நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்,



இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் மதீனா நகரில் இத்தகைய நயவஞ்சகர்கள் சிலர் இருந்தனர். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவன் அவர்களுக்கு தலைவனாக செயல்பட்டான். இவன் தலைமையில் பல நயவஞ்சகர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி உண்மையான முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்பட்டு வந்தார்கள்.
இவர்களைப் பற்றி திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம். இவர்களிடம் இருக்கும் கெட்ட பண்புகள் நம்மிடம் வராமல் இருப்பதற்கும் தீய குணம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இந்த தகவல்கள் உதவும்.
1.  நம்பிக்கை கொண்டோம் என்று வாயளவில் கூறுவார்கள் 
உள்ளத்தில்
வன்மத்தை மறைத்துக்கொண்டு, வெளியே நேயத்தைக் காட்டுவதே நயவஞ்சகள் நாவு கூசாமல் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான் என்று கூறுவார்கள்
.   وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
 يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُون                                          
"
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.'' (அல்குர்ஆன் 2:8,9)

2கவர்ச்சியாக பேசுவான் 
மக்களை வழிகெடுக்கும் இந்த நயவஞ்சகர்கள் மிகத் திறமையாக வாதம் புரிபவர்களாகவும் இவர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
  وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَىٰ مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ
''உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் உள்ளதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான். இவன் கடுமையான வாதத்திறமை உள்ளவன்.'' (அல்குர்ஆன் 2:204)
3.  குர்ஆனின் கட்டளைபடி செயல்பட மாட்டார்கள் 
இஸ்லாத்தை ஏற்றதாக கூறிக்கொள்ளும் இவர்களில் சிலர் திருக்குர்ஆனை படிக்கவும் மாட்டார்கள். அதன் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்படவும் மாட்டார்கள். பெயரளவில் முஸ்-லிம்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர், அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்(பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் "கசப்பானது' அல்லது "அருவருப்பானது. அதன் வாடையும் வெறுப்பானது. (அறிவிப்பவர் : அபூமூசா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5059)


4.  எந்த ஒன்றிலும் நிலையில்லாதவன் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 5369)
  5.அன்சாரியை வெறுப்பார்கள் 
மதீனா முஸ்லிம்கள், இஸ்லாத்திற்கும், மக்காவிலிருந்து நாடு துறந்து வந்த முஹாஜிர் முஸ்லிம்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டி, உதவிகள் பல புரிந்ததால் அவர்களுக்கு அன்சார் என்ற பெயர் வரலாயிற்று. இவர்களை நேசிப்பது இறைநம்பிக்கையாளரின் பண்பு என்றும், அவர்களை வெறுப்பவர்கள் நயவஞ்சகர்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். (அறிவிப்பவர்: பராஉ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3783)
  நயவஞ்சகத்தின் குணங்கள் 
மக்களின் நன்மதிப்பை கெடுக்கும் முக்கியயமான மூன்று கெட்ட குணங்களும் நயவஞ்சகனிடம் இருக்கும்.
1.
பேசினால் பொய் பேசுவது
2.
வாக்களித்தால் மாறு செய்வது.
3.
நம்பி ஒப்படைத்தால் மோசடி செய்வது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 34)
 6. தொழுகையில் சோம்பேறித் தனம் 
  إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا
வழிபாடுகளில் மிகச் சிறந்ததும், உன்னதமானதும் மகத்துவமிக்கதுமான தொழுகை விஷயத்தில் நயவஞ்சகர்கள் சோம்ழ்றித் தனமாக கவனமில்லாமல் அசட்டையாக இருப்பார்கள். இறையச்சம் அவர்களிடம் சற்றும் காணப்படாது.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன்: 4:142)
அலாஉ பின் அப்திர் ரஹ்மான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்தி-ருந்த அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் லுஹ்ர் தொழுதுவிட்டுச் சென்றேன். -அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது- நாங்கள் அவர்களிடம் சென்றபோது "நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹ்ர் தொழுதுவிட்டு வருகிறோம்'' என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "அவ்வாறாயின் நீங்கள் அஸ்ர் தொழுங்கள்'' என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து)வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்'' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள். (நூல்: முஸ்லிம் 1097)
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேண்டுமென தாமதப்படுத்துவதையும், நிதானமின்றி அவசர அவசரமாகத் தொழுது முடிப்பதையும் இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள்.
  7.ஃபஜ்ர், இஷாத் தொழுகைள் தொழுவது மிகக் கடுமையாக இருக்கும் 
ஐவேளைத் தொழுகையில் ஃபஜ்ர், இஷாத் தொழுகையில் அலட்சியம் காட்டுவார்கள். இந்த தொழுகையில் அவர்களை காண்பது அரிதாக இருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகற்லுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 657)


 8.நல்லது செய்தால் கேலி செய்வார்கள் 
  الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ ۙ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

