ஞாயிறு, டிசம்பர் 04, 2011

இல்லற வாழ்வை இனிதாக்கும் திறவுகோல் மகளிரிடமே!PrintE-mail
அன்பு என்றால் எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்?
பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது சாதாரணவொரு விஷயம்.
அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் போதோ
நம்மீதான கரிசனை குறையும் போதோ நமது மனது சலனப்பட்டதில்லை, குறை தேடியதுமில்லை.
அதையும் மீறி நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
இது யதார்த்தம்..
இதெல்லாம் ஏன்?
தொப்புல் கொடி உறவு என்கிற தைரியத்தினால் தானா?!
ஆனால்,
இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த கணவன் மனைவி உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை!
நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்துனை வலிமை பாருங்கள்! அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த பின் எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று பார்த்தீர்களா? ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம் போராட வேணடியிருக்கிறது? .இதை யாராலும் மறுக்க முடியாது.
அந்தப் போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது. நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளர்த்துவிடுகிறது.நமக்கென்று ஒரு தனித்துவமான தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது என்றால் அது பொய்யே இல்லை.
அற்தப் போராட்டம் எப்படி சுவாரஸியமாகிறது என்று பார்ப்போம்.
கணவன் எப்போதும் நம்முடன் அன்பாக இருக்க வேண்டும்.
சிரித்த முகத்துடன் கல கலவென்று இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோமா இல்லையா?
அதையும் தாண்டி சினேக பூர்வமான காதலுடன்
அடிக்கடி நம்மீது பார்வைக்கணைகளை பொழிவதை அதிகமதிகம் எதிர்பார்க்கிறோம் இல்லையா?
அப்படிப்பட்ட கணவன்மார்
நமக்குப் பிடித்த காரியங்களை அடுக்கடுக்காய் செய்தால் விரும்பும் பொருட்களையெல்லாம் வாங்கிவந்து குவித்தால் நமது நெஞ்சக்கூட்டின் நிலமை எப்படி இருக்கும் என்பதை கற்பணை பண்ணும்போதே கிளுகிளுக்கிறதல்லவா?!!!
ஆமாம்! கிளுகிளுக்கத்தான் செய்கிறது.
அத்துனை பண்ணுகிற அவர்களை நாமும் சந்தோஷப் படுத்தினால் என்ன குறைந்தா போய்விடும்?!!!
அப்படித்தான் அவர் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் நம்போன்ற மனைவிக்கு எத்தனை நாள்தான் வஞ்சனை செய்வார்கள்!
யாராலும் முடியாது, அன்புக்குக் கட்டுப்படாமல் இருக்க!
அன்பைக்கொடுத்துத்தான் அன்பை சம்பாதிக்க முடியும்.
ஆமாம்! அன்பு என்றால் எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்?
அதெல்லாம் பெரிசா ஒன்றும் இல்லை!
தமக்குப் பிடித்தாமானவர்களுக்குப் பிடித்த விஷயங்களை விருப்பத்தோடு செய்யும் போது அவர்கள் அடைகிற சந்தோஷம் இருக்கிறதல்லவா! அவர்கள் அடைகிற திருப்தி இருக்கிறதல்லவா அவற்றை பார்த்து நாம் அடைகிற உணர்வு இருக்கிறதே! அதுவும் ஒரு வகை அன்புதான்!
அந்தக் கட்டத்தையும் தாண்டி,
நாம் ஒன்றும் செய்யாமலேயே அவர்கள் ஒன்றும் பண்ணாமலேயே அதே போன்றதொரு உணர்வு எல்லோர் மீதும் ஏற்படுவதில்லை.
அப்படிப்பட்ட சில உறவுகள் உலகில் உலவித்திரிகிறபோது தைரியமாக விலாசம் கொடுத்து உத்தியோக பூர்வமாக அறிமுகப் படுத்தக்கூடியது புனிதமான கணவன் மனைவி உறவவைத்தான்.
மனைவியானவள் கனவனை வசீகரித்திருக்கும் காலமெல்லாம்
இளமை ஊஞ்சலாடும்!
முதுமை வெறுண்டோடும்!
மனது சலிக்காது!
விரக்தி அண்டாது!
கணவர்க்கும் மனைவிக்கும் இடையில் ஒரு பிணைப்பு, வசீகரம் இருக்கும் போது இல்லற வாழ்க்கை மேலும் மேலும் இனிக்க வாய்ப்புக்கள் அதிகம்...இல்லையேல் அப்படியமன வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது!
அதற்கு செய்யவேண்டியது;
முந்தாணை முடிச்சோ, மாய மந்திரமோ இல்லை..
என்னவென்றால்,
மிகம் இலகுவானதுதான்!
அதுதான் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போவது.
அதாவது..........
• கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்திருப்பது.
• கணவன் வெறுக்கின்ற விஷயங்களை விட்டொதுக்க முடியவில்லையெனின் கனவனின் முன்னிலையிலாவது அதனை தவிர்ந்து கொள்வது.
• அவரின் மனம் கோணாமல் நடக்க முயற்சிப்பது.
• வீட்டை சுத்தமாக பளிச்சென்று வைத்திருப்பது. (பொதுவாக கணவன்மார் இதை சொல்ல மாட்டார்கள். ஆனால் எதிர்பார்ப்பார்கள்.)
• கணவரின் குடும்பத்தாருடன் அன்பைாகப் பழகுவது. (தனது குடும்பத்தில் தனது மனைவி கெட்ட பெயர் எடுப்பதை எந்தக் கணவனும் விரும்பமாட்டார்.)
• செலவுக்குத் தரும் பணத்தை மிச்சம் பிடித்து அவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கொடுத்தோமென்றால் (ஆஹா!!! கேட்கவே வேண்டாம் அன்பு மழை கன்ஃபோம் - நிச்சயம்.)
•கணவன் வெளியே செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற உடையை தெரிவு செய்து கொடுப்பது. (தேவைப்படின் அணிவித்து விடுவது.)
•ஷூ லேஸ் கட்டிவிடுவது. (முடிந்தால் நேரகாலத்துடன் பாலிஷ் போட்டு வைப்பது.)
• கணவணை வழிவயனுப்பும் போதும் வேலை விட்டு வரும்போதும் அன்புடன் கட்டியணைப்பது. ( இது மிக முக்கியம் எத்தனை அழுப்போடும் சலிப்போடும் வந்திருப்பார்! )
• வருமானத்திற்கேற்ப செலவு செய்வது.
• கணவர் வீட்டிலிருக்கும் போது அவரைச்சுற்றி வளைய வருவது.
• எப்பொழும் சின்னதா தம்மை ஒப்பனை செய்துகொள்வது.
• சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்துக்கொள்வது.
• கணவனின் வேலைப்பலுவை குறைப்பது. (உங்கள் கணவரின் வேலை அறிந்து நீங்கள் உதவுங்கள்)
இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது. சாத்தியமே இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை...
ஆனால்,
ஒன்றுமே செய்யாமல், மனைவியின் காலடியில் சரணடையும் பேர்வழியும் உண்டு. அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதேபோல்..எவ்வளவு கனிந்தாலும் கண்டுகொள்ளத புருஷரும் உண்டு. அவர்களுக்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக