கூட்டுத் துஆ நபிவழியா?



ஜிப்ரீல் (அலைஅவர்களுடைய ஹதீஸில்கூட்டுத் துஆவிற்கு எந்த ஆதாரமும்இல்லை.
7256 عن كعب بن عجرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال : آمين فلما ارتقى الدرجة الثانية قال : آمين فلما ارتقى الدرجة الثالثة قال : آمين   فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال : إن جبريل عليه الصلاة و السلام عرض لي فقال : بعدا لمن أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعدا لمن ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعدا لمن أدرك أبواه الكبر عنده فلم يدخلاه الجنة قلت آمين (المستدرك - (ج 4 / ص 170)

கஅப் பின் உஜ்ரா (ரலிஅறிக்கிறார்கள் : நபி (ஸல்அவர்கள் அனைவரும்மிம்பருக்கு (அருகில்வாருங்கள் என்று கூறினார்கள்நாங்கள் அனைவரும்ஆஜரானோம்.  அப்போது முதல் படியில் ஏறும் போது "ஆமீன்'' என்றுகூறினார்கள்இரண்டாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்றுகூறினார்கள்மூன்றாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள்.அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே)கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்றுகேட்டோம்.
நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலைஎனக்கு காட்சி தந்து யார்இரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள்மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள்நான் ஆமீன் என்றேன்நான் இரண்டாவதில் ஏறும் போது யாரிடத்தில்(முஹம்மதாகியநீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத்கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான்ஆமீன் என்று கூறினேன்நான் மூன்றாவதில் ஏறும் போது ஒருவனிடத்தில்அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்குபணிவிடை செய்வதின் மூலம்அந்த இருவரும் இவனை சுவர்கத்தில்நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள்.நான் ஆமீன் என்று கூறிúன்ன் என்றார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலிநூல் : ஹாகிம் (7256)

மற்ற சில அறிவிப்புகளில் ஜிப்ரீல் (அலை) "ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன்என்று நபியவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸில் பலவிசயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
இதில் ஒரு மனிதர் துஆ ஓத மற்றொரு மனிதர் ஆமீன் சொல்லலாம் என்பதற்கோஅல்லது பிற மனிதர்கள் ஆமீன் சொல்லலாம் என்பதற்கோ எந்த ஒரு ஆதாரமும்இல்லைஏனென்றால் இது ஜிப்ரீல் என்ற மலக்கிற்கும் நபி (ஸல்அவர்களுக்கும்இடையில் நடைபெற்றதாகும்அதிக பட்சம் ஒரு மலக்கு துஆ செய்தால் அதைகேட்கும் மனிதர் ஆமீன் கூறலாம் என்று சொல்லலாமே தவிர மனிதர்கள்தங்களுக்குள் கூட்டுத் துஆ ஓதலாம் என்பதற்கு இதில் ஆதாரமில்லை.

மேலும் ஜிப்ரீல் ஒவ்வொரு துஆ விற்குப் பிறகும் ஆமீன் என்று சொல்லுங்கள் என்றுகூறிய பிறகே நபியவர்கள் ஆமீன் என்று கூறியதாக வந்துள்ளதுஇதிலிருந்து இந்தஹதீஸை ஆதாரம் காட்டியவர்கள் ஒரு துஆவை ஓதிய பிறகு ஆமீன் என்றுசொல்லுங்கள் என்றால் தான் மற்றவர்கள் ஆமீன் என்று சொல்ல வேண்டும்ஆனால்நடை முறையில் கூட்டுத் துஆ என்ற பித்அத்தை உருவாக்கியவர்கள் அவ்வாறுசெய்வதில்லை.

நபியவர்கள் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று சொல்லி இறங்கிய பிறகு ஸஹாபாக்க்ள்
அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமேகேள்விப்படாத ஒன்றை இன்றுஉங்களிடமிருந்து செவியேற்றோமே என்றார்கள். 
இதிலிருந்து ஒருவர் துஆ ஓதமற்றவர்கள் ஆமீன் சொல்லுதல் என்பது நபியவர்கள் காலத்தில் அறவே இல்லாதஒன்று என்பதை மிக மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்ஒருவர் துஆ ஓதமற்றவர்கள் ஆமீன் சொல்லுதல் நபியவர்கள் காலத்தில் இருந்திருந்தால்ஸஹாபாக்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள்இத்தகையகேள்வியை கேட்டிருக்கவும் மாட்டார்கள்.

