வியாழன், ஏப்ரல் 05, 2012

நாற்காலி தொழுகைசமீபகாலமாக நமது பள்ளிவாசல்களில் நாற்காலி சப் கள் நிறைய உருவாகி வருகின்றனஇதனால் பள்ளிவாசல்கள் சர்ச்களைப் போல ஆகிவிடுமோ என்ற பயம் சிலரிடம் ஏற்பட்டுள்ளதுஅது மட்டுமல்ல நாற்காலியில் தொழுபவர்களும் பலவித புதிய வடிவங்களில் தொழுகிறார்கள். இது பற்றிய விளக்கங்களைப் பார்க்கலாம்.
நாற்காலியில் உட்கார்ந்து தொழுகிறவர்கள் இதில் பேசப்படுகிற சட்டவிசயங்களை அறிந்து கொள்ளும் போது இதுவரைக்கு சென்றதைப் பற்றி கவலைப் படாமல் இனி மேல் உரிய முறையில் தொழுகையை நிறைவேற்ற முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மஸ்ஜித்.
தொழுகிற இடத்தை நாம் பள்ளிவாசல் என்று சொல்கிறோம்தமிழில் மட்டும் தான் இப்படி மொழு பெயர்ப்பு சொல்லப்படுகிறதுஇது தமிழ்குக்கு உள்ள சிறப்பாகும்.திருக்குரானில் 20 இடங்களில் மஸ்ஜித் என்ற சொல்பயன்படுத்தப் பட்டுள்ளதுஅவற்றில் மூன்று இடங்களில் 7:29, 7:31,17:07  பொதுவாக பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும்மற்ற இடங்களில் மஸ்ஜிதுல் ஹராம் எனப்படும் மக்காநகரின் பிரதான பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும் தலாஓரு இடத்தில் (9:108) மஸ்ஜிதுன்னநபவி  என்ற மதீனாபள்ளிவாசலையும் (17:01) மஸ்ஜிதுல் அக்ஸா எனப்படும்ஜெரூசலம் பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும்பயன்படுத்தப் பட்டுள்ளது.தொழுகைக்கு அரபியில் சலாத் என்று சொல்லப்படும்.தொழும் இட்த்தை முஸல்லா என்று சொல்லி யிருக்க வேண்டும்அப்படிச் செல்லாமல் மஸ்ஜித் என்று சொல்லப் படுகிறது.மஸ்ஜித் என்றால் சுஜூது செய்யும் இடம்தொழுகையில் ஸஜ்தாவிற்குள்ள முக்கியத்துவம் காரணமாகவே தொழும் இடம் மஸ்ஜித் என்று குறிப்பிடப் பட்ட்து.தொழுகை அல்லாஹ்விற்கு பணிதல்அதில் உச்சமே சஜ்தாமுழு சரணாகதியின் அடையாளம் அது.

أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا الْأَلْبَابِ
 இந்தவசனத்தில் சுஜூது முதன்மையாக சொல்லப் பட்டுள்ளது.தொழுகையின் உறுப்புக்களில் சுஜுதின் மரியாதை மிக உயர்வானதுருகூஃ சுஜ்ஜுது  செய்து தொழுபவரைப் பார்த்து பொறாமைசுஜூதின் முக்கியத்துவங்களில் இன்னொரு விச்யம் ஒரு ரக அத்தில் இரண்டு முறை சுஜீது செய்யப்படுகிறது.
சஜ்தாவின் தழும்பு முஃமின்களின் அடையாளம்.
மனிதர்கள் சஜ்தா செய்யும் போது ஷைத்தான் அழுகிறான்,பதறுகிறான்.இதை செய்யாத காரணத்தால் தானே நான் இந்த நிலைக்கு ஆளானேன்.
சுஜூதினால கிடைக்கும் ஆரோக்கியம்
மின் காந்த அலைகள் உடலை பாதிக்காமல் பாதுகாக்கும் ஒரு வழ் சுஜுது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
தொழுகைல் நாம் ருகனுகளை முழுமையாக செய்யனும்.
அந்த வகையில் சஜ்தாவை முழுமையாக நிறைவேற்ற நாம அக்கறை செலுத்தனும்அதற்குரிய் சிறப்புக்களை அடைய முயற்சி செய்யனும்.
முடியாத சூழ்நிலையில் மார்க்கம் சலுகைகளை வழங்கியுள்ளதுஅதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தகுந்த அளவிற்கு.
இன்று இருக்கை களின் சப் வந்து விட்ட சூழ்நிலையில் கொஞ்சம் வயதாகி விட்ட உடனேயே சேர் துணையை நாடுகிறார்கள் பலர்.
தொழுகையிலும் அது சுகமான தொழுகையாக கருதப் படுகிறது.
பெருமானார் (ஸல்அவர்கள் சேரில் உட்கார்ந்து தொழவில்லை
தரையில் உட்கார்ந்து தான் தொழுதார்கள்.
குறைந்த பட்சம் பர்ளு தொழுக்களை முழு ருக்னுகளை பேணி தொழ முயற்சிக்க வேண்டும் அதற்கான உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளனும்.
உடலின் சோம்பல் என்பது பழக்கத்தினால் வருவதுநான் ருகூஃ சுஜூது செய்வேன் என நினைத்தால் செய்ய இயலும். மூத்த ஆலிம்களை நீங்கள் பர்ளு தொழுகையை சிரமப்பட்டாவது முழு ருக்னுகளையும் நிறைவேற்றுவார்கள்நபில் தொழுக்யை உட்கார்ந்டு தொழுது கொள்வார்கள்.
நாற்காலியில் சஜ்தாநாற்காலியில் உட்கார்ந்து தான் தொழ முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் ருகூஉக்கு தலையை குனிவது சுஜூதுக்கு அதை விட சற்று அதிகமாக குனிந்து கொள்ள வேண்டும்அப்போது கைகளை முழங்காளின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தரத்தில் கையைப் பரப்பி அதன் நடுவில் சஜ்தா செய்யத் தேவையில்லை
டெஸ்க்கில் ச்ஜ்தா செய்வது முறையல்ல.
பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஒரு ஆலோசனை :
நாற்காலி சப்பை உருவாக்காதீர்கள்தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்வது மாதிரி அல்லது கொண்டுவருகிற மாதிரி ஏற்பாடு செய்யுங்கள்இது ஒரு புது பேஷனாக ஆகாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
நாற்காலியில் அமர்ந்து தொழுகிறவர்கள் சக்தி குறைவாக இருக்கிற போதுதான் இந்த அனுமதியை மார்க்கம் த்ந்துள்ளதுசக்தி இருந்து நாம் இவ்வாறு உட்காந்து தொழுது விட்டால அது செல்லாது என்பதை மனதில் இருத்தி கொள்ள வேண்டும்ருகூஃ ச்ஜூதின் நன்மைகளை எண்னிப் பார்த்துக் கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக