக்யீ"லால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு கீழ்வரும் செய்திகள் சான்றாகின்றன.

صحيح البخاري – (8 213)
- 3175 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ
يَصْنَعْهُ
நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். எந்தளவுக்கெனில் நபியவர்கள் சில வேளைகளைச் செய்ததாக நினைத்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புஹாரி)
அடுத்து வரும் பகுதியில் இந்த ஹதீஸ் தொடர்பில் தனியாகவே ஆராய்வோம்.நபிமார்கள் பலவேறு அற்புதங்களைப் புரிந்து தாம் இறைத்தூதர்களே என்பதை நிரூபிக்க முனைந்த போதெல்லாம் மக்கள் அதனை ஏற்காமைக்குக் காரணம் சூனித்தாலும் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தலாம் என்று அந்த மக்கள் எண்ணியமைதான். இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு விளக்குகின்றான். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்
அவர்களைப்பற்றிக் கூறும் போது,
تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْد
وَكَهْلًا المائدة : 110
தொட்டிலிலும், இளமைப்பருவத்திலும் நீர் மக்களிடம் பேசனீர்.
وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ المائدة: 110
"என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி பிறவிக்குருடையும், வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும்  எண்ணிப்பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்)  வெளிப்படுத்தியதையும் எண்ணிப்பார்ப்பீராக இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை" என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர்; கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப்பார்ப்பீராக." (அல்மாயிதா : 110) என்று கூறுகின்றான்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றிக் கூறும் போது,
فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ الأعراف : 107 – 109
"அவர் அப்போது தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. ஆவர் தனது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. "இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். ஏன்ன கட்டளையிடப் போகிறீர்கள்?" என்று பிர்அவ்னிடம் சமுதாயப்பிரமுகர்கள் கூறினர்". (அல்அஃராப் : 107- 109)
பின்னர் அம்மக்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தோற்கடிப்பதற்காக அனைத்து சூனியக்காரர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அவ்வாறே சூனியக்காரர்கள் ஒன்று சேர்ந்து கையிறுகளைப் போடவே அவை பாம்புகளாகத் தோன்றுகின்றன. மூஸா நபியவர்கள் தனது தடியைப் போட்டதும் அது அனைத்து பாம்புகளையும் விழுங்கி விடுகின்றது. இதைக்கண்ட சூனியக்காரர்கள் வியந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்
அவர்களை நபியாக நம்பிவிடுகிறார்கள்.
அப்போது அவர்களைப் பார்த்து பிர்அவ்ன், قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ طه :  71
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பிவிட்டீர்களா?" அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களது குருவாவார்."எனக் கூறுகின்றான். அதாவது முஃஜிஸாக்களைக்காட்டினால் அவை சூனிமென்றே மறுக்கப்பட்டன என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.
பிர்அவ்னை 5 விடயங்களைக் கொண்டு சோதித்ததாக கூறுகின்றான்.فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ الأعراف : 133 ، 134
"எனவே அவர்களுக்கெதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, போன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்"(அல்அஃராப் : 133-134)
வேறோரிடத்தில் இது பற்றி அல்லாஹ் கூறும் போது,وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَقَالُوا يَا أَيُّهَ السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ  فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ الزخرف : 48 – 50 "எந்தச் சான்றை நாம் அவர்களுக்குக் காட்டினாலும் அதற்கு  முன் சென்றதை விட அது பெரியதாகவே இருந்தது. அவர்கள் திருந்துவதற்காக அவர்களை வேதனையால் பிடித்தோம். "சூனியக்காரரே உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதி பற்றி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நாங்கள் நேர் வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினர். அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கிய போது உடனே அவர்கள் மீறுகின்றனர்". என்று கூறுகின்றான்.
ஷெய்தான் அல்லாஹ்விடம் வாக்களித்ததை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ الحجر : 39 – 41 "அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத்தவிர அனைவரையும் வழிகெடுப்பேன்". (அல் ஹிஜ்; : 39-41) என்று செய்தான் கூறினான். لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ الأعراف : 16 "அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்துகொள்வேன்" (அல்அஃராப் : 17) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ النساء : 119
"அவர்களை வழிகெடுப்பேன். (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.(அந்நிஸா : 119) என்று அவன் கூறினான்.
இவை அல்லாஹ்விடம் செய்தான் போட்ட சபதமாகும். மனிதர்களை இவ்வாறு மாற்றுவதற்கு செய்தான் பயன்படுத்திய ஆயுதமே இந்த சூனியமாகும். எந்தவொரு நபி வந்தாலும் அவரைப்பார்த்து சூனியக்காரன் என்று அம்மக்கள் சொன்னதும் இதனால்தான். இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ القمر : 2
"அவர்கள் சான்றைக் கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்" எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்." (அல்கமர் : 02)
كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ الذاريات : 52
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (தாரியாத் : 52)
அல்லாஹ் நபியெனும் போது செய்தான் அவரை சூனியக்காரன் என்றான். அல்லாஹ் முஃஜிஸா எனும் போது செய்தான் அதனை சூனியம் என்றான். இதுதான் செய்தான் அல்லாஹ்வுடன் செய்த போராட்டமாகும்.