ஒரு பேச்சிற்கு இதை ஆதாரமாகக் கொண்டாலும் மிம்பர் படியில் ஏறும் போதுநடைபெற்ற சம்பவமாகும்மிம்பரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்துஒவ்வொரு தொழுகைப்பிறகும் இன்ன பிற இடங்களிலும் செய்வதற்கு ஆதாரமாகக்கொள்ளலாம் என்பது அறிவீனமாகும்நபியவர்கள் கழிவறையில் நுழையும் போதுஓதிய துஆவை சாப்பிடும் போது ஓதுவது எப்படிக் கூடாதோ அது போன்றுநபியவர்கள் மிம்பர் படியில் ஏறும் போது செய்த ஒரு செயலை வேறொரு இடத்தில்செய்தல் என்பதும் கூடாது.

மேலும் ஜிப்ரீல் (அலைஅவர்கள் ஓதிய துஆ நபி (ஸல்அவர்களைத் தவிர வேறுயாருக்கும் கேட்கவில்லைஎனவே இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டுத் துஆஓதலாம் என்று கூறுபவர்கள்  யார் ஆமீன் சொல்வார்களோ அவர்களைத் தவிரவேறுயாருக்கும் கேட்காத அளவில் ஓதவேண்டும்.
 அவ்வாறு செய்வதற்கு இதனை ஆதாரம் காட்டுபவர்களால் ஒருபோதும் இயலாது

நபியவர்கள் தொழுகை கடமையாகி ஏறத்தாழ 10 வருடங்களுக்கும் அதிகமாகஇருந்துள்ளார்கள்ஒரே ஒரு தொழுகையில் கூட அவர்கள்  துஆ ஓத மற்றவர்கள்ஆமீன் சொன்னதாக எந்த ஒரு ஹதீசும் கிடையாதுஅவ்வாறு இவர்களால் காட்டவேஇயலாதுஜிப்ரீல் (அலைஅவர்களின் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு கூட்டுத்துஆ ஓதலாம் என்று சொன்னால் நிச்சயமாக நபி (ஸல்அவர்கள் அதனை நமக்குவழிகாட்டியிருப்பார்கள்ஆனால் நபியவர்கள் தொழுகைக்குப் பிறகோஅல்லது மற்றஇடங்களிலோ கூட்டுத் துஆ ஓதியதாக ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸ் கூடகிடையாது..

மொத்தத்தில் மேற்கண்ட ஹதீஸ் அதில் கூறப்பட்டுள்ள விசயங்களின்முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நபியவர்களுக்கும்ஜிப்ரீல் (அலை)அவர்களுக்கும் நடைபெற்ற ஒரு சம்பவமாகும்அதிலுள்ள அறிவுரைகளை நாம்பேணி நடக்க வேண்டுமேயென்றி இதன் மூலம் கூட்டுத் துஆ ஓதலாம் என்பதற்குஇதில் எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் இன்று நடைமுறையில் உள்ள கூட்டுத் துஆ முறையானது நபி வழிக்கும்,திருக்குர்ஆனின் கட்டளைக்கும் எதிரானதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் இறைவனைப் பணிவுடனும்இரகசியமாகவும் பிரார்த்தனைசெய்யுங்கள்வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான் (அல்குர்ஆன் 7 : 55)
இவ்வசனம்  இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக்கற்றுத் தருகிறது.
ஒரு அதிகாரியிடம்அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால்அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம்அறிந்து வைத்துள்ளோம்.
நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால்அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம்என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார்அல்லது கடுமையான சப்தத்தில்கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம்மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும்அதைத் தான்அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவதுஒழுங்குஅல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோஅடுக்கு மொழியிலோகேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம்கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கேகுறிப்பிடப்படுகிறது.
இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லைஎன்பது தெரிய வரும்.
ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளனஅவரவர் தத்தமதுதேவையை தமது மொழியில் பணிவுடனும்ரகசியமாகவும் கேட்பதேபிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோஅவ்வாறுசெய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001