இறை நம்பிக்கையாளர்கள் மனமுவந்து அவருக்கு சக்திக்குப்பட்ட நன்மையான காரியங்களை செய்யும் போது நயவஞ்சகர்கள் இவர்களை கேலி செய்வார்கள்.
''
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கே-லி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு''. (அல்குர்ஆன் 9:79)
தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூ-வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், "(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவ ந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார்'' என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்கற்ல் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறை வழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ்
அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு'' எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. (அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் அல்அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4668)
  9.ஜிஹாதை விரும்ப மாட்டார்கள் 
  لَوْ كَانَ عَرَضًا قَرِيبًا وَسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوكَ وَلَٰكِن بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ ۚ وَسَيَحْلِفُونَ بِاللَّهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَاذِبُونَ : 
மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது, அந்த அநீதிக்கு எதிராக போராடும் போது உயிர் போய்விடுமோ என்று அஞ்சி அந்த போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தப்பித்துக் கொள்வார்கள்.
'''(
முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும், தூரமாகவும் இருந்தது. எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யரே என்பதை அல்லாஹ் அறிவான்.'' (அல்குர்ஆன் 9:42)
10.  கோள் மூட்டுவார்கள் 
நயவஞ்சகர்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் கோள் மூட்டவும், விரோதத்தை ஏற்படுத்தவும் மற்றும் குழப்பத்தை உண்டாக்கவும் தீவிரமாக முயற்சி செய்வார்கள். இறைநம்பிக்கையாளர்களில் சிலர் நயவஞ்சகனுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் பேச்சையும், வார்த்தைகளையும் நன்மையென கருதி அவர்களிடம் அறிவுரை கேட்பார்கள். ஆனால் நயவஞ்சகனின் உண்மை நிலையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கிடையே பெரும் குழப்பமும், கேடு ஏற்படுத்துவதற்குரிய வழிமுறையாகும்
. 7   لَوْ خَرَجُوا فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَوْضَعُوا خِلَالَكُمْ يَبْغُونَكُمُ الْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّاعُونَ لَهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

''
அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள் மூட்டியிருப்பார்கள். உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.'' (அல்குர்ஆன் 9:47)
      لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِن قَبْلُ وَقَلَّبُوا لَكَ الْأُمُورَ حَتَّىٰ جَاءَ الْحَقُّ وَظَهَرَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَارِهُونَ
''(முஹம்மதே!) முன்னரும் அவர்கள் குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும் அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது.'' (அல்குர்ஆன் 9:48)
11.கொடுத்தால் திருப்தியும், தரவில்லையென்றால் ஆத்திரப்படுவார்கள்
وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ فَإِنْ أُعْطُوا مِنْهَا رَضُوا وَإِن لَّمْ يُعْطَوْا مِنْهَا إِذَا هُمْ يَسْخَطُونَ
''தர்மங்களில் (அதைப் பங்கிடுவதில்) உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் உள்ளனர். அதில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றனர். அதில் அவர்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால் உடனே ஆத்திரம் கொள்கின்றனர்.'' (அல்குர்ஆன் 9:58)
நல்ல காரியமாக இருந்தாலும் தீய காரியமாக இருந்தாலும் பணம் என்றால் திருப்திக் கொள்வார்கள். இல்லையெனில் அதை குறைகூறி அல்லது தவிர்க்க முனைவார்கள்.
 12. கேலி செய்வார்கள் 
இறை நம்பிக்கையாளர்கள் தொழும் போது அல்லது குர்ஆன் ஒதும் போது அல்லது நற்செயல்களில் ஏதாவது ஒன்றை செய்யும் போது நயவஞ்சகர்கள் இவர்களின் நற்செயலை பார்த்து கேலி- செய்வார்கள். அல்லது விளையாட்டாக பேசுவார்கள்.
  وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ
அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி- செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக!'' (அல்குர்ஆன் 9:65)
13.  தீமையை ஏவி, நன்மை தடுப்பார்கள் 
   الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ
இறைநம்பிக்கையாளர்கள் நன்மை செய்யுமாறு ஏவுவார்கள். தீமை செய்யக் கூடாதெனத் தடுப்பார்கள். ஆனால் இந்த நயவஞ்சகர்களோ தீமையைச் செய்யுமாறு ஏவுவார்கள். நன்மையி-லிருந்து மக்களை தடுப்பார்கள்.
நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக்கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 9:67)
14.  தனக்கு சாதகமானதை ஏற்பார்கள் (சில விஷயங்களுக்கு கட்டுப்படுவார்கள்
நயவஞ்சகர்களுக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களை ஏற்பவர்களையும், அவர்களுக்கு பாதமாக இருந்தால் அதை எதிர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இறைவனின் கட்டளை, நல்ல விஷயங்கள் என்றெல்லாம் அவர்கள் கவனிக்க மாட்டார்கள்.
وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِي
''உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர்.'' (அல்குர்ஆன் 24:49)
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرِهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ ۖ وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ
''அல்லாஹ் அருளியதை யார் வெறுத்தார்களோ அவர்களிடம் "சில விஷயங்களில் உங்களுக்குக் கட்டுப்படுவோம்'' என்று இவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அவர்களின் இரகசியங்களை அல்லாஹ் அறிவான்.'' (அல்குர்ஆன் 47:26)
  15.சிறிய சலசலப்பை கேட்டால் தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் 
அவர்களின் தோற்றம் பார்ப்போரை வியப்படையச் செய்யும். ஆனால் சாதாரண பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு என்று நினைப்பார்கள். இவை நயவஞ்சகனின் குணமாகும்.
 وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ۚقَاتَلَهُمُ اللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ
''
(முஹம்மதே!) நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?.'' (அல்குர்ஆன் 63:4)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.'' (அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5643)
 16.சத்தியத்தைகேடயமாக்குவார்கள் 
வெளிதோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு அந்தரங்கத்தில் இறை மறுப்பாளர்களாக வாழ்வார்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் அத்தவறை மறைப்பதற்கு தாங்கள் செய்யும் சத்தியத்தை ஒரு கேடயமாக பயன்படுத்துவார்கள். அவர்கள் உண்மையில் மிகப் பெரிய பொய்யர்கள் ஆவார்கள்.
''
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.'' (அல்குர்ஆன்63:2)
நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்கற்ன் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், "அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று சொல்வதையும், மேலும், "நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரி-ருந்து நிச்சயம் வெற்யேற்றுவார்கள்" என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் சொல்-விட் டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, "நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை'' என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளீல் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது'' என்று தொடங்கி "ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்'' என்று முடியும் (63:1-8) வசனங்களை அருற்னான்.
 உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்கற்டம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, "ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸைத் பின் அர்கம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4901)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001