சூனியத்தால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி அல்லாஹ் பேசும் போது,وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ البقرة : 102″அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. (பகரா : 102)அல்லாஹ்  நாடினாலேயே சூனியத்தால் பாதிப்பையுண்டு பன்னலாம் என்பதை அல்லாஹ் இதனூடே சுட்டிக்காட்டுகின்றான். சாப்பிட்டால் பசி போகும் என்பது விதியாகும். ஆனாலும் அல்லாஹ் நாடினால்தான் அது நடைபெறும். தாகித்தால் தண்ணீர் அருந்த வேண்டுமென்பது உலக நியதி ஆயினும் அல்லாஹ் நாடினாலேயே அது சாத்தியமாகும்.
இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது, إِنَّمَا النَّجْوَى مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ  المجادلة : 10
"இரகசியம் போசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷெய்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்களுக்கு சிறிதளவும் அவனால் தீங்கிழைக்க முடியாது." (அல்முஜாதாலா : 10)
உண்மையில் கூட்டாக சிலர் இருக்கும் போது ஒருவரை விட்டுவிட்டு மற்றையவர்கள் ரகசியமாய் பேசும் போது தனியான அந்நபருக்குக் கவலையேற்படுவது சாதாரமானதே ஆனாலும் அதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறும் என்பதே இங்கே அவதானிக்க வேண்டியதாகும்.
மற்றுமோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது, (وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ يونس : 100) அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தவொரு ஆத்மாவுக்கும் ஈமான்கொள்ள முடியாது. (யூனுஸ் : 100)
அல்லாஹ் நாடினால்தானே ஈமான் கொள்ள முடியும் ஆகவே இஸ்லாத்தைத் தேடிப்படிக்க வேண்டிய அவசியமில்லை நாம் குப்ரிலேயே இருந்திருவோம் என்று மேலுள்ள வசனத்திலிருந்து விளங்க முடியாது. மாறாக மார்க்கத்தைத் தேடிப் படிக்க வேண்டும். என்றாலும் அல்லாஹ் வின் நாட்டம் இதற்கும் அவசியமாகின்றது.
நோய்கள் உண்டாவதற்கு உலகில் சில காரணங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருப்பது போல சூனியமும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகின்றது. அதுவும் அல்லாஹ் நாடினாலேயே நடைபெறுகின்றது. அல்லாஹ் நாடாவிட்டால் எந்தப்பெரும் சூனியத்தாலும் தாக்கம் செலுத்த முடியாது. மேலே கூறப்பட்ட தரவுகளைப்படிக்கும் போது சூனியத்துக்கென தனியான வரலாறொன்று உண்டென்ற முடிவுக்கு வரலாம்.
மனிதர்களை வழிகெடுப்பதற்காக ஷெய்தான் இறுதியாகப் பயன்படுத்தும் மிகப்பெரும் சூனியக்காரனே தஜ்ஜாலாகும். தஜ்ஜால் பல அற்புதங்கயைப் புரிவான் அதற்கு ஷெய்தான் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவான். துங்கம் வெள்ளிகளெல்லாம் தஜ்ஜாலின் கைகளிலிருக்கும். இன்றைக்குள்ள தொழிநுட்பத்தால் மனிதனால் மழையைப் பொழிய வைக்க முடிகிறதெனில் ஷெய்தானுக்கு இதுவொன்றும் பெரிதல்ல.
ஷெய்தானின் ஆற்றலைப்பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் வானத்தின் எல்லை வரைசெல்வார்கள் என்று சொல்கிறான். செய்தான்களின் உதவியிருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே இவையும் சாத்தியமாகின்றன. இந்த தஜ்ஜாலை அதிகமாக நம்புகின்றவர்களாக பெண்களே இருப்பார்கள். இதற்குப்பயந்து ஆண்களெல்லாம் தமது பொறுப்பிலிருக்கும் பெண்களைக் கட்டிவைப்பார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். சூனியக்காரர்களுக்குப்பின்னால் கூடுதலாகச் செல்பவர்கள் பெண்கள்தான் என்பதை இன்றைக்கும் நாம் பார்க்கின்றோம்.
ஆகவே சாரம்சமாகக் கூறுவதானால் உலகில் ஏனைய நோய்களுக்கு சில காரணங்கள் இருப்பது போல சூனியமும் சில நோய்களுக்கு காரணமாகின்றது. ஆனால் இதற்கு சடரீதியில் மருத்துவம் கிடையாது. ஆண்மீகத்தின் மூலமே வைத்தியம் செய்யலாம். இதற்கும் ஒரு மருத்துவத்தை செய்தான் ஏற்படுத்தி விட்டான். சூனியத்தை சூனியத்தால் எடுப்பது என்பதே அதுவாகும். ஆனால் அல்குர்ஆன் மூலம் செய்யப்படும் மருத்துவமே இதற்கு உகந்ததும் சிறந்ததுமாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001